நிலச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கலிபோர்னியா மாநில நெடுஞ்சாலையில் ஃபெர்குஸன் சரிவு

நிலச்சரிவு அல்லது மண்சரிவு என்பது ஒரு புவியியல் நிகழ்வு ஆகும், பெரும் பாறைத் துகள்கள் சிதைவடைந்து கீழே விழுதல் அல்லது சரிவடைவது நிலச்சரிவாகும். அல்லது பாறைகள் விழுதல், சாய்வுகள் மிகவும் ஆழமாக உருக்குலைதல், ஆழமற்ற குப்பைகள் பறத்தல் போன்ற பல்வேறுபட்ட தரை நகர்வுகளை உள்ளடக்குகிறது, இது தொலைகடல், கரையோரம் மற்றும் கடல் சுற்றுச்சூழல்களில் ஏற்படலாம். நிலச்சரிவு ஏற்படுவதற்கான முதன்மையான விசை புவியீர்ப்பு விசையாக இருந்தபோதும், உண்மையான சாய்வு உறுதித்தன்மையைப் பாதிக்கும் பிற காரணிகளும் உள்ளன. பொதுவாக, நிலச்சரிவு நிகழ்வதற்கு முன்னான நிலமைக் காரணிகள் தனித்துவமான மேற்பரப்புக்குக் கீழான நிலமைகளைக் கட்டமைக்கின்றன, இவை அந்த சாய்வு/பகுதி எளிதாக உருக்குலைவுக்கு உள்ளாகக் கூடியவாறு செய்கின்றன, அங்கே உண்மையான நிலச்சரிவு வெளிக்கொணரப்படுவதற்கு முன்னர் பெரும்பாலும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. 2013, மார்சு 21இல் வெளியான அறிவியலாளர் அறிக்கையில், தொலைவிலிருந்து நிலச்சரிவுகளைக் அவை ஏற்படுத்தும் ஆற்றலி உதவியுடன் கண்டறியும் முடிகிறது என வெளியிடப்பட்டுள்ளது[1].

நிலச்சரிவுகளுக்கான காரணங்கள்[தொகு]

பரியோ டைப்ஸ், போன்ஸ், பியூரெட்டோ ரிக்கோவில் மமேயஸ் நிலச்சரிவு, இது 100 க்கும் அதிகமான வீடுகளைப் புதைத்தது, அளவுக்கதிகமான மழை தேங்கியதால் ஏற்பட்டது, சில ஆதாரங்களின்படி மின்னலும் ஒரு காரணமாகியது.

சாய்வின் உறுதித்தன்மை அதன் உறுதியான நிலையிலிருந்து உறுதியற்ற நிலைக்கு மாறும்போது நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஏராளமான காரணிகள் ஒன்று சேர்ந்து அல்லது தனியாகச் செயற்படுவதன் மூலம் சாய்வின் உறுதித்தன்மையில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம். நிலச்சரிவுகளுக்கான இயற்கையான காரணிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

  • சாய்வை உறுதி குலைக்கச் செயற்படும் நிலக்கீழ்நீர் (துளைநீர்) அமுக்கம்
  • செங்குத்து தாவர அமைப்பு, மண் போஷணைப் பொருட்கள் மற்றும் மண் அமைப்பு ஆகியவற்றின் இழப்பு அல்லது இல்லாமை (எ.கா. காற்றுத்தீக்குப் பின்னர்)
  • ஆறுகள் அல்லது சமுத்திர அலைகளால் சாய்வின் முற்பகுதியில் மண்ணரிப்பு
  • பனி உருகுதல், பனிப்பாறைகள் உருகுதல், அல்லது கடும் மழைகள் காரணமாக திகட்டுநிலை அடைந்து சாய்வுகள் உருவாதல்
  • குறைவான உறுதிநிலையிலுள்ள சாய்வுகளுக்கு நிலநடுக்கங்கள் மேலும் சுமை சேர்த்தல்
  • நிலநடுக்கத்தால் உருவாக்கப்பட்ட நீர்மமாக்கல் சாய்வுகளை உறுதிகுலைத்தல் (ஹோப் ஸ்லைடைப் பார்க்கவும்)
  • எரிமலை வெடித்து கிளம்புதல்

மனித செய்ற்பாடுகளால் நிலச்சரிவுகள் மோசமாக்கப்படுகின்றன, மனித காரணிகளாவன:காடழித்தல், பயிர்ச்செய்கை மற்றும் கட்டுமானம், இவை ஏற்கெனவே உடையக்கூடிய சாஉவுகளை மேலும் உறுதிகுலைக்கின்றன

  • எந்திரங்கள் அல்லது போக்குவரத்தால் ஏற்படும் அதிர்வுகள்
  • குண்டு வெடிப்புகள்
  • மண்தோண்டும் வேலை, இது சாய்வின் வடிவத்தை மாற்றுகிறது அல்லது முன்பே இருக்கின்ற சாய்வில் புதிய சுமைகளை ஏற்படுத்துகிறது
  • ஆழமற்ற மண்களில், பாறைப்புதரை அடிப்பாறையுடன் கட்டி வைத்திருக்கும் ஆழமாக -வேரூன்ன்றிய தாவரத்தொகுதியை அகற்றல்
  • கட்டுமானம், விவசாய அல்லது வனப்பரிபாலன செயற்பாடுகள் (மரங்களை வெட்டுதல்), இவை மண்ணினூடாகச் செல்லும் நீரின் அளவை மாற்றுகின்றன
1950 இல் சுவீடனிலுள்ள சர்டேயில் நிலச்சரிவு.இது துரிதமான களிமண் சரிவு, ஒருவர் கொல்லப்பட்டார்.

நிலச்சரிவு வகைகள்[தொகு]

சிதைவுக்கூள ஓட்டம்[தொகு]

நீருடன் தெவிட்டுநிலையை அடையும் சாய்வுப் பொருள் சிதைவுக்கூள ஓட்டம் அல்லது சேற்றுப் பாய்ச்சலாக உருவாகலாம். இதனால் உருவாகும் பாறை மற்றும் சேற்று நீர்மக்குழம்பு, மரங்கள், வீடுகள் மற்றும் கார்களைப் பிடுங்கலாம், ஆகவே பாலங்கள் மற்றும் கால்வாய்கள் தடைப்படுவதால் அந்தப் பாதை நீளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

சிதைவுக்கூள ஓட்டமானது திடீர் வெள்ளப்பெருக்கு என பெரும்பாலும் தவறுதலாக எடுக்கப்படுகிறது, ஆனால் அவை முற்றுமுழுதாக வேறுபட்ட செயற்பாடுகளாகும்.

