பயனர் பேச்சு:Paramesh1231: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 86: வரிசை 86:
Test
Test
[[பயனர்:Paramesh1231|Paramesh1231]] ([[பயனர் பேச்சு:Paramesh1231|பேச்சு]]) 10:56, 19 திசம்பர் 2018 (UTC)
[[பயனர்:Paramesh1231|Paramesh1231]] ([[பயனர் பேச்சு:Paramesh1231|பேச்சு]]) 10:56, 19 திசம்பர் 2018 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Feather Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 11:44, 3 மார்ச் 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#159|பதிகை]])</small>
|}

11:44, 3 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Paramesh1231, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 06:39, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பாராட்டு

வாழ்த்துகள் நண்பரே! உங்களின் தொகுப்புகள் கண்டு மகிழ்கிறேன். நல்ல நடையில் அழகாக எழுதியுள்ளீர்! தரமான கட்டுரைகளை எழுதிக் குவிக்க வாழ்த்துகிறேன். :) உங்களுக்கு என்னால் ஏதேனும் உதவி ஆகும் என்றால், செய்து தருகிறேன். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:01, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


மிக்க நன்றி. - ந.ப

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விரிவடையும் விரிதாள்

விரிதாள் குறித்து மிகவும் அழகாக அதுவும் தொடர்ந்து முனைப்புடன் எழுதி வருகிறீர்கள். அருமையாக இருக்கிறது. படங்களில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் எழுதி முடித்ததும் அவற்றைப் பார்க்கிறேன். தங்கள் பங்களிப்புக்கு நன்றி. உதவி இருப்பின் கேட்கவும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 02:16, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உதவி தேவை: https://ta.wikipedia.org/wiki/முகவிப்​_படிமம் என்ற பக்கத்தில் உள்ள கட்டுரையைக் கீழ்க்கண்ட https://en.wikipedia.org/wiki/Agent-based_model கட்டுரையின் Languages இணைப்பில் இணைக்க வேண்டும். நான் முயன்று பார்த்தேன். "The specified article could not be found on the corresponding site." என்ற பிழை வருகின்றது.

நீங்கள் தந்துள்ள இணைப்பில் உள்ள எழுத்துக்கள் (முகவிப்​ படிமம்) ஒருங்குறியில் இல்லையோ என சந்தேகிக்கிறேன். ஆனாலும், சரியான இணைப்பான முகவிப் படிமம் இணைப்பைத் தந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:16, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]

Kanags அவர்கட்கு: மிக்க நன்றி. - ந.ப.

வேண்டுகோள்

வணக்கம்! நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஆதாரங்களை இணையுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:31, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Paramesh1231!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

சில கருத்துக்கள்

பயனுள்ள, விரிவான கட்டுரைகள் எழுதுவதற்குப் பாராட்டுக்கள். சில விடயங்கள் கருத்திக் கொண்டால் இன்னும் சிறப்பாக கட்டுரைகளை தொகுக்கலாம். 1. சரியாக இருப்பினும் சொந்தக் கருத்துக்களைசச் சேர்க்க வேண்டாம். 2. சொற்களுக்கு இடையில் ஒரு அடைவெளி இருப்பது சிறப்பு. 3. கட்டுரையில் உள்ளே தலைப்பபை ஆங்கிலத்தில் குறிப்பது நல்லது. ஆனால் சொல்லுக்குச் சொல் ஆங்கிலம் தவிர்ப்பது நன்று. தமிழ்-ஆங்கில அகராதி போன்று வேண்டாம். நன்றி. --AntonTalk 13:32, 21 மார்ச் 2015 (UTC)


Anton அவர்களுக்கு மிக்க நன்றி.

  • நான் பெரும்பாலும் என் சொந்த ஆய்வுக் கருத்துக்களைக் கட்டுரையில் சேர்ப்பது இல்லை. ஆனால், பல இடங்களில் கொஞ்சம் தெளிவாக விளக்க வேண்டி உள்ளது. மொழி பெயர்க்கும் போது ஏறத்தாழ 40 விழுக்காட்டுக்கு மேல் பொருள் இழப்பு ஏற்பட்டது விடுகிறது. அதனாலேயே, எழுதுவதையாவது விளக்கமாக எழுத வேண்டுமென எண்ணி எழுதுகின்றேன்.
  • பல இடங்களில் ஆங்கிலச் சொல்லை வேண்டுமென்றே தமிழோடு கொண்டு செல்கின்றேன். இப்போதெல்லாம், தமிழை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. மேலும், இக் கட்டுரையைப் படிக்கும் மாணவர்கள் நாளை ஆங்கில வழி மாணவர்களோடு பேச வேண்டி இருக்கும், ஆங்கில நூற்களைப் படிக்க வேண்டி இருக்கும். அதனாலேயே, ஆங்கிலச் சொல்லை தமிழ்ச் சொற்களோடு சேர்த்து எழுதியுள்ளேன்.
  • மெய்ப் புள்ளி அசைவு, ஒப்புச்செயலாக்கக் கோட்பாடு, குறிக்கோள், கடமை உணர்வு, நோக்கம், ஒப்புவுமை, மன நிலை, கூறு போன்ற சொற்களுக்கு ஆங்கிலத்தின் துணை கட்டாயம் தேவைப் படுகின்றது. அப்படி ஆங்கிலச் சொல் இல்லை என்றால், கட்டுரையில் இந்த சொற்களை விளக்க வேண்டும். அவ்வாறு விளக்கும் போது, கட்டுரை பாடப் புத்தகம் போன்று ஆகிவிடும்.
  • இறுதியாக, நாம் விக்கியில் எழுதும் கட்டுரைகளைப் பள்ளி மாணவர்களை நினைவில் வைத்து எழுத வேண்டும். மேலும், பல ஆங்கிலக் கட்டுரைகள் விக்கியில் நன்றாக இருப்பதில்லை என்பதயும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனினும், தாங்கள் கூறுவது போன்றே, ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து கட்டுரையில் விளக்கத்தையும் குறைத்து எழுத முயற்சி செய்கிறேன்.

