பேச்சு:விபுலாநந்தர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விபுலாநந்தர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இவர் காரேரும் மூதூராம் காரைதீவிலே பிறந்தார்

வணக்கம் விபுலாநந்தரின் இலங்கை முத்திரை வெளியீடு பற்றிய தகவல்கள் தரமுடியுமா நன்றி--188.109.149.37 19:13, 11 ஏப்ரல் 2011 (UTC)= இணைக்கப்பட்டுள்ள முத்திரை ==

இங்கு இணைக்கப்பட்டுள்ள மெல்பன் தமிழ் சங்கம் வெளியிட்டதாக கூறப்பட்ட "முத்திரை" கட்டுரைக்கு தேவையில்லை. இது பணம் கொடுத்தால் தபால் கந்தோரில் அச்சிட்டுக் கொடுக்கும் வகை முத்திரை தானே.(உண்மையில் முத்திரை அருகில் உள்ள கங்காரு தான்) இதை இங்கு இட்டால் பிழையான எடுத்துக்காட்டாக அமையும். பின்னர் ஒவ்வொருவரும் பணம் கொடுத்து அச்சிட்டுக் கொண்ட "முத்திரைகளை" இங்கு இடலாம்.--Terrance \பேச்சு 13:02, 20 ஜூலை 2009 (UTC)--Terrance \பேச்சு 13:02, 20 ஜூலை 2009 (UTC)

மன்னிக்கனும் டெரன்சு :(. இதுவும் இலங்கையில் வெளியிடப்பட்ட தபால் தலைக்கு இணையானது என்று எண்ணி இதை இக்கட்டுரையில் கொடுத்தேன். ஆசுதிரேலியா அரசும் இவரை கெளரவித்ததாக எண்ணியே இங்கு இட்டேன். இதன் முழு விவரம் தெரியாமல் இங்கு இட்டது என் அறியாமை. இப்போதே எடுத்துவிடுகிறேன்.--கார்த்திக் 13:15, 20 ஜூலை 2009 (UTC)
மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் தேவையில்லை கார்த்திக். "முத்திரையை" அகற்றியமைக்கு நன்றி.--Terrance \பேச்சு 00:52, 22 ஜூலை 2009 (UTC)

