விக்கிப்பீடியா பேச்சு:மேற்கோள் சுட்டுதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்போது நான் இட்டிருப்பது வெறும் துவக்கமே. இதை தகுந்த எடுத்துக்காட்டுக்கள் மற்றும் மேற்கோள்களின் (!) துணைகொண்டு மேம்படுத்தவேண்டுகிறேன். அதன்பின் இதை ஒரு வழிகாட்டுதலாகவோ கொள்கைப் பக்கமாகவோ அறிவிக்கலாம். -- Sundar \பேச்சு 16:17, 2 டிசம்பர் 2007 (UTC)

ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்க்கும் போது ஆங்கில கட்டுரையின் ஊடே Embed (<ref>...</ref>) செய்தவற்றை இழந்துவிடுதும் நிலையில்(கட்டுரைகளை வேகமாக இயற்ற வேண்டி,மேற்கோள்களை தமிழ் உரையின் ஊடே நான் பெரும்ப்பாலும் இடுவதில்லை), மேற்கோள்கள் தமிழ்க்கட்டுரைகளில் காணக்கிடைப்பதில்லை. அந்த நிலையில் மேற்கோள்களை காட்டுவது கடினமாகிறது. பாட் மூலம் ஏதாவது மேற்கோள்களை மீண்டும் உரையின் ஊடே இடுதல் சாத்தியமா? வினோத் 16:20, 2 டிசம்பர் 2007 (UTC)

பார்க்க: பயனர்:Sundar/refsync.pl. பெர்ள் கொண்டு நிரல் செய்துள்ளேன். ஏனோ மாற்றங்களை இற்றைப்படுத்த மாட்டேன் என்கிறது. நேரம் கிடைக்கும்போது சரி செய்வேன், தற்போதைக்கு புகுத்திய மேற்கோள்களுடன் திரையில் பிரிண்ட் செய்யும். -- Sundar \பேச்சு 08:51, 3 டிசம்பர் 2007 (UTC)

Well. I just gave a look at the Program its all Greek and Latin Anyway :-). Bcoz My Knowledge of Perl is Minimum(I Studied in my Web Tech)So, How do I actually Run the Program ?. Actually I am new to this Wiki Stuff, it would be great if u cud help me around. Can it be written in Java(I suppose u can develp bots using Java too. Just took a peek abt the wiki JAVA API). வினோத் 09:31, 3 டிசம்பர் 2007 (UTC)

  • Copy the text in the box in that page and save it as refsync.pl
  • Run it as "perl refsync.pl 'Tamil people' 'தமிழர்'"
It assumes that the references in the English article are exactly aligned (equal in number and in corresponding positions) with that of the Tamil article. This assumption is not true for the Tamil people article but could be true if we copy text from English wiki and translate the non-ref part, leaving empty "<ref></ref>" tags in Tamil wiki. -- Sundar \பேச்சு 10:58, 3 டிசம்பர் 2007 (UTC)

P.S. If WWW::Mechanize is not installed, one needs to install it from here.

== ஆதாரங்களைத் தருதல் உள்ளடக்கம் ==[தொகு]

தமிழ் விக்கிபீடியாவின் Wikipedia:மெய்யறிதன்மை கொள்கைக்கிணங்க கட்டுரைகளுடைய தகவல்களை உறுதிப்படுத்த ஆதாரங்களைத் தருவது முக்கியம். இந்தக் பக்கம் எப்படி ஆதாரங்களை தருவது, எவற்றுக்கெல்லாம் ஆதாரம் தருவது தேவை போன்றவற்றின் வழிமுறைகளை விளக்கும்.

