புகைபிடிப்பவரின் இருமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகைப்பழக்கம் உள்ளோரிடம் மட்டுமே காணப்படும் ஒருவகை இருமல் புகைபிடிப்பவரின் இருமல் (Smoker's Cough) எனப்படுகிறது. மனித மூச்சுக்குழாய் (trachea) சிறிய முடி போன்ற சிலியாக்கள் கொண்ட எபிதீலியத்தாலானது. இவற்றின் ஒருங்கிணைந்த இயக்கமானது சுவாசப் பாதையில் நுழையும் அந்நியப் பொருட்களை மேல் நோக்கித் தள்ளும். இவ்வாறாக சளி காறித் துப்பப்படும் அல்லது விழுங்கப்படும். புகைக்குழல் (cigarette) புகை இந்த முக்கியத்துவம் வாய்ந்த சிலியாக்களை செயலிழக்கச் செய்கிறது. ஆகவே இருமினால் மட்டுமே சளி வெளியே வரும். நாளடைவில் நிரந்தரமான இருமலாய் இது மாறிவிடும். சளி கிட்டத்தட்ட பச்சை நிறத்திலிருக்கும்.