இலவச இலத்திரனியல் பொருட்கள் (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலத்திரனியல் பொருட்கள்
தற்கால வீட்டு தளபாடங்கள்
தற்கால வீட்டு தளபாடங்கள்
சம் சுயி போவில் அகற்றும் பொருட்களை சேகரிக்கும் ஒரு சமுகசேவை நிறுவனம்

இலவச இலத்திரனியல் பொருட்கள் அல்லது இலவச தளப்பாடப் பொருட்கள் என்பது ஹொங்கொங்கில் பணம் இன்றிப் பெற்றுக்கொள்ள கூடிய பொருட்களாகும். இவ்வாறு இலவசமாகப் பொருட்களைக் கொடுப்போருக்காக, இலவசமாக விளம்பரம் செய்துக்கொள்ளும் வசதியையும் ஹொங்கொங்கில் சில செய்தித்தாள்களும், சில இணையத்தளங்களும் வழங்குகின்றன.[1][2] அவற்றில் ஹொங்கொங் வாழ் மக்கள் மத்தியில் எல்லோருக்கும் தெரிந்த தளமாக ஏசியா எக்சுபட் எனும் தளம் குறிப்பிடத்தக்கது; அத்தளத்தில் ஒவ்வொரு நாளும் இலவசப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கும்[3].

கிடைக்கும் பொருட்கள்[தொகு]

அவ்வாறு இலவசமாக வழங்கும் பொருட்களில் கணினி, மடிக்கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வீட்டுக்குளிரூட்டி, சூடேற்றி போன்ற அனைத்து இலத்திரனியல் பொருட்களும் உள்ளடங்கும். தற்கால வீட்டு மற்றும் அலுவலகத் தளபாடப் பொருட்களும் கூட ஒவ்வொரு நாளும் விளம்பரப்படுத்தப் படுகின்றன. இவற்றை இந்தியா, பாக்கித்தான், இலங்கை போன்ற நாட்டவர்கள் இவ்விளம்பரங்களை பார்த்துச் சென்று, தமக்கு தேவையானவற்றை வேண்டி தமது நாடுகளுக்கு அனுப்பி வைப்பதும் உண்டு. ஹொங்கொங்கிலேயே வாங்கிப் பயன்படுத்துவதும் உண்டு. இன்னும் ஹொங்கொங்கிலேயே நிரந்தர வதிவுரிமைப் பெற்று, நல்ல வருமானம் பெறுவோரும், பணம் கொடுத்து இலத்திரனியல் பொருட்களை வாங்க விரும்பாமல், தமக்கு தேவையான பொருட்கள் இலவசமாக கிடைக்கும் வரை காத்திருப்பதனையும் காணக்கிடைக்கிறது.

இலவசமாகக் கொடுப்பதற்கான காரணங்கள்[தொகு]

  • ஹொங்கொங் பொருளாதார வளர்ச்சியில் அதியுயர் வளர்ச்சிமிகு நாடாகும். மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் உயர்ந்தது. அதனால் உலகில் அறிமுகமாகும் புதியப்புதிய இலத்திரனியல் பொருட்களை உடனுக்குடன் வாங்க வேண்டும் எனும் எண்ணம் கொண்ட தரப்பினர் உள்ளனர். அவ்வாறானவர்கள் தாம் ஏற்கனவே வாங்கப்பட்ட பொருட்களை இலவசமாக கொடுத்துவிட முனைகின்றனர்.
  • பணம் கொடுத்து வாங்கியப் பொருட்கள் பின்னர் பிடிக்காமல் போனால் அவைகளும் இலவசமாகக் கொடுக்கப்பட்டுவிடும்.
  • வசிப்பிடம் மாறும் போது அநேகமானோர் வீட்டின் அனைத்து பொருட்களையும் தற்காலப் புதிய வசதியுடன் கூடிய பொருட்களை வாங்க விரும்புவதால், ஏற்கனவே பயன்படுத்திய முழு வீட்டுப் பொருட்களுமே இலவசமாகக் கொடுக்கப்பட்டுவிடும்.
  • சில உயர் மட்டத் தொழில்களில் இருப்போருக்கு தற்கால இலத்திரனியல் உட்பட அனைத்து பொருட்களும், தாம் பணிப்புரியும் நிறுவனம் வழங்குவதால், (வீடும் உட்பட) நிறுவன மாற்றம் ஆகும் போது அவை இலவசமாக கொடுக்கப்பட்டுவிடும்.
  • புதிதாக ஒரு பொருளை வாங்கியவுடன் அவற்றை அப்புறப்படுத்துவதில் உள்ள சிரமம் காரணமாக இலவசமாக கொடுக்க முன்வருவோரும் உள்ளனர். குறிப்பாக இவை அளவில் பெரியதான வீட்டுத் தளப்பாடப் பொருட்களாக இருக்கும். அவ்வாறான பொருட்களை சென்று இலவசமாக பெறுவோருக்கு வாகணக் கட்டனத்தையும் அவர்களே இலவசமாக வழங்குவதாக அறிவிப்பவர்களையும் அவதானிக்க முடிகிறது.

இவ்வாறு இலவசமாக வழங்குவதாக விளம்பரப்படுத்தியும் எவரும் வாங்கவில்லையாயின், குறிப்பிட்ட பொருட்களின் உரிமையாளர்கள் மேலதிகமாக தங்கள் கையில் பணத்தை செலவிட்டு வீட்டுப் பொருட்கள் அப்புறப்படுத்தும் நிறுவனங்களை நாடுவதும் காணப்படுகின்றன. அத்துடன் இவ்வாறான இலவசப் பொருட்களை வாங்கி வறுமையான நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் சமூக சேவை நிறுவனங்கள் முதல், உள்ளூரில் மிகவும் குறைந்த விலையில் வசதி குறைந்தோரின் நலன் கருதி விற்பனை செய்யும் சமூக சேவை கடைகள் வரை ஹொங்கொங் எங்கும் காணப்படுகின்றன.

சமூக சேவை நிறுவனங்கள்[தொகு]

ஹொங்கொங்கில் இவ்வாறான நிலை இருப்பதால், ஹொங்கொங்கில் வாழ்வோர் எவருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத நிலை பெரும்பாலும் இல்லை எனலாம். அத்துடன் அடிப்படை வசதியற்றோர் என்றால், தேடிச் சென்று அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க சமூகசேவை நிறுவனங்களும் காத்துக்கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.totallyfreestuff.com/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-26. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.
  3. http://hongkong.asiaxpat.com/classifieds/free/

வெளியிணைப்புகள்[தொகு]