ஆல்பைன் பகுதிகளிலுள்ள சேற்று-சிதைவுக்கூள ஓட்டங்கள் அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன, பெரும்பாலும் மனித உயிர்களைப் பலிகொள்கிறது. சேற்று-சிதைவுக்கூள ஓட்டங்கள் சாய்வுடன் தொடர்பான காரணிகளால் தொடங்கலாம் மற்றும் மேலோட்டமான நிலச்சரிவுகள் அணைக்கட்டு ஓடைப் படுக்கைகளில் ஏற்படலாம், இதனால் தற்காலிக தண்ணீர்த்தடையை ஏற்படுத்தும். பறிமுதல் செய்யப்படுதல்கள் தோல்வியுறும்போது, பாய்கின்ற திணிவின் கனவளவின் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் "டாமினோ விளைவு" உருவாக்கப்படக்கூடும், இது ஓடைக் கால்வாயிலுள்ள சிதைவுக்கூளத்தை உறிஞ்சுகிறது. திண்ம-திரவ கலவையின் அடர்த்திகள் 2 டன்கள்/மீ³ வரைக்கும், வேகங்கள் 14 மீ/வி வரைக்கும் செல்லும் (சியர்லெ மற்றும் லுயினோ, 1998; அரட்டனோ, 2003). பொதுவாக இந்த செயற்பாடுகள், வண்டல்கள் சாலைகளில் தேங்குவதால் (பல கன மீட்டர்கள் முதல் நூற்றுக்கணக்கான கன மீட்டர்கள் வரை) மட்டுமன்றி சில சந்தர்ப்பங்களில் ஓடை கால்வாயைக் கடக்கும் பாலங்கள் அல்லது சாலைவழிகள் அல்லது புகையிரத பாதைகளை முற்றுமுழுதாக அகற்றிவிடுவதால் முதலில் மோசமான சாலைக் குறுக்கீடுகளை உண்டாக்கும். சேற்று-சிதைவுக்கூள ஓட்டங்களை குறைத்து மதிப்பிடுவது காரணமாகவே பொதுவாக சேதங்கள் வருவிக்கப்படுகின்றன: ஆல்பைன் பள்ளத்தாக்குகளில், எடுத்துக்காட்டாக, ஓட்டத்தினால் ஏற்படுத்தப்படும் விசையால் பாலங்கள் அடிக்கடி சேதமாக்கப்படுகின்றன, ஏனென்றால் பொதுவாக அவற்றின் நீட்டம் தண்ணீர் வெளியேற்றத்துக்கு மட்டுமே கணிக்கப்படுகின்றன. சிதைவுக்கூள ஓட்டத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலியன் ஆல்ப்ஸிலுள்ள ஒரு சிறிய பகுதியில் (பரப்பளவு= 1.76 கி.மீ²), முதன்மைக் கால்வாயின் மத்திய நீட்டத்தில் அமைந்துள்ள பகுதிக்கு, 750 மீ3/வி உச்ச வெளியேற்றம் இருக்கும் என சியர்லே மற்றும் லுயினோ (1998)[சான்று தேவை] கணிப்பிட்டார்கள். அதே குறுக்குவெட்டு பகுதியில், எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்ச நீர் வெளியேற்றம் (HEC-௧ ஆல்), 19 மீ³/வி ஆக இருந்தது, ஏற்பட்டிருந்த சிதைவுக்கூள ஓட்டத்துக்காக கணிப்பிட்டதுடன் ஒப்பிடும்போது சுமார் 40 மடங்கு குறைவான மதிப்பாகும்.

மண் குழைவோட்டம்[தொகு]

மெக்சிகோ, குவரெராவில் பாறைச் சரிவு.

மண் குழைவோட்டங்கள் என்பது தெவிட்டுநிலையடைந்த, தூளாக்கப்பட்ட பொருள்கள் கீழ்நோக்கியசாய்வில், பாகுநிலையான ஓட்டங்களாகும், இது குறைந்த வேகத்திலிருந்து அதிகூடிய வேகம்வரையில் நகரும். வழக்கமாக அவை 0.17 முதல் 20 கி.மீ/ம வரையான வேகத்தில் நகரக்கூடியன. இவை பெரும்பாலும் சேற்றுப் பாய்ச்சல்கள் போல இருப்பினும், ஒட்டுமொத்தத்தில் அவை மெதுவாக நகர்கின்றன, அவற்றுக்குள்ளிருந்து பாய்ச்சலினால் சேர்ந்து எடுத்துவரப்படுகின்ற திண்ம பொருட்களுடன் மூடப்பட்டிருக்கும். அவை திரவப் பாய்ச்சல்களிலிருந்து வேறுபட்டவை, அதில் அவை மிகவும் வேகமானவை. களிமண், நுண் மணல் மற்றும் வண்டல், மற்றும் பொடியாக்கப்பட்ட, எரிமலையிலிருந்து வெளிவந்த பொருள் ஆகியவை மண் குழைவோட்டங்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. மண் குழைவோட்டத்தின் வேகமானது அந்த ஓட்டத்திலுள்ள நீரில் அளவின் தங்கியுள்ளது: ஓட்டத்தில் அதிக நீர் உள்ளடக்கம் இருந்தால் வேகமும் கூடுதலாக இருக்கும்.

பொருளின் போதியளவு எடை துளை நீரால் குறிப்பிடத்தக்களவுக்கு, பொருளின் அக வெட்டுதல் வலிமைக் குறைப்பை ஆதரிக்கும்வரை தூளாக்கப்பட்ட திணிவிலுள்ள துளை அமுக்கங்கள் அதிகரிக்கும்போது இந்த ஓட்டங்கள் வழக்கமாக தொடங்குகின்றன. இதனால் இது வீங்குகின்ற ஒரு சோணையை உருவாக்குகிறது, இது மெதுவான, உருளுன் அசைவுடன் முன்னேறுகிறது. இந்த சோணைகள் பரவும்போது, திணிவின் வடிமானம் அதிகரிக்கிறது, ஓரங்கள் உலர்கின்றன, இதனல் ஓட்டத்தின் ஒட்டுமொத்த வேகம் குறைகிறது. இந்த செயற்பாடு ஓட்டத்தை தடிப்பாக்குகிறது. மண் குழைவோட்டங்களின் குமிழ்ந்த வகையானது கண்ணைக்கவரக்கூடியது அல்ல, ஆனால் அந்த வகையின் வேகமான ஓட்டங்களை விட அதிக சாதாரணமானவை. தனது முன்செல்லல்களில் அவை ஒரு தொய்வை ஏற்படுத்தும் மற்றும் அவை வழக்கமாக மூலத்தின் வீழ்ச்சியிலிருந்து வருவிக்கப்படுகின்றன.

மண் குழைவோட்டங்கள் அதிகமான மழைவீழ்ச்சிக் காலங்களில் ஏற்படுகின்றன, மழை தரையை தெவிட்டுநிலைக்குக் கொண்டுவந்து சாய்வு உள்ளடக்கத்துக்கு நீரைச் சேர்க்கிறது. களிமண் போன்ற பதார்த்தங்கள் நகரும்போது உருவாக்கப்படும் விரிசல்கள் மண் குழைவோட்டங்களுள் தண்ணீர் ஊடுருவச் செய்யும். பின்னன் இத்தண்ணீரானது துளை நீர் அமுக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் பொருளின் வெட்டுதல் வலிமையைக் குறைக்கிறது.[2]

சிதைவுக்கூள பனிச்சறுக்கல்[தொகு]

கூடெல் கிரீக் டெப்ரிஸ் அவலான்சி, WA.

