உள்ளடக்கத்துக்குச் செல்

தன்விழிப்புணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுயவிழிப்புணர்வு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பீட்டர் புரூகல் தன்னைத் தானே வரைந்த "ஓவியரும் அவ்வோவியத்தை வாங்குபவரும்" என்ற ஓவியம் (1565). தன்னைத் தானே புரிந்துகொள்ளவும் வரைந்துகொள்ளவும் சுயவிழிப்புணர்வு தேவைப்படுகிறது.

தன்மெய்யியலில், தன்விழிப்புணர்வு அல்லது சுயவிழிப்புணர்வு (self-awareness) என்பது தனது சொந்த ஆளுமை அல்லது தனித்துவத்தின் அனுபவமாகும்.[1][2] இது தன்மையங்கள் (qualia) என்று பொருள்படும் உணர்வுநிலையுடன் வேறுபடுத்திப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும். உணர்வுநிலை அல்லது நனவு என்பது தனது சூழல், உடல், வாழ்க்கை முறை ஆகியவை பற்றிய விழிப்புணர்வு எனப்படுகையில், தன்விழிப்புணர்வு என்பது அந்த விழிப்புணர்வை பற்றி அறிந்த நிலையாகும்.[3] தன்விழிப்புணர்வு என்பது ஒரு நபர் தனது சொந்த குணாதிசயங்கள், உணர்வுகள், நோக்கங்கள், ஆசைகள் ஆகியவற்றை எவ்வாறு நனவு ரீதியாக அறிந்தும் புரிந்தும் கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. தன்விழிப்புணர்வில் இரண்டு பரந்த பிரிவுகள் உள்ளன: அக தன்விழிப்புணர்வு மற்றும் புற தன்விழிப்புணர்வு.[4]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Google def: Self-awareness is the ability to focus on yourself and how your actions, thoughts, or emotions do or don't align with your internal standards. If you're highly self-aware, you can objectively evaluate yourself, manage your emotions, align your behavior with your values, and understand correctly how others perceive you.May 11, 2018
  2. "Self-awareness - Definition of Self-awareness by Merriam-Webster".
  3. Jabr, Ferris (2012). "Self-Awareness with a Simple Brain". Scientific American Mind 23 (5): 28–29. doi:10.1038/scientificamericanmind1112-28. 
  4. "What Self-Awareness Really Is (and How to Cultivate It)". Harvard Business Review. 2018-01-04. https://hbr.org/2018/01/what-self-awareness-really-is-and-how-to-cultivate-it. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்விழிப்புணர்வு&oldid=3508700" இலிருந்து மீள்விக்கப்பட்டது