அருகாமை[தொகு]

அருகாமை என்பது அருகில் என்பதற்கு அருகில் என்பதற்கு எதிர்மறைப்பொருள் என இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெப்ரீசியஸ் அகரமுதலியில் அருகில் என கொடுக்கப்பட்டுள்ளது. --Sivakumar \பேச்சு 06:38, 5 டிசம்பர் 2007 (UTC)


மேற்கோள் சுட்டு தருவது பற்றி ஒரு குறள் வெண்பா[தொகு]

மேற்கோள் சுட்டு தருவது பற்றிய பரிந்துரைகள் சிலவற்றை தொகுத்து ஒரு சிறு குறள்வெண்பா யாத்துள்ளேன். உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் :)

எத்தகு சான்றுகோள் எப்போ(து) எதற்காக
ஏனென் றறிந்துசேர் சுட்டு
      - செல்வா (ஏப்ரல் 20, 2009)

--செல்வா 13:21, 20 ஏப்ரல் 2009 (UTC)

அருமையான குறட்பா, செல்வா! அலகீட்டு வாய்ப்பாட்டுக்கு இணங்க எவ்வாறு எழுதுகிறீர்கள்? இசைபட எழுதுகையில் தானாக இணங்கி வந்துவிடுகிறதா? -- சுந்தர் \பேச்சு 13:50, 20 ஏப்ரல் 2009 (UTC)
சுந்தர் நான் வெண்பாக்களை என் 13 ஆவது அகவையில் இருந்து எழுதி வருகிறேன். இடையே நெடுங்காலம் எழுதாமல் இருந்ததால் முன்போல் பொருள்நயம், சொல்நயம், ஒலிமிடுக்கு மிகுந்ததாக எழுத வருவதில்லை (பெரும்பாலும்). ஆனால் அவை இல்லாவிட்டாலும் எப்பொழுதும் இலக்கணத்தோடு எழுத இயலும். செப்பல் ஓசையை உள்வாங்கிக்கொண்டால் ஓரளவுக்கு சந்தப்படியே எழுத இயலும். தனதன தந்தானே தானே தனனே என்று எண்ணினால் சந்தங்கள் எளிதாகப் பிடிபடும். அப்பர் தேவாரத்திலும் பிற பழைய பாடல்களிலும் இப்படி சந்தத்தை வெளிப்படையாக சுட்டியும் உள்ளனர். தமிழில் இசை என்பது மொழியோடு இயைந்த ஒன்று. இசையும் யாப்பும் நெருங்கிய தொடர்புடையது. பாராட்டுக்கு நன்றி, சுந்தர் :) --செல்வா 14:05, 20 ஏப்ரல் 2009 (UTC)
ஓ, 13 ஆவது அகவையிலிருந்தா, அருமை. இப்போதைக்கு வெண்பா சரிபார்ப்பதை கணினிக்குச் சொல்லிக் கொடுக்க மட்டுமே செய்துள்ளோம். :) -- சுந்தர் \பேச்சு 15:43, 20 ஏப்ரல் 2009 (UTC)

பயனுடைய கருவி[தொகு]

சுந்தர், நீங்கள் இணைத்த இக்கருவி மிகவும் பயனுடையது! சில பப்'மெட்' (PubMed) அடையாள எண்ணை இட்டு மெய்த்தேர்வு செய்தேன், மிக அழகாக விக்கி முறையில் சான்றுகோள் குறிவரிகளைத் தருகின்றது. மிக்க நன்றி.--செல்வா 02:46, 8 ஜூலை 2009 (UTC)

நல்லது செல்வா. மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 07:13, 8 ஜூலை 2009 (UTC)

ஆங்கில அகரமுதலிச் சான்றுகள்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளின் தொடக்கத்தில் அத்தலைப்புக்குச் சான்றாக அகரமுதலிகள் சுட்டப்படுகின்றன. இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதும் போதும் அச்சான்றுகளை அப்படியே விட்டு விடுகிறோம். எடுத்துக்காட்டுக்கு, வானவில் என்று கட்டுரையில் Rainbow என்ற ஆங்கிலச் சொல்லுக்கான விளக்கத்தைச் சான்றாகத் தருதல். இதனைத் தவிர்க்க வேண்டும் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 05:52, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]