சிதைவுக்கூள பனிச்சறுக்கல் என்பது சரிவின் ஒரு வகை, இது பாறைகள் மண் மற்றும் சிதைவுக்கூள ஆகியவை நீர் அல்லது பனிக்கட்டியுடன் (அல்லது இரண்டுடனும்) கலந்து ஒருங்கற்ற விதத்தில் நகர்ந்து செல்லும் பண்புள்ளது. அடர்த்தியாக தாவரங்கள் வளர்ந்துள்ள சரிவுகளின் தெவிட்டுநிலையால் இவை பொதுவாக மேலும் மோசமாக்கப்படுகின்றன, இதனால் உடைந்த மரம், சிறிய தாவரங்கள் மற்றும் பிற சிதைவுக்கூளம் போன்ற ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஒரு சேர்க்கையை விளைவிக்கிறது.[3] சிதைவுக்கூள பனிச்சறுக்கல்கள் சிதைவுக்கூள சரிவுகளிலிருந்து வேற்படுகின்றன, ஏனெனில் இவற்றின் நகர்வு மிக மிக வேகமானதாக இருக்கின்றது. இது பொதுவாக குறைந்த ஓட்டுந்தன்மை அல்லது உயர்ந்த நீர் உள்ளடக்கம் மற்றும் நிலைக்குத்தான சாய்வுகளால் ஏற்படுகிறது.

நகர்வு

சிதைவுக்கூள சரிவுகள் பொதுவாக பெரிய தொகுதிகளாகத் தொடங்கும், அவை சரிவின் மேற்பாகத்தில் வீழும், பின்னர் அவரி முன்பாகம் நோக்கி நகர்வதால் உடைகின்றன. இந்த செயல்பாடானது சிதைவுக்கூள பனிச்சறுக்கலைவிட மிகவும் மெதுவானது. சிதைவுக்கூள பனிச்சறுக்கலில் இந்த தீவிரமாகிவரும் சிதைவுறுதல் மிகவும் வேகமானது, மற்றும் இது சாய்வில் கீழ்நோக்கி நகரும்போது முழு திணிவும் சிறிதளவு திரவமாகுவது போல தோன்றுகிறது. பதார்த்தமானது அளவுக்கதிகமான தெவிட்டுநிலை அடைதல் மற்றும் மிகவும் செங்குத்தான சாய்வுகள் ஆகியவற்றின் கூட்டாக இது ஏற்படுத்தப்படுகிறது. சாய்வில் கீழ்நோக்கி திண்மம் நகரும்போது, இது பொதுவாக ஓடைக் கால்வாய்களையே பின்பற்றுகின்றன, பின்பக்கத்தில் V-வடிவமான வடுவை விட்டுச்செல்கின்றது, இது மலையில் கீழ்நோக்கிப் பரவுகிறது. இது வீழ்ச்சியின் கூடியளவில் U-வடிவமாக இருக்கும் வடுவிலிருந்து வேறுபடுகிறது. சிதைவுக்கூள பனிச்சறுக்கல்கள் அவற்றின் அதிசக்திவாய்ந்த வேகம் காரணமாக சாய்வின் அடியைத் தாண்டியும் பயணிக்கக்கூடியது.[4]

சன் மேடியோ பிராந்தியத்தில் "வீழ்ச்சி" நிலச்சரிவு, ஜனவரி 1997

ஸ்டர்ஸ்ட்ராம்[தொகு]

ஸ்டர்ஸ்ட்ராம் அரிதானது, சரியாக விளங்கிக்கொள்ளப்படாத நிலச்சரிவு வகை, பொதுவாக நீண்டகால உருக்குலைவை ஏற்படுத்தும். அடிக்கடி மிகப் பெரிய, இந்த சரிவுகள் வழக்கமாக நகர்பவை, குறைந்த கோண, தட்டையான் அல்லது சிறிதளவு கடினமான நிலத்தோற்றத்தின் மேலாக மிகவும் தூரத்துக்குப் பாய்கின்றன.

மேலோட்டமான நிலச்சரிவு[தொகு]

: கார்டா லேக்கிலுள்ள ஹோட்டல் லிமோன். டெவானியன் படிவுப் பாறையின் குன்றுப் பகுதி சாலை அமைப்பதற்காக நீக்கப்பட்டது, சரிவு-சாய்வு உருவாகிறது.மேற்பகுதி படுக்கைத் தளத்துடன் சேர்த்துப் பிரிக்கப்பட்டது, குன்றிலிருந்து கீழ்நோக்கி வழுக்குகின்றது, சரிவின் முற்பாகத்தில் குழப்பமான தூணை உருவாக்குகிறது.

இந்த நிலச்சரிவில் சரிகின்ற மேற்பரப்பானது மண் கவசம் அல்லது வானிலையால் சேதமான பாறைப்படுக்கையினுள் அமைந்திருக்கும் (பொதுவாக சில செண்டிமீட்டர்கள் முதல் சில மீட்டர்கள் வரையான ஆழத்துக்கு). இவை வழக்கமாக சிதைவுக்கூள சரிவுகள், சிதைவுக்கூள பாய்ச்சல் மற்றும் சாலையில் வெட்டப்பட்ட சாய்வுகளின் சிதைவுகளை உள்ளடக்குகின்றன. கீழ்நோக்கிய சாய்வுகளில் மெதுவாக நகர்ந்துவருகின்ற தனித்த பெரிய பாறைகளாக நிகழ்கின்ற நிலச்சரிவுகளைச் சில வேளைகளில் கட்டைக்கல் உருளல்கள் என அழைக்கப்படுகின்றன.

குறைவாக ஊடுருவக்கூடிய அடி மண்களின் மேற்பகுதியில் அதிகமாக ஊருவ அனுமதிக்கும் மண்களைக் கொண்டுள்ள சாய்வுகளைக் கொண்டுள்ள பகுதிகளில் மேலோட்டமான நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படலாம். குறைவாக ஊடுருவ அனுமதிக்கக்கூடிய, அடி மண்கள் மேற்பகுதியிலேயே நீரைப் பிடிக்கின்றன, அதிகமாக ஊடுவக்கூடிய தன்மையான மண்கள் மேல்மண்களில் உயர் நீர் அமுக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேல் மண்கள் நீரால் நிரப்பப்பட்டதும், அவை எடை கூடுகின்றன, சாய்வுகள் மிகவும் உறுதியற்றவை ஆகி, குறைவாக ஊடுருவ அனுமதிக்கும் அடி மண்களின் மேலாக சரிகின்றன. அவ்விடத்தில் மணல் மற்றும் வண்டல் மண்ணும் இதன் மேல் மண்ணாகவும், பாறைப் படுக்கை அதன் அடி மண்ணாகவும் இருக்கும் ஒரு சாய்வு உள்ளது என்று சொல்லுங்கள். முனைப்பான மழைகாற்றின்போது, பாறைப்படுக்கையானது வண்டல் மற்றும் மணலின் மேல் மண்களில் மழையைப் பற்றி வைத்துக்கொள்ளும். மேல் மண் தெவிட்டுநிலையாகி எடை அதிக்கரிக்க, இது பாறைப்படுக்கை மேலாக சரியத் தொடங்கி மேலோட்டமான நிலச்சரிவு உருவாகும். ஆர். ஹெச். காம்ப்பெல், சாண்டா கிரஸ் ஐலேண்ட் கலிபோர்னியாவில் மேலோட்டமான நிலச்சரிவுகள் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டார். ஊடுருவவிடும்தன்மை ஆழத்துடன் குறைந்துசென்றால், தீவிரமான மழையின்போது, தாங்கப்பட்ட நீர்ப்பரப்பு ஒன்று மண்களில் உருவாகக்கூடும் என்று அவர் குறிப்பிடுகிறார். திறனான சாதாரண அழுத்தத்தை மாறுநிலை மட்டத்துக்குக் குறைக்க போதியவையாக துளை நீர் அமுக்கங்கள் இருக்கும்போது, உருக்குலைவு ஏற்படும்.[5]

ஆழ ஊன்றிய நிலச்சரிவு[தொகு]

பாகிஸ்தானில் மண் மற்றும் பறைப்படிவு நிலச்சரிவு.

