அ. நாகலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாசலம் நாகலிங்கம்
பிறப்புபெப்ரவரி 25, 1901
காரைநகர், யாழ்ப்பாணம்
இறப்புமார்ச்சு 19, 1979(1979-03-19) (அகவை 78)
காரைநகர், யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுசாம்பசிவம்-ஞானாமிர்தம் (1927)
சமயம்சைவம்
பெற்றோர்கணபதிப்பிள்ளை அருணாசலம்
வாழ்க்கைத்
துணை
அமிர்தரத்தினம் அழகக்கோன் (19101988)

அருணாசலம் நாகலிங்கம் (பெப்ரவரி 25, 1901 - மார்ச் 19, 1979) என்பவர் இலங்கையின் வடமாகாணத்தில் காரைநகரில் பிறந்து மலேசியாவில் வாழ்ந்த தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் ஈழத்து வாழ்வை ஒட்டிய சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்ற புதினத்தை 1927 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டமைக்காக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1901 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், காரைநகரில் சம்பந்தர்கண்டி என்ற இடத்தில் கணபதிப்பிள்ளை அருணாசலம் என்பவருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர் நாகலிங்கம். காரைநகர் அமெரிக்க மிசன் தமிழ், ஆங்கிலப் பள்ளியிலும், பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவரது தந்தை வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். ஊர்காவற்றுறை துறைமுகத்தில் வந்திறங்கும் பொருட்களை வாங்கி கண்டி போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார். சமூக சேவையாளரும் ஆவார். 1930களில் காரைநகர் ஐயனார் கோயிலைப் புதுப்பித்தார்.

அக்காலத்தில் மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கோலா பிலா நகரில் ஒப்பந்தக்காரராகப் பணியாற்றிய இவரது உறவினர் டி. கோவிந்தசாமி என்பவரே நாகலிங்கத்தை மலேசியாவுக்குச் செல்லத் தூண்டியவர். தனது 19ஆவது அகவையில் நாகலிங்கம் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தார். தாய்ப்பிங் ஏழாம் எட்வர்டு அரசர் பாடசாலையில் கல்வி பயின்று மலாயா திறைசேரியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

சமூகப் பணி[தொகு]

மலேசியாவில் கோலா பிலா நகரில் கந்தசுவாமி கோவிலைப் புனரமைக்க உதவிகள் புரிந்தார். அத்துடன் அவர் காந்தியவாதியாகவும் திகழ்ந்தார். கதர் உடுப்பு அணிய அனைவரையும் தூண்டினார்[1]. கோலா பிலா நகரின் தமிழ்ப் பள்ளியின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்[1]. நாடகங்களில் தோன்றி நடித்ததாக கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் தனது அஞ்சலிக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்[1]

குடும்பம்[தொகு]

1928 ஆம் ஆண்டில் ஞானாமிர்தம் என்ற அமிர்தரத்தினம் அழகக்கோன் (23.06.1910 – 07.12.1988) என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர் யாழ்ப்பாணம், உரும்பிராய், மற்றும் நவாலியைச் சேர்ந்தவர். தனது புதினத்தின் பாத்திரப் பெயர்களையும் தனது மனைவியின் பெயரிலேயே புனைந்தார். நாகலிங்கத்தின் ஏனைய சகோதரர்களும் பின்னர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இவர் திறைசேரியில் இருந்து மருத்துவமனை நிருவாகத்துக்கு மாற்றப்பட்டார்.

இக்காலகட்டத்தில் சுபாஸ் சந்திர போசின் உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

இலங்கை திரும்பல்[தொகு]

உலகப் போர் முடிவடைந்த பின்னர் 1947 ஆம் ஆண்டில் காரைநகர் திரும்பினார். இவரது ஏழு பிள்ளைகளில் கடைசி இருவரும் யாழ்ப்பாணத்தில் பிறந்தார்கள்.

மலாய ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணத்தில் பல சமூக சேவைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். காரைநகர் சிவன் கோவில் 1968 இல் புனரமைக்கப்பட்ட போது அதன் கூட்டுச் செயலராக இருந்தார்.

எழுதிய நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._நாகலிங்கம்&oldid=1654267" இலிருந்து மீள்விக்கப்பட்டது