கமுதி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமுதி வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கமுதி நகரம் உள்ளது.இவ்வட்டத்தில் கமுதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் அபிராமம், கமுதி கிழக்கு, கமுதி மேற்கு, கோவிலாங்குளம் மற்றும் பெருநாழி என 5 உள்வட்டங்களும், 49 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 135,658 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 67,200 ஆண்களும், 32,847 பெண்களும் உள்ளனர். 32,847 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 83.1% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.33% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 982 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14614 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 28,604 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.66%, இசுலாமியர்கள் 5.38%, கிறித்தவர்கள் 3.81% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுதி_வட்டம்&oldid=3135272" இலிருந்து மீள்விக்கப்பட்டது