மரங்கள் வேரூன்றக்கூடிய அதிகபட்ச ஆழத்தைவிட மிகவும் கீழே அமைந்துள்ள பகுதியில் சரிவுறும் பரப்புக் காணப்படுகின்ற நிலச்சரிவுகளாகும் (வழக்கமாக 10 மீட்டர்களுக்கு அதிகமான ஆழங்களில்). ஆழ ஊன்றிய நிலச்சரிவுகள் வழக்கமாக ஆழமான மேற்பரப்பு அடுக்கு, வானிலையால் சேதமான பாறை, மற்றும்/அல்லது பாறைப்படுக்கை ஆகியவற்றில் ஈடுபடுகின்றன, மேலும் பெயர்ச்சியடையக்கூடிய, சுழற்சியான அல்லது சிக்கலான நகர்வுடன் தொடர்பான பெரிய சாய்வு உருக்குலைதலை உள்ளடக்கும்.

சுனாமியை ஏற்படுத்துதல்[தொகு]

கடலுக்குகீழ் நடக்கும் அல்லது தண்ணீருக்குள் விளைவைக் கொண்டுள்ள நிலச்சரிவுகள் சுனாமிகளை உருவாக்கக்கூடியன. மிகப்பெரிய நிலச்சரிவுகள் மெகாசுனாமிகளையும் ஏற்படுத்தக்கூடியன, இவை பொதுவாக நூற்றுக்கணக்கான மீட்டர்கள் உயரமானவை. 1958 இல், இதுபோன்ற சுனாமி அலாஸ்காவிலுள்ள லிதுயா வளைகுடாவில் நிகழ்ந்தது.

தொடர்பான நிகழ்வுகள்[தொகு]

  • பனிச்சரிவு, நிலச்சரிவின் பொறிமுறையை ஒத்தது, இதில் மலைப்பக்கத்தில் கீழ்நோக்கி துரிதமாக பெருமளவான ஐஸ், பனிகட்டி மற்றும் பாறை ஆகியன விழுகின்றன.
  • எரிமலைக்குழம்பு பாய்ச்சல் என்பது எரிமலை வெடிப்பதால் வெளிவருகின்ற சூடான சாம்பல், வாயு மற்றும் பாறைகள் ஆகியவற்றின் குழம்பிய கூட்டத்தால் உருவாக்கப்படுகிறது, இது வெடித்துச் சிதறுகின்ற எரிமலையிலிருந்து வேகமாக கீழ்நோக்கி ஓடுகின்றன.

நிலச்சரிவை எதிர்வுகூறும் படவரைவு[தொகு]

உலகளாவிய நிலச்சரிவு அபாயங்கள்.

நிலச்சரிவு தீங்கு ஆய்வும் படவரைவும், பெருங்கேடுதருகின்ற இழப்பைக் குறைப்பதற்குத் தேவைப்படும் பயனுள்ள தகவல்களை வழங்கக்கூடியன, அதோடு நிலையான நிலப்பயன்பாட்டுத் திட்டங்களுக்கான வழிகாட்டிகளின் உருவாக்கத்திலும் உதவுகின்றன. இந்த ஆய்வானது, நிலச்சரிவுகளுடன் தொடர்பான காரணிகளை அடையாளம் காணுவதற்கும், சாய்வு உருக்குலைவுகளைத் தோற்றுவிக்கும் காரணிகளுக்கான ஒப்பீட்டு பங்களிப்பை கணிப்பிடவும், காரணிகளுக்கும் நிலச்சரிவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை உருவாக்கவும், அந்த தொடர்புகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய நிலச்சரிவு தீங்கை முன்கூட்டியே கண்டறியவும் பயன்படுத்தப்படுகின்றது[6]. நிலச்சரிவு தீங்கு ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட காரணிகளை, பொதுவாக புவிஉருவவியல், புவியியல், நில பயன்/நில போர்வை மற்றும் நீர்நிலைப்புவியியல் என்ற வகைகளில் குழுவாக்கலாம்[7]. நிலச்சரிவு தீங்கு படவரைவில் பல காரணிகள் கருத்தில் எடுக்கப்படுவதால், GIS ஒரு பொருத்தமான கருவியாகும், ஏனெனில் இது தொகுப்பு, சேமிப்பு, செய்கைமுறை, காட்சிப்படுத்தல் மற்றும் வேகமாகவும், திறனாகவும் கையாளக்கூடிய பல இடங்களையும் குறிப்பிடும் பெருந்தொகையான தரவுகளின் ஆய்வு ஆகியவற்றின் சார்புகளைக் கொண்டுள்ளது[8]. தொலைநிலை உணர்தல் நுட்பங்களும் நிலச்சரிவு தீங்கு மதிப்பீடு மற்றும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிய உதவுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பரவல் மற்றும் வகைப்படுத்தல் போன்ற நிலச்சரிவு இயல்புகளையும், சாய்வு, பாறை அமைப்பு மற்றும் நிலப் பயன்/நிலப் போர்வை போன்ற காரணிகளையும் சேகரிக்க, நிலச்சரிவுக்கு முன்னரும் பின்னருமான வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்பட்டன[9]. நிலச்சரிவுக்கு முன்னரும் பின்னருமான படம், ஒரு நிகழ்வுக்குப் பின்னர் நிலச்சரிவு எவ்வாறு மாறியது, நிலச்சரிவை அதிகப்படுத்தியவை எவையாக இருக்கக்கூடும் ஆகியவற்றைக் கண்டறியவும் உதவுகிறது, மேலும் மீளுருவாக்கம் மற்றும் மீட்சிபெறல் செயற்பாடுகளையும் காண்பிக்கிறது[10].

GIS மற்றும் சம்பவ இட ஆய்வுகளுடன் சேர்ந்து செயற்கைக்கோள் படத்தைப் பயன்படுத்தி இதேபோல எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றின் வரைபுகளை உருவாக்குதல் சாத்தியமானது[11]. இதுபோன்ற வரைபுகள் முந்தைய நிகழ்வுகளில் இருப்பிடங்களைக் காண்பிப்பதோடு, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இடங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சாதாரணமாக, நிலச்சரிவுகளை முன்பே எதிர்வு கூறுவதற்கு, அவை சில குறித்த புயியல் காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் எதிர்கால நிலச்சரிவுகளும் கடந்த கால நிகழ்வுகள் ஏற்பட்ட அதே நிலமைகளின் கீழேயே நடக்கும் என்பதையும் ஒருவர் அனுமானம் செய்தல் அவசியம்[12]. ஆதலால், கடந்தகால நிகழ்வு நடந்த புவிஉருவவியல் நிலமைகளுக்கும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால நிலமைகளுக்கும் இடையே ஒரு தொடர்பை உருவாக்குதல் அவசியம்[13].

