நயி அல் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயி அல் அலி
பிறப்புc. 1937
Al-Shajara
இறப்பு29 ஆகத்து 1987
இலண்டன்
பணிபத்திரிக்கையாளர், ஓவியர்

நயி அல் அலி (Naji Salim al-Ali), அரபி: ناجي سليم حسين العلي; பிறப்பு: கி. 193829 ஆகத்து 1987) பாலசுதீனத்தைச் சேர்ந்த கேலி சித்திர ஓவியர் ஆவார்.இவரின் கேலி சித்திரங்கள் பாலஸ்தீன மக்கள் அடைந்த துயரங்களையும் ஒடுக்குமுறையையும், இசுரேலிய ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்கான படுகொலைகள் என்று தீவிரமான அரசியல் பிரக்ஞையோடு உருவானவை. நஜி அல் அலி முப்பதாயிரத்திற்கும் அதிகமான கேலி சித்திரங்களை வரைந்திருக்கிறார். தொடர்ந்த அச்சுறுத்தல்கள். கடுமையான தணிக்கை, சிறை தண்டனை என்று அதிகாரம் அவரை முடக்கிய போதும் அவரது செயல்பாடுகள் முடங்கவில்லை. முப்பது ஆண்டுகாலம் புகழ்பெற்ற கேலி சித்திரக்காரராக செயல்பட்டிருக்கிறார்.

இவர் உருவாக்கிய கற்பனை பாத்திரமான கன்சாலா மிகவும் பிரபலமானதாகும். பத்துவயது தோற்றமுடைய கன்சாலா எப்போதும் முதுகை காட்டிக் கொண்டு கையை பின்னால் மடித்தபடியே தான் நிற்பான். அவன் முகம் யாருக்கும் தெரியாது.

1987 ம் ஆண்டு லண்டனில் ஒரு சாலையை கடந்துசெல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் நஜி அல் அலி. ஆனால் இன்றும் அவரது கேலி சித்திரங்கள் தொடர்ந்து மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. உலக அரங்கில் அவரது குரல் இப்போதும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

உசாத்துணை[தொகு]

http://www.handala.org/about/index.html

மேற்கோள்கள்[தொகு]

http://sramakrishnan.com/view.asp?id=295&PS=1 பரணிடப்பட்டது 2009-08-28 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயி_அல்_அலி&oldid=3758100" இலிருந்து மீள்விக்கப்பட்டது