மலையத்துவச பாண்டியன் (பாரதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையத்துவச பாண்டியன், மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னனாவான். இவன் கௌரவர் பக்கமிருந்த துரோணரை கொள்வதற்கு, பாண்டவர்கள் பக்கமிருந்த திருட்டயுத்மனுக்கு உதவினான்.[1] இதனால் கோபமடைந்த துரோணரின் மகன் அசுவத்தாமன் இந்த பாண்டிய மன்னனை கொன்றான்.

தமிழ்[தொகு]

ஆனால் தமிழ் சங்க இலக்கியங்களில் இவனை பற்றிய குறிப்புகளில்லை. மகாபாரதத்தில் போரிட்டவர்களுக்கு உண்டி கொடுத்தாக சேரன் பெருஞ்சோற்றுதியன் என்ற தமிழ் மன்னனை பற்றி மட்டும் குறிப்புள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. மகாபாரதம், 8-20-46, கர்ண பர்வம்