நிக்கோலா தெஸ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ia:Nikola Tesla
No edit summary
வரிசை 21: வரிசை 21:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

* Tesla's Wardenclyffe Science Center Plaque [http://www2.timesreview.com/SUN/stories/S121109_Tesla_psh]
* Tesla's Wardenclyffe Science Center Plaque [http://www2.timesreview.com/SUN/stories/S121109_Tesla_psh]
<references/>
<references/>
* [http://www.nikolatesla.fr/documents.htm NikolaTesla.fr] - More than 1,000 documents on Tesla


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

12:35, 30 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

நிக்கொலா டெஸ்லா
Nikola Tesla
1896 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்
பிறப்பு(1856-07-10)10 சூலை 1856
ஸ்மில்ஜான், ஆஸ்திரியப் பேரரசு
இறப்பு7 சனவரி 1943(1943-01-07) (அகவை 86)
நியூயோர்க் நகரம், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஆஸ்திரியப் பேரரசு
பிரான்ஸ்
ஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல், mechanical engineering, electrical engineering
அறியப்படுவதுமாறுதிசை மின்னோட்டம், தூண்டல் இயக்கி, சுற்றும் காந்தப் புலம், கம்பியில்லாத் தொடர்பு
விருதுகள்எடிசன் விருது (1916)
எலியட் கிரெசன் தங்க விருது (1893)
ஜோன் ஸ்கொட் விருது (1934)
கையொப்பம்

நிக்கோலா தெஸ்லா (Nikola Tesla, செர்பிய மொழி: Никола Тесла, ஜூலை 10, 1856ஜனவரி 7, 1943) ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார். குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்த இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெல்சாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.

1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி) பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "மின்னோட்டப் போரில்" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார். இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன. அக் கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்

  • Tesla's Wardenclyffe Science Center Plaque [1]

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலா_தெஸ்லா&oldid=887156" இலிருந்து மீள்விக்கப்பட்டது