பயனர் பேச்சு:ச.உதயன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், ச.உதயன்! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் ச.உதயன், உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் ச.உதயன், உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

வாருங்கள் உதயன்! நல்வரவாகுக! மேலே உள்ள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைப் படித்து பாருங்கள் உதவியாக இருக்கும்.--செல்வா 23:24, 13 ஜூலை 2010 (UTC)

ஆலமரத்தடியில் இட்ட சொற்கள்[தொகு]

நீங்கள் ஆலமரத்தடியில் இட்ட உரையாடல் பகுதியை வெட்டி கலைச்சொல் பற்றிய இடத்தில் இடலாமா? --செல்வா 16:39, 22 ஜூலை 2010 (UTC)

ஆம். இடலாமே. --ச.உதயன் வணக்கம்

ஈழத்துத் தமிழறிஞர்கள் வரிசையில்[தொகு]

வணக்கம் உதயன், தி. த. கனகசுந்தரம்பிள்ளை பற்றிய குறுங்கட்டுரை ஒன்று விக்கியில் உள்ளது. அக்கட்டுரையில் நீங்கள் மேலே தந்துள்ள பகுதிகளைச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலேயுள்ளவற்றை நீங்கள் அழித்து விடலாம். நன்றி.--Kanags \உரையாடுக 22:07, 27 ஆகஸ்ட் 2010 (UTC) உங்கள் எண்ணப்படி ஒழுங்குபடுத்த முடிமா? எனக்கு தாங்கள் இடுகை இடுவதற்கும் உதவி தருவீர்களா?.--sa.uthayan \உரையாடுக

கனகசுந்தரம்பிள்ளை பற்றிய கட்டுரையில் நீங்கள் தந்துள்ள மேலதிக தகவல்களுக்கு நன்றி. அவற்றை விக்கிநடைக்கு ஏற்பத் திருத்தி எழுதியுள்ளேன். பாருங்கள். கட்டுரைத் தலைப்பை இடது பக்கத்தில் உள்ள பெட்டியில் இட்டுத் தேடினால் கிடைக்கும். இல்லாவிட்டால் புதிதாகத் தொடங்கலாம். இலங்கையர்கோன் பற்றிய சிறு கட்டுரை உள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 23:29, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

திரு.Kanags அருமை!அருமை!இக்கட்டுரையை எழுதியவர் பெயரும் வழங்கமுடியுமா?நன்றி.--ச.உதயன் \உரையாடுக 23:44, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை எழுதியவர்கள் அல்லது பதிந்தவர்கள் பற்றிய விபரங்களை அக்கட்டுரைகளின் வரலாற்றுப் பகுதிக்குச் சென்றால் அறியலாம். இலங்கையர்கோன் கட்டுரை எப்படி வளர்ந்தது என்றறிய அதன் வரலாற்றில் பாருங்கள்.--Kanags \உரையாடுக 23:50, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி திரு.Kanags ஐயாவுக்கு.தேவநேயப்பாவாணரின் வேர்ச்சொற் சுவடியை பதிவது சிக்கலைக் கொடுக்குமா? அதாவது ஏதேனும் குற்றமாகுமா? தங்கள் கருத்தைத் தரமுடியுமா?.--ச.உதயன் \உரையாடுக 23:59, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

அது அவரின் மூலப் பிரதி என்றால் அதனை விக்கிமூலத்தில் இடலாம். பாவாணரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். விக்கிமூலம் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டம். மூலப் பிரதிகளை அங்கிடலாம்.--Kanags \உரையாடுக 00:05, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

திரு.Kanags ஐயாவுக்கு நன்றி நவில்கிறேன்.எனக்கு மீண்டும் தெளிவான விளக்கம் தேவையய்யா. நள்ளிரவானதால் மாலை உங்களோடு உரையாடுவேன். உங்களோடு இன்னும் சில நிமையங்கள் உரையாடினால் தெளிவு கிடைத்துவிடும். அத்தோடு பதிவுகளையும் நன்றாகச் செய்ய இயலும்.எனக்கு உங்கள் உதவி கிடைத்தையிட்டு பேருவகை அடைந்துள்ளேன்.--ச.உதயன் \உரையாடுக

ஆம், தேவநேயப்பாவணர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. எனவே காப்புரிமம் மீறலா ஆகாது. (அவருடைய பெயரோடு வெளியிட்டால்). விக்கி மூலம் என்னும் உறவுத்திட்டத்தில் வலையேற்றலாம்.--செல்வா 20:51, 4 செப்டெம்பர் 2010 (UTC) நன்றி செல்வா ஐயா. யான் விக்கிமூலத்தில் எழுதமுயற்சிக்கிறேன்..--ச.உதயன் 23:20, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

ச.உதயனின் சில பங்களிப்புகள்[தொகு]

என் வலையிடங்கள்:

தமிழாசான் பதிவேடு
தமிழ்க்கடிதம்
தமிழ்படி
உரைக்கல்
முன்றில்

பயனர் பக்கம்[தொகு]

