கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடை எப்எம்(கொடைக்கானல்)
வானொலி முறைஇசை வானொலி
மொழிதமிழ்,
உரிமையாளர்அனைத்திந்திய வானொலி


தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால் அமைக்கப்பட்டுள்ள வானொலி நிலையம் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது “கோடை பண்பலை வானொலி நிலையம்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த வானொலி நிலையம் மூலம் காலை 4.55 மணி முதல் இரவு 12.00 மணி வரை பல்வேறு பொழுதுபோக்கு பாடல்கள், நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இதன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை நேயர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இவ்வானொலியில் தொலைபேசி, குறுந்தகவல், கடிதங்கள் வழியாகவும் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள் நிகழ்ச்சிக்கேற்றவாறு ஒலிபரப்பப்படுகின்றன. இந்த வானொலி நிலையத்தின் ஒலிபரப்புகள் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலும், கேரளாவில் ஒரு சில மாவட்டங்களிலும் சென்றடைகிறது. இதனால் இந்த வானொலிக்கு அதிக அளவில் நேயர்கள் இருக்கின்றனர். 2000 ஆம் துவங்கப்பட்ட இது 19 பண்பலை நிலையங்களுக்கு ஒலிபரப்பு சேவையை வழங்குகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]