அலெக்ஸ் பிளாக்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்ஸ் பிளாக்வெல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக்ஸ் பிளாக்வெல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்பிப்ரவரி 15 2003 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசூலை 10 2009 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்சனவரி 29 2003 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 15 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20 ப XI
ஆட்டங்கள் 7 76 18 86
ஓட்டங்கள் 225 1724 236 2376
மட்டையாட்ட சராசரி 18.75 31.92 19.66 38.32
100கள்/50கள் 0/2 2/11 0/0 4/16
அதியுயர் ஓட்டம் 68 106* 40* 138
வீசிய பந்துகள் 72 132 6 288
வீழ்த்தல்கள் 0 6 0 2
பந்துவீச்சு சராசரி 10.50 114.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0/1 2/8 0/14 1/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 26/– 9/– 26/–
மூலம்: CricketArchive, மார்ச்சு 23 2010

அலெக்ஸ் பிளாக்வெல் (Alex Blackwell, பிறப்பு: ஆகத்து 31 1983), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் நியூசவுத் வேல்சு, பெர்க்‌ஷயர் , ஒடாகோ அணிகள் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 15 இல் பிரிசுபேனில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து நியூடன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. அதில் ஆறு ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 85 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது.[1]

பின் 2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவமபர் 9 இல் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 35 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து எக்கிள்ஸ்டடோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப்போட்டி சமனில் முடிந்தது.[2]

2005 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்[தொகு]

2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பெண்கள் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார். அந்தத் தொடரில் அவர் 24 ஓட்டங்கள் எடுத்தார். அவரின் மட்டையாட்ட சராசரி 26.75 ஆகும். அதன் பின் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் விளையாடினார்.[3]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 29 இல் லிங்கனில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரானநான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவருக்கு மட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 7 இலக்குகளால் வெற்றி பெற்றது[4]

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி பெண்கள் வாகையாளர் கோப்பையில் அக்டோபர் 29 இல் காஃப்ஸ் ஹார்பரில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்ராவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 44 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து கன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி 20 ஓட்டங்களில் டக் ஒர்த் லீவிஸ் முறையில் வெற்றி பெற்றது.

பன்னாட்டு இருபது20[தொகு]

2005 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 2 இல் டான்டனில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஒந்தப் போட்டியில் 38 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய பெண்கள் அணி 7 இலக்களால் வெற்றி பெற்றது.[5]

சான்றுகள்[தொகு]

  1. "முதல் போட்டி". பெப்ரவரி 15, 2003. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "இங்கிலாந்துக்கு எதிரான போட்டி". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 9, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Player Oracle AJ Blackwell". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.
  4. "இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி". பார்க்கப்பட்ட நாள் January 29, 2003. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "முதல் ப இருபது20". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_பிளாக்வெல்&oldid=3927265" இலிருந்து மீள்விக்கப்பட்டது