லேக் காச்சின்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேக் அலெக்சாண்டர் காச்சின்ஸ்கி
Lech Aleksander Kaczyński
போலந்தின் அரசுத்தலைவர்
பதவியில்
23 டிசம்பர் 2005 – 10 ஏப்ரல் 2010
பிரதமர்காசிமீர்ஸ் மார்சின்கியேவிச்
யாரொசுலாவ் காச்சின்ஸ்கி
டொனால்ட் டஸ்க்
முன்னையவர்அலெக்சாண்டர் குவாசினியேவ்ஸ்கி
பின்னவர்புரொனிசுலாவ் கமொரோவ்ஸ்கி (பதில்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-06-18)சூன் 18, 1949
வார்சா, போலந்து
இறப்புஏப்ரல் 10, 2010(2010-04-10) (அகவை 60)
சுமொலியென்ஸ்க் ஓப்லஸ்து, இரசியா
அரசியல் கட்சிசுயேட்சை(2006–2010)
சட்டமும் நீதியும் (2001–2006)
துணைவர்மரீயா காச்சின்ஸ்கா
தொழில்வழக்கறிஞர்

லேக் அலெக்சாண்டர் காச்சின்ஸ்கி (Lech Aleksander Kaczyński; 18 சூன் 1949 – 10 ஏப்ரல் 2010) போலந்து குடியரசின் அரசுத்தலைவராக 2005 முதல் 2010 ஆம் ஆண்டில் இறக்கும் வரை இருந்தவர். சட்டமும் நீதியும் என்ற கட்சியின் சார்பில் அரசியல்வாதியாக இருந்தவர். போலந்துத் தலைநகர் வார்சாவின் மேயராக 2002 முதல் 2005 வரை பணியாற்றியவர்.

2010 ஏப்ரல் 10 இல் இவரும் இவரது மனைவியும் வேறு பல அரசு அதிகாரிகளும் இரசியாவின் சிமலியென்ஸ்க் வட்டாரத்தில் உள்ள இரசிய வான்படைத் தளமொன்றில் இவர்கள் பயணம் செய்த வானூர்தி தரையிறங்கும் போது இடம்பெற்ற விபத்தில் கொல்லப்பட்டார்கள். வானூர்தியில் பயணம் செய்த அனைவரும் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். காட்டின் படுகொலைகளின் 70வது நினைவுகூரல் நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இவ்வானூர்தி விபத்துக்குள்ளாகியது[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Polish President Lech Kaczynski dies in plane crash". பிபிசி (பிபிசி). http://news.bbc.co.uk/1/hi/in_depth/8612825.stm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2010. 
  2. "Polish President Lech Kaczynski Killed When Plane Crashed On Approach To Smolensk Airport In Russia". பார்க்கப்பட்ட நாள் 2010-04-10.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lech Kaczyński
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேக்_காச்சின்ஸ்கி&oldid=3371967" இலிருந்து மீள்விக்கப்பட்டது