சங்லங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்லங் மாவட்டம்
சங்லங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்சங்லங்
பரப்பு4,662 km2 (1,800 sq mi)
மக்கட்தொகை147,951 (2011)
படிப்பறிவு61.9%
பாலின விகிதம்914
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
துத்சா நடனம், சங்லங் மாவட்டம்

சங்லங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி 148,226 பேர் வாழ்கின்றனர். இது அருணாசலப் பிரதேசத்தில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டம் அருகில் உள்ள திராப் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 14, 1987 ஆம் ஆண்டு பிரித்து உருவாக்கப்பட்டது.

அமைப்பு[தொகு]

இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது. சாங்லோங், மியாஓ, ஜெய்ராம்பூர், போர்தும்சா, கிமியாங், நம்டோக், யத்டம், கார்சங், விஜயோநகர், நம்போங், மன்மாஒ, ரீமா புதக், போர்தும்சா, டியூன்.

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான துட்சா, தங்கசா, நோக்டே, சிங்போ மற்றும் லிசு இனத்தை சேர்ந்தவர்களே. திபெத் நாட்டில் இருந்து அகதிகளாக வந்த மக்களும் இங்கு வசிக்கின்றனர்.

மொழி[தொகு]

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

நம்தபா புலிகள் சரணாலயம் இந்த மாவட்டத்தின் மியாஓ நகரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்லங்_மாவட்டம்&oldid=3372534" இலிருந்து மீள்விக்கப்பட்டது