ஆளுனர் மாளிகை

ஆள்கூறுகள்: 13°00′21″N 80°13′36″E / 13.005948°N 80.226565°E / 13.005948; 80.226565
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராசபவன் சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆளுனர் மாளிகை, சென்னை

ஆளுனர் மாளிகை தமிழ்நாடு ஆளுநர்கள் வாழும் அலுவல்முறை இருப்பிடம். இது தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் உதகமண்டலத்தில் உள்ள இருப்பிடத்தில் ஆளுநர் தங்கியிருப்பார்.

வரலாறு[தொகு]

மதராசு ஆளுநர்கள் முதலில் செயின்ட் சார்சு கோட்டையில் வாழ்ந்து வந்தனர்.1640ஆம் ஆண்டு முதல் அலுவல்முறை மாளிகை கட்டப்பட்டது. தற்போதைய அணிவகுப்பு திடலில் அமைந்திருந்த அக்கட்டிடம் 1693இல் இடிக்கப்பட்டு தலைமைச்செயலகத்தின் ஓர் பகுதியாக விளங்கும் கட்டிடம் கட்டப்பட்டது. 1746 இல் பிரெஞ்ச் படையினரால் அழிக்கப்பட்ட இந்த மாளிகைக்கு மாற்றாக 1749இல் அப்பகுதியில் மிக செல்வசெழிப்புடன் வாழ்ந்த அன்டோனியோ டி மதரோசு அம்மையாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. இதனைச்சுற்றியே தற்போதைய அரசு இல்லம் அமைந்துள்ளது. 1820இல் ஆளுநராக பொறுப்பேற்ற தாமசு மன்றோ ஆளநரின் பண்ணைவீடாக இருந்த 'கிண்டி லாட்சை' அலுவல்முறை இருப்பிடமாக மாற்றினார்.[1]

ஆளுனர் மாளிகை வளாகம்[தொகு]

ஆளுனர் மாளிகை கிண்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மான் வகைகள் 1924ஆம் ஆண்டில் கொண்டு விடப்பட்டன. கீழ்வரும் பொதுப்பயன்களுக்காக பெரும்பகுதி விட்டுக்கொடுக்கப்பட்டபின்னர் தற்போதுள்ள நிலப்பரப்பு 156.14 ஏக்கர்கள் ஆகும்.

  • 1958: இந்திய தொழில்நுட்பக் கழகம் அமைக்க மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.
  • 1958: பிரதமர் நேருவின் விழைவிற்கேற்ப மான்கள் பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வனத்துறைக்கு மாற்றப்பட்டது.
  • 1974: இராசாசி நினைவகத்திற்காக மாற்றப்பட்டது.
  • 1975: காமராசர் நினைவகத்திற்காக மாற்றப்பட்டது.
  • 1977: தேசிய பூங்கா அமைக்க வனத்துறைக்கு மாற்றப்பட்டது.

தவிர, அடையாறு ஆறு அண்மையிலும் ஈக்காட்டுத்தாங்கல் அண்மையிலும் 8.63 ஏக்கர் கொண்ட இரு நிலப்பகுதிகள் ராசபவனுக்கு சொந்தமானவை. இங்கு ஆளுனர் மாளிகை பாவனைக்கான நீரேற்று நிலையங்கள் உள்ளன.

ஆளுனர் மாளிகை பகுதியில் மான்கள்(புள்ளிமான்கள்,பிளாக் பக்,அல்பினோ),கீரிகள்,நரிகள் மற்றும் பல ஊர்வன / பறப்பன உள்ளன. இடம் பெயரும் பறவைகளையும் பறவை கவனிப்பவர்கள் கண்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுனர்_மாளிகை&oldid=3357639" இலிருந்து மீள்விக்கப்பட்டது