சின்மோடேக் எரிமலை

ஆள்கூறுகள்: 31°54′34″N 130°53′11″E / 31.90944°N 130.88639°E / 31.90944; 130.88639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்மோடேக் (Shinmoe-dake)[1]
சூலை 2008இல் சின்மோடேக்
உயர்ந்த இடம்
உயரம்1,421 m (4,662 அடி)
புவியியல்
அமைவிடம்ககோஷிமா மாகாணம், கியூஷூ, யப்பான்
மூலத் தொடர்கிரிஷிமா மலைத்தொடர்
நிலவியல்
பாறையின் வயது1,300 ஆண்டுகளுக்கும் மேலாக
மலையின் வகைஇயக்கத்திலுள்ள எரிமலை
கடைசி வெடிப்புசனவரி 2011

சின்மோடேக் (Shinmoedake,新燃岳) யப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. எரிமலை வெடிப்புகள் 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, மற்றும் 2009 ஆண்டுகளில் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளது.

இந்த எரிமலை அண்மையில் சனவரி 19, 2011 அன்று புகையத் தொடங்கியுள்ளது. சனவரி 27, 2011 நிலவரப்படி எச்சரிக்கை நிலை மூன்றை எட்டியுள்ளது.[1] பிப்ரவரி 1 அன்று மிகப்பெரிய வெடிப்பொன்றில் வளிமங்கள், கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது. இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் சன்னல்களை உடைக்குமளவு இருந்தது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Earthquakes and volcanoes, U-Tokyo. "Eruption of Shinmoe-dake (a stratovolcano of the Kirishima volcano group), Japan, 2011". University of Tokyo. Outreach and Public Relations Office. பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.
  2. சப்பானிய எரிமலை வெடிததது

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்மோடேக்_எரிமலை&oldid=1496536" இலிருந்து மீள்விக்கப்பட்டது