அரவக்குறிச்சி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரவக்குறிச்சி வட்டம் , தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அரவக்குறிச்சி உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் சின்னதாராபுரம் மற்றும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி என 3 உள்வட்டங்களும், 40 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகள் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 183,321 ஆகும். அதில் 90,669 ஆண்களும், 92,652 பெண்களும் உள்ளனர். 53,489 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 76.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.32% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 40,129 மற்றும் 35 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.98%, இசுலாமியர்கள் 19.47%, கிறித்தவர்கள் 1.43% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவக்குறிச்சி_வட்டம்&oldid=2957017" இலிருந்து மீள்விக்கப்பட்டது