எரிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எரிபொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அணு ஆற்றல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வில்லைகள்

எரிமம் அல்லது எரிபொருள் (Fuel) என்பது பெரும்பாலும் நெருப்புடனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிப்பதாகும். அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கரு இணைவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் எரிபொருள் எனக் குறிப்பிடலாம். இவ்வெரி பொருட்களைச் சரியான முறையில் எரிக்கும் போது வெளிப்படும் ஆற்றல் வீட்டு மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]

எரிமங்களின் வகைகள்[தொகு]

எரிமங்களை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம்.

  • இயற்கை அல்லது முதல்நிலை எரிபொருள்:
இவை இயற்கையாகப் பெறப்படுபவை. விறகு, நிலக்கரி, பாறை எண்ணெய், இயற்கை வாயு போன்றவை இயற்கை எரிபொருட்களாகும்.
  • செயற்கை அல்லது இரண்டாம் நிலை எரிபொருள்:
இவை இயற்கை எரிபொருட்களிலிருந்து பெறப்படுபவை. மரக்கரி, கல்நெய் , டீசல், மண்ணெண்ணெய், கரிவாயு போன்றவை செயற்கை எரிபொருட்களாகும்.

எரிபொருட்கள் பொதுவாக திண்ம, நீர்ம, வளிம எரிபொருட்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

திண்ம எரிமங்கள்[தொகு]

மரம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பன திண்ம எரிபொருள்.

நீர்ம எரிமங்கள்[தொகு]

கல்நெய், மண்ணெண்ணெய், எரிசாராயம், எரிநெய் போன்றவை நீர்ம எரிபொருள்.

வளிம எரிமங்கள்[தொகு]

நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, இயற்கை வாயு, சாணவாயு, உற்பத்தி வாயு, நீர்வாயு போன்றன வாயு எரிபொருட்கள்.

எரிமங்களின் கலோரி மதிப்பீடு[தொகு]

ஓர் அலகு பருமன் உள்ள எரிபொருள் முழுவதுமாக எரியும்போது வெளிப்படும் மொத்த ஆற்றல் அவ்வெரிபொருளின் கலோரி மதிப்பீடு எனப்படுகிறது.

திண்ம அல்லது நீர்ம எரிபொருட்களின் கலோரி மதிப்பீடு கிலோஜூல்/கிலோகிராம் (kJ/kg) என்ற அலகிலும் வளிம எரிபொருட்களின் மதிப்பீடு கிலோஜூல்/மீட்டர்3 (kJ/m3) என்ற அலகிலும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schobert, Harold (17 January 2013). Chemistry of Fossil Fuels and Biofuels (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521114004. இணையக் கணினி நூலக மைய எண் 1113751780.
  2. Forbes, Robert James (1958). Studies in Early Petroleum History. Brill Publishers. p. 149.
  3. Bilkadi, Zayn. "The Oil Weapons". Saudi Aramco World 46 (1): 20–27. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமம்&oldid=3769260" இலிருந்து மீள்விக்கப்பட்டது