உங்கள் பயனர் பக்கத்தை இன்றுதான் பார்த்தேன் மிக அருமையான பாடல். மிக அருமையான எண்ண, உணர்வு ஓட்டம், நல்ல தமிழ் நடை! நெடிய பின்னூட்டங்கள். என் நல்வாழ்த்துகள்! உதயன், நாம் முகநூலில் (வே'சு பு'க்கில்) சிறிது ஏற்கனவே உரையாடியுள்ளோம். நாம் உணர்வால் ஒத்தவர்கள். எனினும் நட்பான நோக்கில் சில சொல்ல விழைகிறேன், தவறாக எண்ண மாட்டீர்கள் என்னும் துணிவில். பயனர் பக்கத்தில் பற்பல செய்திகள் இருக்கலாம். அதில் உங்கள் வலைப்பதிவுகளுக்குத் தொடர்புகள் இருக்கலாம். விக்கியில் பங்களிப்பதற்கான பின் புலமாக உள்ள உங்கள் தனிப்பட்ட ஆர்வங்கள் பற்றியும் குறிப்புகள் இருக்கலாம். ஆனால் இதனை ஒரு வலைப்பதிவு போல ஆக்கிவிடுதல் கூடாது (நீங்கள் ஆக்கவில்லை).விக்கிப்பீடியாவில் பயனர்பக்கத்தைப் பற்றிய பரிந்துரைகளைப் பற்றி இங்கே காணலாம். தமிழர்கள் ஒன்று சேர்ந்து அறிவுக்கோயில் போல விக்கிப்பீடியாவையும், அதன் உறவுத் திட்டங்களையும் வளர்த்தெடுப்பது பற்பல கோணங்களில் பல்கிப்பெருகும் நன்மைகள் தரும். பலரும் கூடி வளர்முகமாக உழைப்பது இதற்கு முதற்படி. உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். --செல்வா 21:37, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

தற்பொழுது கட்டற்ற கலைக்களஞ்சியத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்கான பயிற்சிகளை மெல்லமெல்ல எடுத்துவருகிறேன். நீங்கள் கூறியது மிகச்சரியே சிந்தனைகள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். பயனர் பக்கம் என்றவுடன் என் ஆக்கங்களை இடலாம் என்று எண்ணிவிட்டேன். நீங்கள் என்னோடு மனம் திறந்து உரையாடியமைக்கு நன்றி நவில்கிறேன். முரண்பாடுகளை தவிர்த்து முன்னேற்றப்பாதையில் நடக்கவேண்டும் ஆம். இனியும் மனம் திறந்து உரையாடுங்கள். யான் உங்களால் வளர்க்கப்படும் பிள்ளை. எனக்கு சில வழிகாட்டலை அப்பப்போது தாருங்கள். இலக்கியங்களை இயன்றவரை தொகுக்க முயன்று வருவேன். விக்கிமூலத்துக்குச் செல்வதற்கு முடியாமல் உள்ளது; எனக்கு உதவி தாருங்கள் ஐயா.--ச.உதயன் 00:01, 5செப்டெம்பர் 2010 (UTC)

விக்கிமூலத்துக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 23:02, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்கள் தனிப்பாடல்கள்[தொகு]

உதயன், நீங்கள் விரும்பினால் உங்கள் ஆக்கங்களை விக்கிமூலத்தில் இடலாம். ஆக்கங்களை இட விக்கிப்பீடியா தகுந்த இடமில்லை. அதாவது பாரதியார் கவிதைகள் இங்கு இருக்கலாகாது, ஆனால் பாரதியாரைப் பற்றியோ அவர் கவிதையைப் பற்றிய குறிப்போ இங்கு இருக்கலாம். பாரதியாரின் கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் முதலியன விக்கிமூலம் என்னும் உறவுத்திட்டத்தில் இடலாம். ஆனால் எவை எவை அங்கும் இருக்கலாம் என்பது சற்றுக் கேள்விக்குறியானது (இப்பொழுது). பொதுவாக தரமான படைப்பு ஒன்று கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ் அளிக்க முன்வந்தால் விக்கிமூலத்தில் இடலாம். ஏதும் உதவிகள் வேண்டின், தெரியப்படுத்துங்கள். நன்றி. (இதன் ஒரு படியை ஒற்றி உங்கள் பயனர் பக்கத்திலும் இடுகின்றேன்)--செல்வா 21:55, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கிமூலத்தில் இடுவதற்குக் காப்புரிமை அற்ற அல்லது நாட்டுடமை ஆக்கப்பட்ட ஆக்கங்களை இடலாம். செல்வா சொல்வது போல் கிரியேட்டிவ் காமன்ஸ் பகிர்வுரிமத்தின் கீழ் அளிக்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 22:08, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
விக்கிமூலத்தில் எப்படியான ஆக்கங்கள் இடம்பெறலாம், அறிக: What Wikisource includes.--Kanags \உரையாடுக 23:36, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
உதயன், சிறீதரன் கனகு மிகத்துல்லியமான சுட்டியைத் தந்த்துள்ளார். அந்தப் பக்கத்தில், "Acknowledging precedent exclusions" என்னும் பகுதியில், "Original contributions" என்னும் பகுதியைக் குறிப்பாக பார்க்க வேண்டுகிறேன். அதில் "Note" என்று உள்ள பகுதி உங்களுக்கும் பயனுடையதாக இருக்கலாம்: "There are a few exceptions to this rule, as detailed under Added value to source texts above. Also note that a Wikisource contributor may make his/her own original work available (within reason!) by placing it within his/her own user namespace.". --செல்வா 00:48, 11 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ச.உதயன்&oldid=592216" இலிருந்து மீள்விக்கப்பட்டது