உள்ளடக்கத்துக்குச் செல்

படிமப் பேச்சு:இரா. இளங்குமரன்.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவகத்திற்கு நகர்த்தலாமா?[தொகு]

@Balajijagadeshமூதறிஞர் இரா. இளங்குமரன் ஐயாவை, நான் SRM பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு சில நிமிடங்கள் கிடைத்தது. பிறகு துணைவேந்தரின் வழிகாட்டுதல்படி ஐயா சேகரம் செய்து வைத்திருந்த அரிய நூல்கள் ஒரு மகிழுந்து நிறைய தந்தார். தற்போது அவைகள் மின்னூல்களாக, தமிழ்நாடு அரசே மின்வருடல் செய்து வருகிறது. அப்பொழுதே கட்டற்ற உரிமம் குறித்து தெரிவித்தேன். நேரில் வீட்டிற்க்கு வரும்படி பணித்தார். ஆனால் எனது சூழல் காரணமாக நான் செல்லவில்லை. ஐயாவின் படைப்புகளையும் தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அவற்றை விக்கிமூலத்தில் எழுத்தாவணமாக கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். தமிழில் ஆய்வு செய்யும் எவரும் அவரது படைப்புகளை கடந்தே போக வேண்டும். இந்த படம் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. நாமும் பொதுவகத்திற்கு நகர்த்தலாமா? வேறு படத்தினைப் பெற வேண்டுமா? உழவன் (உரை) 02:04, 14 மே 2024 (UTC)[பதிலளி]

@Info-farmer: இப்படம் இந்து நாளிதழில் வெளி வந்துள்ளது. இந்த புகைப்படத்தை யார் எடுத்தார் என்று தெரியவில்லை. புகைப்படம் எடுத்தவர் மட்டுமே பொதுகள உரிமத்தில் வெளியிட வேண்டும். அது வரை இப்புகைப்படத்தைப் பொதுவகத்திற்கு நகர்த்த முடியாது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:26, 14 மே 2024 (UTC)[பதிலளி]
தங்கள் விளக்கத்திற்கு நன்றி. அவர் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு, வேறொரு படத்தினைப் பெறுவேன். உழவன் (உரை) 04:28, 14 மே 2024 (UTC)[பதிலளி]