பாரதசக்தி மகாகாவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதசக்தி மகாகாவியம் கவியோகி சுத்தானந்த பாரதியால் இயற்றப்பட்ட 50,000 அடிகளால் ஆன ஒரு பெருங்காவியம் ஆகும்.

இக்காப்பியம் சித்தி காண்டம், கௌரி காண்டம், சாதன காண்டம், தானவ காண்டம், சுத்த சக்தி காண்டம் என்னும் 5 காண்டங்களையும் 136 படலங்களையும் கொண்டுள்ளது. கலிவிருத்தம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை, இன்னிசை, ஆசிரியப்பா, குறள் வெண்பா ஆகிய பலவகை யாப்பு வடிவங்கள் இக்காப்பியத்தில் கையாளப்பட்டுள்ளன.

இக்காப்பியத்தில் இராமதாசர், குருநானக், சொராஷ்டிரர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், கௌதம புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள் நாயகம், கபீர்தாசர், வேத முனிவர்கள், தயானந்த சரசுவதி, ஆதி சங்கரர், மெய்கண்டார், அப்பர், மாணிக்கவாசகர், வள்ளலார், அரவிந்தர், சிவானந்தர் ஆகிய ஆன்மிகப் பெருமக்களின் வாழ்வும் பிம்பிசாரர், அசோகர், சிவாஜி, தேஜ் பகதூர், குரு கோவிந்த் சிங் பிரதாப் சிங், திருமாவளவன், சேரன் செங்குட்டுவன், இளஞ்செழியன், மாஜினி, கரிபால்டி, லெனின் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகிய வரலாற்று மாந்தரின் வாழ்வும் இடம்பெறுகிறது.

இவற்றையெல்லாம் முதலில் சொல்லிவிட்டுக் கதை இருபதாம் நூற்றாண்டில் நடப்பதாய் ஆரம்பிக்கிறது. கதை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் போராட்டத்தில் இறுதியில் தீமையைத் திருத்தி நன்மை வெல்வதாய் அமைகிறது. சுத்தன், சத்தியன், சித்திமான், போகன், சாந்தன், பாரத முனி, கௌரி, சுந்தரி, சக்தி ஆகிய காவிய மாந்தர்கள் நன்மையின் சார்பிலும் தீமையின் சார்பில் மாவலி, மோகி, கலியன், தூமகேது, துன்மதி ஆகியோரும் சித்திரி்க்ப்பட்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதசக்தி_மகாகாவியம்&oldid=2423156" இலிருந்து மீள்விக்கப்பட்டது