பேச்சு:காங்கோ மக்களாட்சிக் குடியரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கோ மக்களாட்சிக் குடியரசு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

காங்கோ அல்ல, கொங்கோ. அந்த நாட்டவர் யாரும் காங்கோ என்பதில்லை. கொங்கோ என்றே கூறுகின்றனர்.--பாஹிம் 03:36, 17 ஏப்ரல் 2011 (UTC)

தமிழக வழக்கு காங்கோ, இலங்கை வழக்கு கொங்கோ. தமிழ் விக்கியில் ஏற்றுக்கொண்ட வழக்குப்படி, கட்டுரையை முதலில் எழுதத் தொடங்குபவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன்படி காங்கோ முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க ஆங்கிலத்தில் காங்கோ என்றே பலுக்கின்றனர். ஆங்கிலேயர்கள் கொங்கோ என்கிறார்கள்.--Kanags \உரையாடுக 04:33, 17 ஏப்ரல் 2011 (UTC)

கொங்கோ என்ற வழிமாற்றும் காணப்படுகிறது. அதனால் பரவாயில்லை. மேலும், அமெரிக்கர் எப்படிக் கூறுகின்றனர் என்பதல்ல இங்கு தேவை. அந்த நாட்டினர் எப்படிக் கூறுகின்றனர் என்பதுதான் தேவைப்படுகிறது. முதலைகள் பகுப்பை ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழித் தலைப்புக்களுடன் சரியாக மாற்றியமைக்கக் கேட்டிருக்கிறேன், கனகு. அதனைச் செய்து தாருங்கள். நன்றி.--பாஹிம் 05:47, 17 ஏப்ரல் 2011 (UTC)