அய்யாவழி மும்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாவழி திரித்துவம், அல்லது அய்யாவழி மும்மை, அய்யா வைகுண்டர் எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் கலியை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது.

முதலில் வைகுண்டரின் அவதார உடல் தெய்வ லோகவாசியாக இருந்து பூஉலகில் பிறந்த சம்பூரண தேவனின் உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் நாராயணர் சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் சீவன் முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் ஏகப்பரம்பொருள் வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார்.

ஆதாரம்[தொகு]

  • அமலன், அய்யா வைகுண்டர் புனித வரலாறு,
  • அரி சுந்தரமணி, அகிலத்திரட்டு அம்மனை பாராயண உரை, அய்யா வைகுண்டர் திருக்குடும்ப பதிப்பகம், 2002.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாவழி_மும்மை&oldid=2650386" இலிருந்து மீள்விக்கப்பட்டது