இயற்கை அனர்த்தங்கள் என்பவை சுற்றுச்சூழலுடன் பிணக்கிலேயே மக்கள் வாழ்கிறார்கள் என்பதற்கான நாடகம் சார்ந்த ஒரு எடுத்துக்காட்டாகும். சொத்துச் சேதத்தையும், உயிர்கள் பலிவாங்கப்படுவதையும் குறைப்பதற்காக முன்கூட்டிய எதிர்வுகூறல்களும் எச்சரிக்கைகளும் அவசியமானவை. ஏனெனில், நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன, புவியில் அதிகூடிய அழிவை ஏற்படுத்துகின்ற சில விசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியன, அவற்றை உருவாக்குவது என்ன, அவை நிகழாமல் தடுப்பதில் அல்லது அவை நிகழும்போது எளிதாக அவற்றைத் தவிர்ப்பதில் மக்கள் எவ்வாறு உதவலாம் போன்றவை பற்றிய சிறந்த புரிந்துணர்தல் இருக்கவேண்டியது கட்டாயமாகும். நிலச்சரிவுகளால் உணரப்பட்ட எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதற்கு நிலையான நில மேலாண்மை மற்றும் அபிவிருத்தி என்பது முக்கியமான திறவுகோலாகும்.

நிலச்சரிவு ஆய்வுக்கான மேன்மையான செய்முறையை GIS வழங்குகிறது, ஏனென்றால் ஒருவர் மிகப்பெரிய அளவான தரவுகளை வேகமாகவும் திறனாகவும் சேகரிக்க, சேமிக்க, கையாள, ஆராய, மற்றும் காட்சிப்படுத்துவதற்கு இது அனுமதிக்கிறது. பல மாறிகள் ஈடுபடுவதன் காரணமாக, புவியின் மேற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதன் முழுமையான, துல்லியமான சித்தரிப்பை உருவாக்க தரவுகளில் பல அடுக்குகளை மேல்வைக்க முடியுமாக இருத்தல் முக்கியமாகும். எந்தவொரு இருப்பிடத்திலும் நிலச்சரிவுகளைத் தூண்டிவிடும் மிக முக்கியமான காரணிகளின் மாறிகளை ஆராய்ச்சியாளர்கள் அறிய வேண்டும். GIS ஐப் பயன்படுத்தி, கடந்தகால நிகழ்வுகளையும், அதேபோன்ற எதிர்கால நிகழ்வுகளையும் காண்பிக்க மிகச்சிறப்பாக விளக்கப்பட்ட வரைபடங்களை உருவாக்கலாம், இதனால் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை சேமிக்கப்படும் சாத்தியமுண்டு.

வரலாற்றுக்கு முந்தைய நிலச்சரிவுகள்[தொகு]

கனடா, பிரித்தானிய கொலம்பியாவில் ஹோப் சரிவு.
  • அஹுல்ஹாஸ் சரிவு, ca. 20,000 கி.மீ³, தென்னாபிரிக்காவுக்கு அப்பால், பிளியோசீன் காலத்துக்கு பிந்தியது, இதுவரைக்கும் விவரிக்கப்பட்டதில் மிகவும் பெரியது[14]
  • ஸ்டாரிக்கா சரிவு, நார்வே, ca. 3,500 கி.மீ³, ca. 8,000 ஆண்டுகளுக்கு முன்னர்
  • ருவாஸ்டோரியா சிதைவுக்கூள பனிச்சறுக்கல், வட தீவு நியுசிலாந்துக்கு அப்பால், ca. 3,000 கி.மீ³ கொள்ளளவு, 170,000 ஆண்டுகளுக்கு முன்னர் [1] பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்.
  • கி.மு 200 அளவில் நடந்த நிலச்சரிவு நியூசீலாந்தின் வட தீவில் லேக் வைக்கரமொவனவை உருவாக்கியது, இங்கே கமோகோ ரேஞ்சின் பெரிய தொகுதி சரிந்தது, கமோகோ மற்றும் பனேகிரிக்கிடையில் வைக்கரடஹெகி ஆற்றின் ஆழ்பள்ளத்தாக்கை அணையிட்டது, 248 மீட்டர் ஆழமான இயற்கையான நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கியது.
  • நிலச்சரிவு ஹார்ட் மலையை இதன் இப்போதைய இருப்பிடம் பார்க் பிராந்தியம், வயோமிங் பகுதிக்கு நகர்த்தியது, பூமியில் நடந்த நிலச்சரிவிலேயே பெரியது.

வரலாற்று நிலச்சரிவுகள்[தொகு]

19 ஆம் நூற்றாண்டு[தொகு]

  • 24 டிசம்பர் 1839 இல், லைம் ரெஜிஸ், டார்செட், இங்கிலாந்துக்கு அருகிலுள்ள அண்டர்கிளிஃப்கிளிஃப்மண்சரிவு
  • செப்டம்பர் 19, 1889 இல் த கப் டயமண்ட் கியூபெக் பாறைச்சரிவு

20 ஆம் நூற்றாண்டு[தொகு]

