ராணா பிரசாத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராணா பிரசாத் சிங், அல்லது ராணா பிரசாத் சிங் சோதா 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமர்கோட் பகுதியை ஆண்டு வந்தார். இவர் காலத்தில் இவரது ஆட்சிப் பகுதியில் நீண்ட காலம் அமைதி நிலவியது. இக் காலத்தில், முகலாயப் பேரரசன் உமாயூன், சேர் சா சூரியுடனான போரில் தோல்வியுற்றுத் தற்காலிகமாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் ராணா பிரசாத் சிங் ஆவார். பிற்காலத்தில் புகழ்பெற்ற முகலாயப் பேரரசனும், உமாயூனின் மகனுமான அக்பர் பிறந்தது அமர்கோட் கோட்டையில், உமாயூன், ராணா பிரசாத் சிங்கின் ஆதரவில் வாழ்ந்தபோதே ஆகும். பேரரசர் அக்பர் இந்து மதத்தின் மீது தாராண்மை கடைப்பிடித்ததற்கான காரணங்களில் ராணா பிரசாத் சிங்கின் பங்கும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பின்னர் உமாயூனும், குடும்பத்தினரும் பாரசீகத்துக்குச் செல்வதற்குத் தனது எல்லை வரை பாதுகாப்புக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

ராணாபிரசாத் சிங்கின் தலைமுறையினர்[தொகு]

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் அமர்கோட்டின் பெரும்பகுதி இன்றைய பாகிசுத்தான் பகுதிக்குள் அடங்கிவிட்டாலும், ராணா பிரசாத் சிங்கின் தலைமுறையினர் அங்கு வாழ்ந்து வருகின்றனர். ராணா பிரசாத்த் சிங்கின் தலைமுறையைச் சேர்ந்த ராணா சந்திர சிங் பாகிசுத்தான் தேசிய சபையில் உமர்கோட் தொகுதியின் உறுப்பினராக ஒன்பது தடவை இருந்துள்ளார். இவர் பாகிசுத்தானின் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், வருமானத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • ஆர்சு வர்தன், Rendezvous with Rana, 21 ஆகத்து 2009 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_பிரசாத்_சிங்&oldid=2041780" இலிருந்து மீள்விக்கப்பட்டது