வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்
(வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- ஈரானின் வார்சகான் அருகே உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில், ஈரான் அரசுத்தலைவர் இப்ராகிம் இரையீசி (படம்), வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர்-அப்துல்லாகியன் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
- 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியன் லூங் பதவி விலகினார், புதிய பிரதமராக லாரன்சு வோங் பதவியேற்றார்.
- தொடர்ச்சியான சூரியப் புயல்கள் புவியைத் தாக்கி, வழக்கத்தை விடக் குறைந்த நிலநேர்க்கோடுகளில் துருவ ஒளியை உருவாக்கின.
- 1977 இல் ஏவப்பட்ட வொயேஜர் 1 விண்வெளி ஆய்வுகலம் கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக படிக்கக்கூடிய தரவை புவிக்கு அனுப்புவதாக நாசா அறிவித்தது.