  • 29 ஏப்ரல் 1903 இல் ஃபிராங் சரிவு, டர்டைல் மலை, அல்பேர்டா, கனடா
  • ஆகஸ்ட், 1910 இல் சைடமா, ஜப்பானில் டோகிகவா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • மார்ச் 1924 இல், சலெர்னா, இத்தாலியில் அமாலி நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூன் 23, 1925 இல், வயாமிங், அமெரிக்காவில் க்ராஸ் வெண்ட்ர நிலச்சரிவு
  • Mount Serrat நிலச்சரிவு in Santos, Brazil on March 1928. [சான்று தேவை]
  • ஜூலை 1930 இல், தென்கொரியா, டயெகுவின் புறநகரத்தில் டால்சியாங் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • பிப்ரவரி 1932 இல், பெருவில் ரிகார்டா கால்மா நிலச்சரிவு [சான்று தேவை]
  • மார்ச் 1933 இல் பெருவில் டண்டடே நிலச்சரிவு [சான்று தேவை]
  • மே 1934 இல், ஷாவோகுவான், குவாங்டாங், சீனாவில் லாக்சாங் (இப்போதைய லெசாங்) நிலச்சரிவு [சான்று தேவை]
  • நவம்பர் 1937 இல், குன்மா, ஜப்பானில் கோகுஷி சல்பர் சுரங்கம் சேதமாகியதில் சுமாகொய் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1938 இல், பலத்த மழையால் கோப், ஹையொகோ, ஜப்பானில் மவுண்ட் ராக்கோ நிலச்சரிவு. [சான்று தேவை]
  • நவம்பர் 1941 இல், பொயகா கொலம்பியாவில், மொங்குயி கிராம நிலச்சரிவு. [சான்று தேவை]
  • டிசம்பர் 1945 இல் அல்பசிட், ஸ்பெயினில் அல்கல டெல் ஜுகர் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • செப்டம்பர் 1948 இல் அசாம், இந்தியாவில் குவஹடி நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 10, 1949 இல், கைட் நிலச்சரிவு, கைட், தஜிகிஸ்தான், சோவியத் ஒன்றியம்.
  • ஜனவரி 1951 இல் அன்காஷ், பெருவில் கண்டர் ஹில் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • அக்டோபர் 1954 இல் ஹைட்டியில் ஹஸல் சூறாவளியால் மபௌ நிலச்சரிவு. [சான்று தேவை]
  • அக்டோபர் 1954 இல், சேலர்னா, இத்தாலியில் மொலினா டி வியட்ரி மற்றும் பாண்டே ரோமனோ நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஏப்ரல் 1955 இல், 0}நாகசாகி, கையுஷுவிலுள்ள அபே நிலக்கரிச் சுரங்கம் மற்றும் படுக்கைத் தளத்தில் சசெபோ நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூன் 1958 இல் மெகலயா, இந்தியாவில் ஷிலாங் நிலச்சரிவு [சான்று தேவை]
  • 22 மே 1960 இல், சிலியில் கிரேட் சிலியன் நிலநடுக்கத்தின் பின்னர் ரினிஹுவஸோ நிலச்சரிவு
  • ஏப்ரல் 1961 இல் குரனிவ்கா, உக்ரெய்னில் பாபி யார் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜனவரி 1962 இல் பெருவில் ரன்ரஹிட்கா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1962 இல், கியுஷு, ஜப்பானில் டாரா நிலச்சரிவு.
  • மார்ச் 1963 இல், பெருவில் டம்பயக்டா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூன் 1963 இல் கோஜே தீவு, தென்கொரியாவில் சாங்சுங்போ கிராம நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஆகஸ்ட் 1963 இல், கோர்கா மாவட்டம், நேபாளத்தில் செப்பெ காட் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • அக்டோபர் 9, 1963 இல், மாண்டே டாக் நிலச்சரிவு (260 மில்லியன் கன மீட்டர்கள்) இத்தாலி, வாஜாண்ட் அணை பகுதிக்குள் விழுந்தது, மெகாசுனாமி தோன்றியது, சுமார் 2000 மரணங்கள்.
  • ஜனவரி 9, 1965 இல், ஹோப், பிரித்தானிய கொலம்பியா அருகில் ஹோப் சரிவு நிலச்சரிவு (46 மில்லியன் கன மீட்டர்கள்).[15]
  • பிப்ரவரி 1965 இல், அடகாமா, சிலியில் எல் சால்டாடா காப்பா சுரங்கம் சேதமாகியதுடன் எல் காப்ரே நிலச்சரிவு. [சான்று தேவை]
  • 1966 அபர்ஃபேன் அனர்த்தம்
  • பிப்ரவரி 1967 இல், ரியோ மாநிலம், பிரேசிலில் சண்டா ரெரசா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • மார்ச் 1967 இல், சவொ பௌலோ மாநிலம், பிரேசிலில் கரகுவடடுபா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1967 இல், ஹிரோஷிமா, ஜப்பானில் பிலீ சூறாவளியால் குரே நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஆகஸ்ட் 1968 இல், கெரா, கிஃபு, ஜப்பானில், வாடகைக்கு அமர்த்தப்பட்ட இரண்டு பஸ்கள் மூழ்கியதுடன் ஹிடா ஆறு/0} நிலச்சரிவு. [சான்று தேவை]
  • அக்டோபர் 1968 இல், மேற்கு வங்காளத்தில் டர்ஜீலிங் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஆகஸ்ட் 1969 இல், வர்ஜீனியாவில் காமிலே சூறாவளியால் ஆம்ஹர்ஸ்ட் மற்றும் நெல்சன் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • மே 31, 1970 இல், செரோ ஹுவஸ்கரனினிலிருந்து சரிவு, இது யுங்கே நகரத்தைப் புதைத்தது.
  • டிசம்பர் 1970 இல், கால்டஸ், கொலம்பியாவில் கௌகா பள்ளத்தாக்கு நிலச்சரிவு [சான்று தேவை]
  • மார்ச் 1971 இல், பெருவில் ஏற்பட்ட பனிச்சரிவால் சுங்கார் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • செயிண்ட்-ஜீன்-வியனே, கியூபெக், கனடா. மே 1971 இல், சகுவனாய் ஆற்றுக்கு அருகிலுள்ள சிறிய கிராமம் அழிந்தது.[16]
  • ஜூலை 1971 இல், பாகியன், ஆஃப்கானிஸ்தானில் கின்ஞான் பாஸ் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1972 இல், ஷிகோகு, ஜப்பானில் டோசயமடா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1972, குமமொடோ, கியுஷு, ஜப்பானில் அமகுசா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஏப்ரல் 1974 இல், ஹுவகயோ, பெருவில் மோயோமர்கா மலைச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூன் 1974 இல், பொயகா, கொலம்பியாவில், 33 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு குவப்ரடப்லாங்கா பனிச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூன் 1976 இல், நேபாளத்தில் பஹிரே ஃபெடி நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1976 இல், ஐரியன் ஜயா, இந்தோனேஷியாவில் 1976 பபுவா நிலநடுக்கம் காரணமாக பாலியம் பள்ளத்தாக்கு நிலச்சரிவு. [சான்று தேவை]
  • நவம்பர் 1978 இல், தமிழ் நாடு, இந்தியாவில் நீலகிரி மலைகள் நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஆகஸ்ட் 8, 1979 இல், 1979 அப்பாட்ஸ்ஃபார்ட் மண்சரிவு, டுனேடின், நியூசிலாந்து.
  • மே 18, 1980 இல், மவுண்ட் செண்ட். ஹெலன்ஸ் வெடிப்புடன் தொடர்பான நிலச்சரிவுகள்.
  • ஆகஸ்ட் 1981 இல், கிழக்கு ஜாவா, இந்தோனேஷியாவில், கடும் மழை காரணமக மவுண்ட் செமிரு நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜூலை 1982 இல், நாகசாகி, கியுஷு, ஜப்பானில் நாகாஜிமா நிலச்சரிவு [சான்று தேவை]
  • செப்டம்பர் 1982 இல், எல் சல்வடோர் அடகோ நிலச்சரிவு [சான்று தேவை]
  • மார்ச் 1983 இல், கன்சு, சீனாவில் டாங்ஸிங் நிலச்சரிவு [சான்று தேவை]
  • 14 ஏப்ரல் 1983 இல், திஸ்டில், அட்டா
  • ஏப்ரல் 1983 இல், சிம்பராஸோ, ஈக்குவடாரில் சுஞ்சி நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜூலை 1983 இல், உத்தர பிரதேசம், இந்தியாவில் அல்மோரா நிலச்சரிவு [சான்று தேவை]
  • மே 1984 இல், யுனான், சீனாவில் டாங்சுவன் நிலச்சரிவு [சான்று தேவை]
  • அக்டோபர் 7, 1985 இல், மமேயஸ் அனர்த்தம் - போன்ஸ், பியூரெட்டோ ரிக்கோ
  • வால்ட்டலினா அனர்த்தத்தின்போது வல் பொல நிலச்சரிவு (1987) இத்தாலி
  • செப்டம்பர் 1987 இல், அரகுவா, வெனிசூலாவில் எல் லைமன் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • செப்டம்பர் 1987 இல், கொலம்பியாவில் வில்லடினா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • செப்டம்பர் 1987 இல், சிசுவன், சீனாவில் வுக்ஸி பிராந்திய நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூன் 1988 இல், ட்ராப்ஸன், துருக்கியில் மக்கா நிலச்சரிவு [சான்று தேவை]
  • செப்டம்பர் 1988 இல், மியாக்டி, நேபாளத்தில் டார்வங் மற்றும் நிஸ்காட் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜனவரி 1989 இல், ஹைசர் மாவட்டம், தஜிகிஸ்தானில் 1989 தஜிகிஸ்தான் நிலநடுக்கத்தால் ஷரோரா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஏப்ரல் 1989 இல், ஜார்ஜியாவில் சப்லங்கா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1989 இல், மஹாராஷ்டிரா, இந்தியாவில் பாஜி நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜூன் 1991 இல், அடாகம, சிலியில் கலமா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • செப்டம்பர் 1991 இல், யுன்னன், சீனாவில் பேய் மழையால் சவோடாங் நிலச்சரிவு [சான்று தேவை]
  • செப்டம்பர் 1992 இல், ஜெஜிஜாங், சீனாவில் நின்ஹை நிலச்சரிவு. [சான்று தேவை]
  • மே 1993 இல், ஜமோரா, இக்குவடோரில் நம்பிஜா பாஜோ நிலச்சரிவு. [சான்று தேவை]
  • 1993 இல் மலேசியாவில் கைவிடப்பட்டிருந்த கடலோர தகர சுரங்கத்தில் பண்டாய் ரெமிஸ் நிலச்சரிவு, புதியசிறுகுடாவை உருவாக்கியது
  • ஆகஸ்ட் 1993 இல், கியுசு, ஜப்பானில் ககோஷிமா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1994 இல், யுன்னன், சீனாவில் யுவாங்யாங் நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜனவரி 1995 இல், இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் கூனி நலா மற்றும் பானிஹல் சுரங்க பனிச்சரிவு. [சான்று தேவை]
  • ஏப்ரல் 1995 இல், பாதக்ஷன், ஆஃப்கானிஸ்தானில் வகான் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • ஜூலை 1996 இல், காங்வன், தென்கொரியாவில் சியார்வன் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • பிப்ரவரி 1997 இல், 0}அபுரிமக் பகுதி, பெருவில் பேய் மழையால் தம்புர்கோ நிலச்சரிவு. [சான்று தேவை]
  • 30 ஜூலை 1997 அன்று, தெரெட்பா நிலச்சரிவு, ஆஸ்திரேலியா விடுதியை அழித்தது.
  • ஆகஸ்ட் 1998 இல், உத்தரப் பிரதேசம், இந்தியாவில் பிதொரகார் நிலச்சரிவு [சான்று தேவை]
  • செப்டம்பர் 1999 இல், ஜெஜியாங், சீனாவில் லிஷ்யு நிலச்சரிவு [சான்று தேவை]
  • வெர்காஸ் துன்பியல், டிசம்பர், 1999 இல்வெர்காஸ் மாநிலம், வெனிசுலாவில் பெய்த கடும் மழையால் பத்தாயிரக்கணக்கான பலிகளை ஏற்படுத்தியது.

