நற்றமனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்றமனார் சங்ககாலப் புலவருள் ஒருவர். அவரது பாடலாக நற்றிணை நானூற்றுள் 133 ஆம் பாடல் ஒன்று மட்டும் உள்ளது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

இரும்பைக் காய்ச்சிக் கருவிகள் செய்யும் கொல்லன் சில வேளைகளில் உலையில் தீ கொழுந்து விட்டு எரிவதைத் தணிக்கப் பனைமடல் கிண்ணத்தில் தண்ணீரை அள்ளி உலையில் தெளிப்பான். அப்போது உலையில் கொழுந்து விட்டு எரியும் தீ சற்றே தணியும்.

ஊர்மக்கள் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசும் சொல் சற்றே அவளுக்கு அவன் மீதுள்ள வேட்கையைத் தணிக்கிறதாம் - தலைவி சொல்கிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்றமனார்&oldid=1337437" இலிருந்து மீள்விக்கப்பட்டது