பேச்சு:இந்தியா நிலக்கரி நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா நிலக்கரி நிறுவனம் எதிர் இந்திய நிலக்கரி நிறுவனம். எது சரி?--இரவி 10:03, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இந்திய நிலக்கரி நிறுவனம் -- சுந்தர் \பேச்சு 10:14, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நிறுவனங்களின் பெயர்களை மொழிபெயர்ப்பது சற்று கடினமானதுதான். தமிழில் இந்திய நிலக்கரி நிறுவனம் என்பதே சரியாகவிருக்கும்.இருப்பினும் நாளையே மற்றொரு நிறுவனம் Indian Coal Ltd என்று வந்தால் அதுவும் இந்திய நிலக்கரி நிறுவனம் என்றே கூறவேண்டி வரும். எனவே கோல் இந்தியா நிறுவனம் என்றே கூறலாம்.அல்லது அதே வண்ணம் நிலக்கரி இந்தியா நிறுவனம்...? --மணியன் 10:15, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஆம், இந்தக் குழப்பம் வங்கிகளில் உள்ளது. Bank of India Vs Indian Bank. Indian bank என்பதை இந்தியன் வங்கி என்று எழுதினாலும் இரண்டு வங்கிகளும் ஒரே பொருள் தருவன தான். நிலக்கரி இந்தியா நிறுவனம் என்பது நேரடியான தமிழாக்கமோ என்று தயக்கமாக உள்ளது--இரவி 10:42, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பொதுவாகத் தமிழில் புழங்கும் நிறுவனங்களைத் தவிர ஏனைய நிறுவனங்களின் பெயர்களை விக்கியில் மொழிபெயர்க்காமல் எழுதுவதே வழமையானது. கோல் இந்தியா நிறுவனம் (அல்லது கோல் இந்தியா லிமிட்டெட்) எனவே எழுதலாம்.--Kanags \உரையாடுக 10:59, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]