21 ஆம் நூற்றாண்டு[தொகு]

  • 11 ஜூலை 2000 அன்று பயடாஸ், மணிலா குப்பைகூள சரிவு.[சான்று தேவை]
  • ஜூலை 2000 இல் பேய்மழை காரணமாக லியாங்ஷன், சிசுவன், சீனாவில் மியானிங் நிலச்சரிவு [சான்று தேவை]
  • கேரளாவில் அம்பூரி நிலச்சரிவு, 2001
  • ஜூலை 2003 இல் சிசுவன், சீனாவில் டன்பா நிலச்சரிவு [சான்று தேவை]
  • டிசம்பர், 2004 இல் நயாங், கியுஸூ, சீனாவில் ஜுவீஜியயிங் நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜனவரி 10, 2005 இல் கலிபோர்னியா, அமெரிக்காவில் லா கன்சிடா நிலச்சரிவு, 10 பேர் கொல்லப்பட்டனர், 18 வீடுகள் சேதமாகின
  • ஜூலை 2005 இல் மஹாராஷ்டிரா, இந்தியாவில் ஜெய்கவொன் நிலச்சரிவு [சான்று தேவை]
  • 17 பிப்ரவரி 2006 இல் பிலிப்பைன்ஸில் தெற்கு லெய்டி நிலச்சரிவு
  • டெவில்'ஸ் சரிவு, சான் மாடியோ பிராந்தியம், கலிபோர்னியாவில் நடந்துகொண்டிருக்கும் நிலச்சரிவு
  • ஜூன் 2006 இல் சுலவெசி, இந்தோனேஷியாவில் நிலச்சரிவு.[17]
  • மே 2007 இல் சிசுவன், சீனாவில் லியாங்ஷன் நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜூன் 11 2007 இல் சிட்டாகாங், பங்களாதேஷில் 2007 சிட்டாகாங் நிலச்சரிவு.
  • செப்டம்பர் 6 2008 இல் 2008 கைரோ நிலச்சரிவு.
  • செப்டம்பர் 2008 இல் ஷாங்ஸி, சீனாவில் உரிமம் பெறப்படாத டஷான் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஸியாங்ஃபென் பிராந்திய நிலச்சரிவு. [சான்று தேவை]
  • நவம்பர் 2008 இல் யுன்னான், சீனாவில் லிங்காங் நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜூலை 2009 இல் சாங்கிங், சீனாவில் வுலாங்க் நிலச்சரிவு [சான்று தேவை]
  • ஜூலை 2009 இல் யமகுசி, ஜப்பானில் ஹோஃபு நிலச்சரிவு. [சான்று தேவை]
  • லியுஸொவு, குவாங்ஸி பகுதி, சீனா - தடம்புரண்ட புகையிரதம், 4 பேரைக் கொன்றது [18]
  • ஆகஸ்ட் 2009 இல், டைனன் பிராந்தியம், தாய்வானில் மொராகட் சூறாவளியால் ஷியாவ்லின் நிலச்சரிவு [சான்று தேவை]
  • 11 அக்டோபர் 2009 அன்று, நைல் பள்ளத்தாக்கு நிலச்சரிவு, சேதமில்லை ஆனால் சில வீடுகள் சேதமானது வாஷிங்டன் மாநில பாதை 410 இன் கால் மைல் தூரத்தை முற்றாக அழித்தது, வாஷிங்டன் நச்சஸ் ஆறு அதன் மேற்காக 10 மைல்கள் திருப்பிவிடப்பட்டது.
  • அக்டோபர் 2009 இல், பென்குவட் பிலிப்பைன்ஸில் பயபாங் மற்றும் அல்கலா நிலச்சரிவு. [சான்று தேவை]
  • நவம்பர் 2009 இல், ஐடா சூறாவளியால் எல் சல்வடாரில்சான் விசெண்டி மற்றும் சான் சல்வடோர் நிலச்சரிவு. [சான்று தேவை]
  • அக்டோபர் 2014 இலங்கையின் மலையகத்தில் பதுளையில் ஏற்பட்ட நிலச்சரிவு.

புவிக்கு அப்பாலான நிலச்சரிவுகள்[தொகு]

வீனசில் நிலச்சரிவு ஒன்று நடக்க முன்னர் மற்றும் நடந்த பின்னரான ராடர் படங்கள்.வலது புறத்திலுள்ள படத்தின் மையத்தில், புதிய நிலச்சரிவு, பிரகாசமான, ஓட்டம் போன்ற பகுதியைக் காணலாம், இது இடதுபுறத்தின் பிரகாசமான பகுதிக்கு நீண்டு செல்கிறது. 1990 படம்.
செவ்வாயில் நிலச்சரிவு நடக்கிறது, 2008-02-19.