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. இவ்வுலகிலே தோன்றியவர்களில் பலர் புகழொடு தோன்றி மறைந்தும் அவர்களின் பெயர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவர்கள் ஆற்றிய சேவையின் காரணத்தினாலே என்றும் மக்களின் மனதிலே இவர்கள் நிலைத்து நிற்கின்றார்கள். இவ்வாறானவர்களுள் தமது தாய் மொழியையும், சமயத்தையும் வளர்க்க பாடுபட்டவர்களில் சுவாமி விபுலானந்தரும் ஒருவர். இவர் ஈழத்திருநாட்டில் பிறந்த அறிஞர்களில் இன்றும் அழியாப்புகழுடன் திகழ்பவர். ஈழத்தின் கிழக்கு மாகணத்தில் மட்டக்களப்பு என்னும் நகரத்தில் உள்ள காரைதீவில் சாமித்தம்பிக்கும், கண்ணம்மையாருக்கும் திருமகனாக 1892ம் ஆண்டு, மூன்றாம் மாதம், இருபத்தேழாம் திகதி (1892. 03. 27) பிறந்தார். இவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் மயில்வாகனம். இவர் இளமையில் இருந்தே கல்வியை ஆர்வத்துடன் கற்று வந்தார். கல்முனை மெதடிஸ் ஆங்கிலப் பாடசாலை, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி என்பவற்றில் தனது கல்வியை கற்றார். பின்பு புனித மைக்கல் கல்லூரிலே ஆசிரியராகவும் கடமை புரிந்தார். அதன் பிற்பாடு கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். 1912ம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற தகுதி கிடைக்கப் பெற்றதும் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக சேவையில் அமர்ந்தார். கொழும்பு அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் 1915ம் ஆண்டு சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 இல் இப்பாடத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். மதுரைத் தமிழ் சங்கம் நடத்திய பரீட்சையில் தோற்றி பண்டிதர் என்ற பட்டத்தையும் பெற்றார். இலங்கையில் இருந்து பண்டிதர் என்ற பட்டத்தை முதன் முதலில் பெற்ற பெருமையும் இவரையே சாரும். 1920ம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி(டீ.ளுஉ) பட்டதாரியானார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கலைஞர், ஆராய்ச்சியாளர், கல்லூரி அதிபர், பல்கலைக்கழகப் பேராசிரியர், ஆங்கில தமிழ்ச் சஞ்சிகைகளின் ஆசிரியர் எனப் பல துறைகளில் தம்மை ஈடுபடுத்தி சிறப்பாக தமது கடமையை ஆற்றினார். மட்டக்களப்பிலே சிவாநந்த வித்தியாலயம் என்னும் பள்ளியை நிறுவி அதன் அதிபராக கடமையையேற்று சிறப்பாக வழி நடத்தி வந்தார். மேலும் மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண சம்பந்திரிசியார் கல்லூரி என்பவற்றில் ஆசிரியாகவும் திருகோணமலை இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமை புரிந்தார். திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு என்னும் இடங்களில் பல பாடசாலைகளை கட்டுவித்து ஆரம்பித்து வைத்த பெருமையும இவருக்கு உரியதாகும். இந்தியாவில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக் கழகம் என்பவற்றில் முதல் தமிழ் பேராசிரியராக கடமையாற்றினார். உலகின் முதல் தமிழ் பேராசிரியரும் இவரேயாவார். தமிழ் மக்கள் மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றின் சிறப்பினை உணர்ந்து அவற்றை பின்பற்றி வாழ வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். இதனால் பற்பல கட்டுரைகள், நூல்கள், மொழிபெயர்ப்புகள் என்பவற்றை மேற்கொண்டார். தமிழுடன் விஞ்ஞானத்தை இணைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். இவர் இசை பற்றி ஆய்வு செய்து ‘யாழ் நூல்’ என்னும் அரிய இசைத்தமிழ் நூலினை தமிழ்மொழிக்கு தந்துள்ளார். இதுமட்டுமன்றி ‘மதங்க சூளாமணி’ என்னும் நாடகத்தமிழ் நூலினையும் எழுதி தமிழ்க்கலை வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இயல், இசை, நாடகம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தமையால் இவரை ‘முத்தமிழ் வித்தககர்’ என எல்லோரும் போற்றினார்கள். யாழ் நூல் பற்றி இவரின் பாரத நாட்டு மாணவர்களில் ஒருவரான வெள்ளை வாரணம் பின்வருமாறு கவி பாடியுள்ளார். ‘‘வாழி தமிழர் வளர் புகழால் ஞாலமெலாம் ஏழிசைதேர் யாழ்நூலிசை பரப்பி -வாழியரோ வித்தகனார் எங்கள் விபுலானந்தப் பெயர்கொள் அத்தனார் தாள் எம் அரண்’’ சுவாமி அவர்கள் தமது வாழ்க்கையை தமிழுக்கும், சைவத்திற்கும் அர்பணித்து தூர நோக்கோடு செயற்பட்டு வாழ்ந்தார். மக்களிடையே நடைமுறையில் உள்ள வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றை அடியோடு மறுத்தார். இந்தியாவில் இருக்கும் போது தனது நண்பர் ஒருவர் இறந்த செய்தி கேட்டு துயருற்று எழுதிய கவிதைகளே கங்கை விடுத்த ஓலை என்று அழைக்கப்பட்டது. இதில் கங்கை நதியை தூதாக பயன்படுத்தி பாடியுள்ளார். இவர் இந்தியா சென்று சமய, தமிழ் துறைகளில் நன்கு கற்று அங்கும் பல தொண்டுகள் ஆற்றியுள்ளார். 1924ம் ஆண்டு பாரதத்தில் உள்ள இராமகிரு~;ணமடத்தில் துறவாகிய போது விபுலாநந்தர் என்னும் நாமம் சூட்டப்பெற்றார். அடிகளார் தமது ஐம்பத்தைந்தாவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அதாவது பத்தொன்பதாம் திகதி, ஆடி மாதம், 1947ம் ஆண்டு (19.07.1947) இவரது உயிர் பிரிந்தது. அடிகளாரின் சமாதி மட்டக்களப்பு சிவாநந்த வி;த்தியாலய வளவில் அமைந்துள்ளது. இவரது நினைவாக மட்டக்களப்பில் நிறுவப்பட்ட விபுலாநந்தர் மணி மண்டபம், விபுலாநந்தர் இசைக்கல்லூரி என்பன இன்றும் மிக கம்பீரமாக காட்சியளிக்கின்றன. ஈழத்து மக்களிற்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவாக இவரை சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது. இவை இவரின் சேவையின் சிறப்பினை உலகிற்கு நன்கு எடுத்துக்காட்டுவனவாகும். “ வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது ” (விபுலானந்தர்) வளர்க தமிழ் ஓங்குக இவர் புகழ். --Shanthiny 11:46, 19 ஏப்ரல் 2011 (UTC) உசாத்துணை- இலங்கை அரசு தமிழ் பாடத்திட்டம்-தரம்-6-1998 இணையத்தளங்கள்

ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம்[தொகு]

இந்தச் சங்கத்தை நிறுவியவர் தி. சதாசிவ ஐயர் என்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் விபுலானந்தர் நிறுவியதாகக் கட்டுரையில் சான்று எதுவும் குறிப்பிடாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபுலானந்த அடிகள் யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இதற்கான சான்று என்னிடம் இல்லை. ஆனால் என் தாய்வழித் தாத்தா அச்சமயம் அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார். அதிபரும் ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று எங்கள் குடும்பத்தில் உள்ளது.--UKSharma3 உரையாடல் 01:23, 23 சூன் 2017 (UTC)[பதிலளி]

@Uksharma3: ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் ஆரம்பித்ததில் சுவாமிகளுக்கு பங்கில்லை எனத் தெரிகிறது. (ஆதாரம்: வெள்ளி விழா மலர், 1950. யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்) அப்பகுதியை நீக்கியுள்ளேன்.--Kanags (பேச்சு) 10:18, 28 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--UKSharma3 உரையாடல் 11:08, 28 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

சில தவறுகள்[தொகு]

1. சுவாமி விபுலானந்தர் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி சிவானந்தரிடமிருந்து சந்நியாசம் வாங்கியதாக எழுதப்பட்டுள்ளது. சிவானந்தருக்கும் ராமகிருஷ்ண மடத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. 1911 தொடக்கம் 1926 வரை சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவர் சுவாமி சர்வானந்தா.

2. "1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார்." என எழுதப்பட்டுள்ளது. அவர் ஜூலை 19-ந் திகதி தான் இறந்தார். ஜூலை மாதத்தை ஆடித்திங்கள் என்று எழுதுவது தவறாகும் ஆடித்திங்கள் என்பது தமிழ் ஆடி மாதத்தையே குறிக்கும்.

3. இலங்கையில் ராமகிருஷ்ண மடத்தால் நிறுவப்பட்ட பள்ளிகளின் மேலாளராக விபுலானந்த அடிகள் பணியாற்றியபோது மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தை அவரே நிறுவினார். மேலும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், காரைதீவில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் அநாதைச் சிறுவர்களுக்காக இல்லங்கள் நிறுவினார். இந்தத் தகவல்கள் கட்டுரையில் இடம்பெறவில்லை. --UKSharma3 உரையாடல் 01:54, 19 சூலை 2021 (UTC)[பதிலளி]

@Uksharma3: மிக்க நன்றி. கவனிக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:15, 19 சூலை 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விபுலாநந்தர்&oldid=3812270" இலிருந்து மீள்விக்கப்பட்டது