நடமாடும் பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடமாடும் பள்ளிகள் (Mobile schools) எனும் புதுமை கருத்து பிரடரிக் ஜே. மக்டோனால்ட் (Frederick J. McDonald) எனும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. "சமூக சூழலில் பட்டறிவை பெறுவதே உண்மையான கல்வி" என்ற கருத்தே இப்பள்ளிகள் தோன்ற காரணமாய் அமைந்தது. இப்பள்ளிகளில் வகுப்பறையைவிட்டு மாணவரை வெளியே அழைத்துச்சென்று சமூக நடவடிக்கைகளை கண்ணுறவும், அதில் பங்கேற்கவும்,பாடம் தொடர்புடைய களங்களுக்குச் சென்று நேரடி அனுபவங்களை பெறவும் வாய்பளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நடமாடும் பள்ளிகள்[தொகு]

இந்தியாவிலுள்ள நடமாடும் பள்ளிகள் மக்டோனால்ட் பள்ளிகளிலிருந்து மாறுபட்ட நோக்கங்களை கொண்டுள்ளன. "பள்ளியை நோக்கி குழந்தை" என்ற நிலையை மாற்றி "குழந்தையை நோக்கி பள்ளி" என்ற புதுமை கருத்தினை உயிர்பெறச்செய்துள்ளன. இப்பள்ளிகளை முதன்முதலாக யுனிசெஃப் நிறுவனம் இந்தியாவிலுள்ள தெருவோர குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக மத்தியபிரதேசத்தின் சில நகரங்களில் அறிமுகப்படுத்தியது.இப்பள்ளிகள் கரும்பலகை மற்றும் கற்பித்தல் பொறுட்களடங்கிய வாகனம் (Bus or Van)மற்றும் வகுப்பறைகளாக தடுக்கப்பட்ட வாகனம் போன்ற வளங்களை கொண்டுள்ளன. இவை மாலை நேரங்களில் தெருவோர குழந்தைகள் அதிகம் வசிக்கும் இடங்களுக்குச் சென்று கல்வியளிக்கின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) நாடெங்கிலும் நடமாடும் முகாம்களை நடத்தி தெருவோர குழந்தைகளுக்கு கல்வியளிக்க முயல்கிறது.தற்போது மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் சில அரசுசாரா தொண்டுநிறுவனங்கள் இப்பள்ளிகளை சிறப்பாக நடத்திவருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • வே.அறிவன் மணிமுத்து,"கல்விப் புதுமைகள்"-2009
  • முனைவர்.கி.நாகராஜன்,"கல்விப் புதுமைகளும் மேலாண்மையும்"-2009
  • J.C.Aggarval,Educational Technology-2003.
  • www.ssa.nic.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடமாடும்_பள்ளிகள்&oldid=1249710" இலிருந்து மீள்விக்கப்பட்டது