ஸ்கிபியோன் ரெபிபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்தினால் ரெபிபா
சபீனாவின் கர்தினால் ஆயர்
நியமனம்மே 5, 1574
ஆட்சி துவக்கம்மே 5, 1574
ஆட்சி முடிவுசூலை 23, 1577
முன்னிருந்தவர்கியோவானி ரிசி
பின்வந்தவர்கியகோமோ சவெல்லி
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவுமே 14, 1541
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுடிசம்பர் 20, 1555
பிற தகவல்கள்
இயற்பெயர்ஸ்கிபியோன் ரெபிபா
பிறப்பு(1504-02-03)பெப்ரவரி 3, 1504
இறப்புசூலை 23, 1577(1577-07-23) (அகவை 73)
சபீனா
சமயம்உரோமன் கத்தோலிக்கம்

ஸ்கிபியோன் ரெபிபா (3 பெப்ரவரி 1504 – 23 சூலை 1577) இத்தாலியை சேர்ந்த கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் ஆவார். திருத்தந்தை பிரான்சிசு[1] உட்பட, தற்போது உலகில் உள்ள 95% கத்தோலிக்க ஆயர்கள் இவரிடமிருந்தே தங்களின் அப்போஸ்தலிக்க வழிமரபை (apostolic lineage) பெறுகின்றனர்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

இவர் சிசிலியில் பிறந்தவர்.

16 மார்ச்சு 1541இல் செயிதியின் துணை ஆயராய் நியமிக்கப்பட்டார். 20 டிசம்பர் 1555 இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டு[2] பிசா நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு ஆயர்நிலை அருட்பொழிவு செய்தவரின் பெயர் சரிவரத் தெரியவில்லை. இதனால் அப்போஸ்தலிக்க வழிமரபை இவருக்கு முன் கணிக்க இயலவில்லை. ஆதாரமில்லா பல தகவலகளின் படி இவர் கர்தினால் கியான் பியர்தோ காஃபாவால், (பின்னாளில் திருத்தந்தை ஆறாம் பவுல்) அருட்பொழிவு செய்யப்பட்டார் என்பர்.

1573இல் இவர் அல்பேனோ நகரின் ஆயராகவும், 1574இல் பிசா நகரின் ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.[3]

18ஆம் நூற்றாண்டில் இவரின் அப்போஸ்தலிக்க வழிமரபில் வந்த திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பின்னாளில் உலகம் முழுதும் பணிபுரிய 139 ஆயர்களை நியமித்து தாமே அருட்பொழிவும் செய்தார். இவ்வாயர்கள் தங்களின் நாட்டுக்கு திரும்பி தேவை ஏற்படும் போது மேலும் பல ஆயர்களை அருட்பொழிவு செய்தனர். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிசு உட்பட இப்போது உள்ள கத்தோலிக்க ஆயர்களில் 95% பேர் இவரிடமிருந்தே தங்களின் அப்போஸ்தலிக்க வழிமரபை (apostolic lineage) பெறுகின்றனர்.[4]

ஸ்கிபியோன் ரெபிபாவின் சின்னம்

ஆதாரங்கள்[தொகு]

  1. "Pope Francis". Catholic-Hierarchy.org. டேவிட் எம். சேனி. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2014.
  2. Salvador Miranda (2010). "The Cardinals of the Holy Roman Church". Florida International University. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  3. "Scipione Cardinal Rebiba". Catholic-Hierarchy.org. டேவிட் எம். சேனி. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2014.
  4. Bransom, Charles. "Ordinations of U. S. Catholic Bishops, 1790-1989" United States Catholic Conference, 1990. ISBN 978-1555863234

இவற்றையும் காண்க[தொகு]

  • B. Rinaudo, Il cardinale Scipione Rebiba (1504–1577). Vita e azione pastorale di un vescovo riformatore, L'Ascesa, Patti 2007. ISBN 978-88-903039-0-6.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கிபியோன்_ரெபிபா&oldid=3430888" இலிருந்து மீள்விக்கப்பட்டது