பேச்சு:அயோத்தி பிரச்சினை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் பலமான பரப்புரை நெடி உள்ளது, தவி அதற்கு உகந்த தளம் அல்ல. கலைக்களஞ்சிய கட்டுரைக்கு ஏற்றவாறு மாற்றவேண்டும். --குறும்பன் 19:06, 7 டிசம்பர் 2009 (UTC)

வெறும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு பரப்புரையை நீக்கி விட்டேன்--சோடாபாட்டில் 06:25, 29 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

பிறழ்ச்சனை[தொகு]

வணக்கம், இன்பம்குமார்...! பிரச்சினை என்பது சரியான தமிழ் வார்த்தைதான்! அதனை 'பிறழ்ச்சனை' என பல இடங்களில் நீங்கள் மாற்றிவருவது... பிரச்சினையில் முடியும்! இங்கு பார்க்க: [[1]] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

பிரச்சனை என்பது தமிழ்ச் சொல் தான். ஆனால், பேச்சு வழக்கில் பிறழ்ச்சனை என்பதையே பிரச்சனை என்று மொழியப்பட்டு தற்போது அதனை சமசுகிருத ஒலிப்பிலே தான் பேசிவருகிறோம். இதனைச் சுட்டிக்காட்டவே நான் அவ்வாறு செய்தேன். --இராஜ்குமார் (பேச்சு) 08:42, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
பிரச்சனை என்பது தூயதமிழ்ச் சொல் அல்ல, வடமொழி தழுவியது. அதேபோல பிறழ்ச்சனையும் தமிழ்ச்சொல்லா என்பது ஐயமே. இணையத்தில் தேடியபோது இராம.கி ஐயா மட்டுமே இதனைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. வேறு நல்லத் தமிழ்ச் சொல்லாகத் தாருங்கள். அல்லது பிரச்சனையாகவே இருக்கட்டும்.--Kanags \உரையாடுக 08:47, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
திண்ணை வலைப்பக்கங்களிலும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். "பிறழ்ச்சனை" என்ற தமிழ்ச் சொல்லை தழுவியதே பிரச்சனை என்ற வடமொழிச் சொல். பிறகு நாம் மீண்டும் வடமொழியிலிருந்து கடன்வாங்கி பிரச்சனை என்று குறிப்பிடுகிறோம். 'ழ்'என்ற ஒலியை மெதுவாக ஒலித்து பாருங்கள். இரு சொல்லும் ஒரே சொல்லாகும். இது யானை ஆனையாக ஒலிப்பதைப் போன்றது. --இராஜ்குமார் (பேச்சு) 08:59, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
இல்லையெனில் 'பிறழ்ச்சிகள்' என்று கூட சொல்லலாம். 'காஷ்மீர் பிறழ்ச்சிகள்', 'அயோத்தி பிறழ்ச்சிகள்' என்றும் மாற்றலாம். இன்னும் வேண்டுமானால் பிறழ்வு, பிறழ்வினை, பிறழ்ந்தவை என்று எத்தனையோ சொற்கள். எது நன்கு பொருந்தும் என பார்க்கவேண்டும்.--இராஜ்குமார் (பேச்சு) 09:24, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
பிரச்சனை அல்லது பிரச்சினை என்றே எழுதலாம். பிரச்சனை என்றால் "கேள்வி" என்றே பொருள் (வடமொழியில்). ஆனால், நாம் தமிழில் குறிப்பிடும் பொருள் "சிக்கல்", "சண்டை", "கருத்துவேறுபாடு", "மாறுபாடு" என்பதே. பிறழ்-பிறழ்ச்சி என்பன நல்ல தூய தமிழ்ச்சொற்கள், ஆனால் மாறுபாடு என்பதற்கு ஈடாக இங்கு ஆள்வது புது வழக்காக இருக்கும். அது கூடாது என்று சொல்லவில்லை. தமிழில் சிக்கல் என்னும் சொல் பிரச்சனை என்பதற்குப் பல இடங்களிலும் பொருந்துவது. எனவே பிரச்சனை அல்லது சிக்கல் என்பதைப் பயன்படுத்தலாம்.--செல்வா (பேச்சு) 20:55, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

பிறழ்வினைகள்[தொகு]

அயோத்தி பிறழ்வினைகள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும். --இராஜ்குமார் (பேச்சு) 10:52, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

அதே போல், காசுமீர் பிறழ்வினைகள் என்பதையும் பரிந்துரைக்கிறேன். --இராஜ்குமார் (பேச்சு) 10:57, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
problem என்பதற்கான தமிழ்ச் சொல்லே பிறழ்வினை. இதனை கணிதத்துறையிலும் பயன்படுத்த பொருத்தமாக இருக்கும். --இராஜ்குமார் (பேச்சு) 11:00, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
சிக்கல், பிரச்சினை என்ற வழக்கத்தில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாக நாம் புதியாக சொற்களைப் பயன்படுத்துவது இங்கு பொருந்தவில்லை. --Natkeeran (பேச்சு) 18:21, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம். இவ்வாறு செய்வதாயின் ஆலமரத்தைட்யில் உரையாடி பிற கருத்துக்கள் பெற்று செய்யவும். தற்போது மீண்டும் பழைய மாதிரி மாற்றி உள்ளேன். --Natkeeran (பேச்சு) 18:30, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
நன்றி. நற்கீரன். --இராச்குமார் (பேச்சு) 18:32, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]