மீண்டும் நன்றி. Paramesh1231

உங்கள் தெளிவுபடுத்தலுக்கு நன்றி. ஆம், நீங்கள் தெளிவாக விளக்குவது புரிதலுக்கு இலகுவாகவுள்ளது. ஆனாலும் கலைக்களஞ்சியம் இடத்திற்கேற்றவாறு 1 ஆம், 2 ஆம் அல்லது 3 ஆம் நிலை ஆதரங்களைக் கொண்டிருக்க வேண்டும். தெளிவாக விளக்கத்திற்கு ஆதாரங்களைச் சேர்க்க முடியுமா எனப் பாருங்கள். அல்லது ஆர்வமுள்ள மற்றப்ப யனர்களுடனும் இது தொடர்பில் உரையாடலாம். தமிழ்-ஆங்கில ஒட்டம் சிறப்பானதாப் படவில்லை. இதற்கு விக்கி சமூக ஒப்புதல் உள்ளதாகவும் இல்லை. வேண்டுமென்றால், கலைச் சொற்களை கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் இட்டு கட்டுரையில் "இவற்றையும் பார்க்க" என்பதில் இணைப்புக் கொடுக்கலாம். மேலும், ஆங்கிலத்தின் துணையோடுதான் தமிழ்க் கட்டுரையை வாசிக்க வேண்டும் என்ற விதி இல்லை. நன்றி. --AntonTalk 05:51, 24 மார்ச் 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியில் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருவதற்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலத்தில், கட்டுரையின் இறுதியில் அருஞ்சொற்பொருள் என்று குறிப்பதுண்டு. விளக்கம் தேவைப்படும் சொற்களுக்குத் தனிக்கட்டுரை இருக்கலாம் என்றால் உள்ளிணைப்பாக தந்து தனிக்கட்டுரையை வளர்த்து எடுக்கலாம். மாணவர்கள் உட்பட பலருக்கும் புரிய வேண்டும் என்ற கவலையைப் பகிர்கிறேன். அதே வேளை, கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். கட்டுரைக்குள்ளேயே சொற்களுக்கு விளக்கம் தருவதோ ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தருவதோ ஏற்புடையதன்று. இவை வாசிப்பு ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும். ஒவ்வொரு கலைக்களஞ்சியக் கட்டுரையும் அத்தலைப்பு குறித்த உயர் புலமை ஆக்கம் என்பதால், ஒரு கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ள வாசகரின் உழைப்பும் தேவை. தேவைப்படும் இடங்களில் உள்ளிணைப்புகளைத் தரலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:56, 29 மார்ச் 2015 (UTC)

வேண்டுகோள்

வணக்கம் நண்பரே! மின்னியல் கட்டுரைகள் தொடர்பான தங்களின் பங்களிப்பு மகிழ்வை அளிக்கிறது. அதே சமயம் பயன்கருதி அக்கட்டுரைகளையும் இனிமேல் எழுதும் கட்டுரைகளையும் ஒன்றைவரிக் கட்டுரையாக எழுதாமல் சற்று விரிவாக்கி எழுதினால் உபயோகமாய் இருக்கும். ஒற்றைவரிக் கட்டுரைகள் சிலசமயம் நீக்கப்படலாம். தாங்கள் எழுதிய மின்னோட்டச் செறிவு கட்டுரையை குறுங்கட்டுரையாக்கியுள்ளேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 13:15, 29 மார்ச் 2015 (UTC)

பதக்கம்

அறிவியல் பதக்கம்
நீங்கள், அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் புதிதாகவும் ஏற்கனவே உள்ள அறிவியல் கட்டுரைகளை மேம்படுத்தியும் வருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களியுங்கள். நன்றி. இரவி (பேச்சு) 14:24, 31 மார்ச் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகிறேன்.--இரா.பாலா (பேச்சு) 15:08, 1 ஏப்ரல் 2015 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:14, 3 ஏப்ரல் 2015 (UTC)
அனைவருக்கும் மிக்க நன்றி. Paramesh1231 (பேச்சு) 13:22, 3 ஏப்ரல் 2015 (UTC)

உங்கள் பார்வைக்கு

பேச்சு:விகிதச் சார்பு (கணிதம்) பார்த்து உங்கள் கருத்தினை அங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:39, 3 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி. என் கருத்தை அங்கே பதிவு செய்துள்ளேன். Paramesh1231 (பேச்சு) 13:21, 3 ஏப்ரல் 2015 (UTC)

Test

Test Paramesh1231 (பேச்சு) 10:56, 19 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

பதக்கம்

முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 11:44, 3 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Paramesh1231&oldid=2668197" இலிருந்து மீள்விக்கப்பட்டது