கடந்தகாலங்களில் நிலச்சரிவுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் சூரியத் தொகுதியில் பல அமைப்புகளில் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் பெரும்பாலான அவதானிப்புகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அவதானிக்கும் விசாரணைகள் மூலம் பெறப்பட்டவை என்பதாலும், சூரியத் தொகுதியிலுள்ள பல அமைப்புகள் புவியியல் ரீதியில் செயலற்றநிலையையே காண்பிக்கின்றன என்பதாலும் அண்மைக்காலங்களில் நடந்ததாக பல நிலச்சரிவுகள் கண்டறியப்படவில்லை. சுற்றிவருகின்ற செயற்கைக்கோள்களால் வெள்ளி மற்றும் செவ்வார் இரண்டும் நீண்ட கால படவரைவுக்கு ஆளாகின, இரண்டிலுமே நிலச்சரிவுகளுக்கான எடுத்துகாட்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

கேசர்ஸின் பள்ளத்தாக்கிலுள்ள நிலச்சரிவின் வெப்ப மாறுதல் காட்சி.
  • தானியங்கி உருத்திரிபு கண்காணிப்புத் தொகுதி
  • உருத்திரிபு கண்காணிப்பு
  • பூகம்ப பொறியியல்கள்
  • ஜியாடெக்னிக்ஸ்
  • ஜிஜாடென்கிக்கல் இஞ்ஞினியரிங்
  • நிலச்சரிவு அணைக்கட்டு
  • நிலச்சரிவு நிவாரணம்
  • பெருமளவு விரயம்
  • சாய்வு உறுதித்தன்மை
  • ஸ்டர்ஸ்ட்ராம்
  • கடற்கீழ் நிலச்சரிவு
  • அடித்துச் செல்லப்படுதல்
  • நிலச்சரிவு
  • கலிபோர்னியா நிலச்சரிவுகள்

குறிப்புதவிகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-30.
  2. Easterbrook, Don J. (1999). Surface Processes and Landforms. Upper Saddle River: Prentice-Hall. https://archive.org/details/surfaceprocesses0000east. 
  3. ஈஸ்டர்ன்ப்ரூக், டான் ஜே. சர்ஃபேஸ் ப்ராசஸஸ் அண்ட் லேண்ட்ஃபார்ம்ஸ். அப்பர் சாடில் ரிவர், NJ: ப்ரெண்டைஸ்-ஹால், இன்ங், 1999.
  4. ஸ்சுஸ்டர், ஆர்.எல். மற்றும் கிறிஸெக், ஆர்.ஜே. (1978). லேண்ட்ஸ்லைட்ஸ்: அனாலைசிஸ் அண்ட் கண்ட்ரோல். வாஷிங்டன் டி.சி.: அறிவியல் தேசிய கல்விநிலையம்.
  5. ரென்விக்,டபிள்யு., ப்ரம்பா,ஆர். மற்றும் லோயெஹிர்,எல். 1982. லேண்ட்ஸ்லைட் மார்ஃபாலஜி அண்ட் புராசசஸ் ஆன் சண்டா க்ரஸ் ஐலேண்ட் கலிபோர்னியா. ஜியோகிராஃபிஸ்கா அன்னலெர். தொடர் ஏ, இயற்பியல் புவியியல், தொகுதி. 64, No. 3/4, பக்கம். 149-159
  6. சென். இஸட். மற்றும் ஜே. வாங். 2007. லேண்ட்ஸ்லைட் ஹஸார்ட் மப்பிங் யூசிங் லாஜிஸ்டிக் ரிக்ரஸன் மாடல் இன் மக்கென்ஸி வலி, கனடா. நேச்சுரல் ஹஸார்ட்ஸ் 42:75-89.
  7. கிளெரிசி, ஏ.; எஸ். பெரிகோ; சி. டெல்லினி; பி.வெஸ்கவி. 2002. எ புரசீட்ஜர் ஃபார் லேண்ட்ஸ்லைட் சசப்டிபிளிட்டி ஜோனேஷன் பை த கண்டிஷனல் அனலைசிஸ் மெத்தட். ஜியாமாஃபாலஜி 48(4):349-364.
  8. 8
  9. மெட்டர்னிச்ட், ஜி.; எல். ஹர்னி; ஆர். கோகு. 2005. ரிமோட் சென்ஸிங் ஆஃப் லேண்ட்ஸலைட்ஸ்: அன் அனாலைசிஸ் ஆஃப் த பொடான்ஷியல் கண்ட்ரிபியூஷன் டு ஜியோ-ஸ்பேஷியல் சிஸ்டம்ஸ் ஃபார் ஹஸார்ட் அசெஸ்மெண்ட் இன் மௌண்டேனியஸ் என்வயர்மெண்ட்ஸ். ரிமோட் சென்ஸிங் ஆஃப் என்வயர்ன்மெண்ட் 98: 284-303.
  10. டி லா வில்லே, என்.; ஏ.சி. டயஸ்; டி. ராமிரெஸ். 2002. ரிமோட் சென்ஸிங் அண்ட் GIS டெக்னாலஜீஸ் ஆஸ் டூல்ஸ் டு சப்போர்ட் சஸ்டெய்னபிள் மானேஜ்மெண்ட் ஆஃப் ஏரியாஸ் டிவாஸ்டேட்டட் பை லேண்ட்ஸ்லைட்ஸ். என்வயர்ன்மெண்ட், டெவலப்மெண்ட் அண்ட் சஸ்டெய்னபிளிட்டி 4: 221-229.
  11. ஃபாப்ரி, ஏ.; சி. சுங்; ஏ. செண்ட்ரெரா; ஜே. ரிமாண்டோ. 2003. இஸ் பிரிடிக்ஸன் ஆஃப் ஃபியூச்சர் லேண்ட்ஸ்லைட்ஸ் பாஸிபிள் வித் எ GIS? நேச்சுரல் ஹஸார்ட்ஸ் 30: 487-499.
  12. லீ, எஸ் மற்றும் ஜே.ஏ. டாலிப். 2005. ப்ராபபிலிஸ்டிக் லேண்ட்ஸ்லைட் சசப்டிபிளிட்டி அண்ட் ஃபாக்டர் இஃபக்ட் அனாலைசிஸ். என்வயர்ன்மெண்டல் ஜியாலஜி 47: 982-990.
  13. ஆல்மசர், ஜி.சி. மற்றும் ஜே.சி. டாவிஸ். 2003. யூசிங் மல்டிபிள் லாஜிஸ்டிக் ரிக்ரஸன் அண்ட் GIS டெக்னாலஜி டி பிரிடிக்ட் லேண்ட்ஸ்லைட் ஹஸார்ட் இன் நார்த்தீஸ்ட் கன்சாஸ், யு.எஸ்.ஏ. என்ஜினியரிங் ஜியாலஜி 69(3-4): 331-343.
  14. டிங்கிள், ஆர்.வி. 1977. தி அனாடமி ஆஃப் எ லார்ஜ் சப்மரைன் ஸ்லம்ப் ஆன் எ ஷியர்ட் கண்டினெண்டல் மார்ஜின் (SE ஆப்பிரிக்கா). ஜியாலஜிகல் சொசைட்டி லண்டன் சஞ்சிகை, 134, 293-310.
  15. "Hope Slide". BC Geographical Names Information System.
  16. கிளிஸ்மெண்ட் டி டெரெய்ன் எ செயிண்ட்-ஜீன்-வியானி | லெஸ் ஆர்சிவ்ஸ் டி ரேடியோ-கனடா
  17. ஜப்பான் வெலிவிவகார அமைச்சு: எமர்ஜென்சி அசிஸ்டன்ஸ் டி இண்டோனேஷியா ஃபார் ஃபிளட் அண்ட் லேண்ட்ஸ்லைட் டிசாஸ்டர் இன் சவுத் சுலவெசி புராவின்ஸ்
  18. இல்லவரா மெர்குரி 30 ஜூலை 2009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலச்சரிவு&oldid=3925293" இலிருந்து மீள்விக்கப்பட்டது