காமவல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமவல்லி
இயக்கம்மாணிக்கம்
தயாரிப்புபாஸ்கர் பிக்சர்ஸ்
கதைகதை புதுமைப்பித்தன்
ராஜகோபால பாகவதர்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புநாகர்கோவில் கே. மகாதேவன்
டி. எஸ். துரைராஜ்
ராஜகோபால பாகவதர்
வி. எம். ஏழுமலை
சி. டி. கண்ணபிரான்
எஸ். வரலட்சுமி
சி. கிருஷ்ணவேணி
டி. எஸ். ஜெயா
அங்கமுத்து
வெளியீடுமார்ச்சு 20, 1948
ஓட்டம்.
நீளம்14560 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காமவல்லி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புதுமைப்பித்தன் கதை, உரையாடல் எழுத, மாணிக்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

தியான சந்திரன் என்ற கவிஞன் தன் மனைவி நந்தினியோடு ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறான். தியான சந்திரனின் புலமையைக் கேள்விபட்ட மன்னன் அவனுக்கு அரசவையில் பதவி தருகிறான். முதியவனான அந்த அரசனின் இளம் மனைவிக்கு தியான சந்திரனின் மீது மோகம் ஏற்படுகிறது. அவனிடம் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயலும் அரசி அதில் தோல்வியடைகிறாள். இதனால் கோபமுற்ற அரசி தியான சந்திரன் தன்னை வல்லுறவு கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டுகிறாள். தீரவிசாரிக்காத மன்னன் கவிஞனை சிரச்சேதம் செய்ய கட்டளை இடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 24 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-10 சிறுகதை சாம்ராட் புதுமைப்பித்தன்". தினமணி கதிர். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமவல்லி&oldid=3723791" இலிருந்து மீள்விக்கப்பட்டது