லித்தியம் மின்கலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லித்தியம் மின்கலன் (Lithium battery) என்பது குறைந்த எடையும் அதிக ஆற்றலும் கொண்ட நீடித்து உழைக்கக் கூடிய ஒரு மின்கலன் ஆகும்.கைக்கடிகாரம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இது நாணய வடிவில் தயாரிக்கப்படுகிறது. ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள லித்தியம் இக்கலத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஒரு முறை இவை ஆற்றலிழந்ததும்; மீண்டும் திறனேற்றி இவற்றைப் பயன்படுத்த முடியாது. ஆனால் லித்தியம்-அயனி மின்கலன்களோ மீண்டும் மீண்டும் திறனேற்றிப் பயன்படுத்தும் விதத்தில் அமைந்தவையாதலால் மடிக்கணிணி, செல் பேசி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லித்தியம்_மின்கலன்&oldid=1378618" இலிருந்து மீள்விக்கப்பட்டது