ஸ்கந்தகிரி

ஆள்கூறுகள்: 13°25′03″N 77°40′58″E / 13.41750°N 77.68278°E / 13.41750; 77.68278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனத்துறை அலுவலகம்
முட்டென்னஹல்லியிலிருந்து மலையின் தோற்றம்

ஸ்கந்தகிரி (Skandagiri, Kalavara Durga) பெங்களூரிலிருந்து தோராயமாக 62கி.மீ. தொலைவிலும் இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் என்ற இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஒரு பழமைவாய்ந்த மலைக்கோட்டை[1] ஆகும். அது பெல்லாரி சாலை (NH-7 ஹைத்ராபாத்-பெங்களூர் நெடுஞ்சாலை)யிலிருந்து சற்று தொலைவிலும் நந்தி மலை மற்றும் முட்டென்னஹல்லியைப் பார்த்தவாறு உயரத்திலும் அமைந்துள்ளது. மலை உச்சி 1450 மீட்டர் உயரம் கொண்டது. கலவாரா கிராமத்திலிருந்து இம்மலைக்குச் செல்லலாம். 2011 ஆண்டின் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கட்தொகை 1093 ஆகும்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. http://geography.about.com/library/faq/blqzmtnheight.htm
  2. "Kalavara Village Population - Chikkaballapura - Chikkaballapura, Karnataka".
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்கந்தகிரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கந்தகிரி&oldid=3670985" இலிருந்து மீள்விக்கப்பட்டது