முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

கருங்கழுகு என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை ஆகும். எல்லா கழுகுகளையும் போலவே, இது பாறுக் குடும்பத்தில் உள்ளது, மேலும் இது இக்டினேட்டஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். இப்பறவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மற்றும் தென்கிழக்கு சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளின் காடுகளில் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும். இவை எப்போதும் அடர்ந்த பசுமையான காடுகளிலேயே சார்ந்து வாழும். மேலும்...


மொடு சன்யூ என்பவர் சியோங்னு பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது தந்தை தோவுமன் ஆவார். சிமா சியானின் கூற்றுப்படி மொடு ஒரு அறிவாற்றல் மிகுந்த குழந்தையாக இருந்தார். இவர் கி. மு. 209ஆம் ஆண்டு தன் தந்தையைக் கொல்லுமாறுத் தன் ஆட்களுக்கு ஆணையிட்டு ஆட்சிக்கு வந்தார். மொடு கி. மு. 209 முதல் கி. மு. 174 வரை ஆட்சி செய்தார். இவர் இவரது தந்தை தோவுமனுக்குக் கீழ் ஒரு இராணுவத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு சியோங்னு பேரரசின் சன்யூவாக முடிசூட்டிக் கொண்டார். இவரது பேரரசு தற்போதைய மங்கோலியாவில் அமைந்திருந்தது.மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

ஏப்பிரல் 16: உலகக் குரல் நாள்

பொன்னம்பலம் இராமநாதன் (பி. 1851· பி.ஸ்ரீ (பி. 1886· அநுத்தமா (பி. 1922)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 15 ஏப்பிரல் 17 ஏப்பிரல் 18

சிறப்புப் படம்

செருமனியின் பவேரியா எனும் இடத்திலுள்ள வளைவுப் பாலம். கட்டிடக்கலையில் 'வளைவு' என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஓர் அமைப்பு ஆகும். இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறைமை ஆகும்.

படம்: Derzno
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இலிருந்து மீள்விக்கப்பட்டது