ராஸ் சாவேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஸ் சாவேஜ்
பிறப்பு23 திசம்பர் 1967 (1967-12-23) (அகவை 56)
செஸ்சர், இங்கிலாந்து
பணிபெருங்கடலோடி, எழுத்தாளர், பேச்சாளர்
அறியப்படுவதுபெருங்கடலோடிக்கான கின்னஸ் உலக சாதனைகள்
வலைத்தளம்
rozsavage.com

ராஸ் சாவேஜ் (Roz Savage பிறப்பு 1967 திசம்பர் 23 ) என்பவர் ஒரு ஆங்கிலேய கடல் துடுப்புப் படகு சாதனையாளர், நெகிழிப்பை எதிர்ப்பாளர், சுற்றுச்சூழல் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர் ஆவார்.[1] இவர் பெருங்கடல்களில் துடுப்புப் படகில் பயணித்து கின்னஸ் உலக சாதனைகள் படைத்தவர். இதில் மூன்று பெருங் கடல்களான அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை தனியாக துடுப்புப் படகில் துடுப்புப் போட்டு கடந்த முதல் பெண் என்ற சாதனையும் உட்பட்டது.[2] இவர் 50 இலட்சம் துடுப்புபோட்டு, தன்வாழ்நாளில் 500 நாட்களை 23 அடி நீளமுள்ள துடுப்புப் படகுடன் கடலில் கழித்து, கடலில் 15,000 மைல்கள் கடந்தவர். இவருக்கு 2013இல் எம்.பீ.ஈ என்னும் விருது வழங்கப்பட்டது. இது சுற்றுச்சூழலை பாதுகாக்கப் பாடுபடுவோருக்கு பிரித்தானிய அரசியின் பிறந்த நாளில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். மேலும் இவருக்கு 2014 ல் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மூலமாக சட்டப் பிரிவில் கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. ராஸ் சாவேஜ் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை வீரர் ஆவார்.[3] 2010-ம் ஆண்டு நேஷனல் ஜியோகிரபிக், ‘அட்வென்சர் ஆஃப் த இயர்’ என்ற கவுரவத்தை ராஸ் சாவேஜுக்கு வழங்கிச் சிறப்பித்தது.

பின்னணி[தொகு]

33 வயதுவரை வேலை, குடும்பம், கணவர் என்று வாழ்ந்துவந்தார் ராஸ் சாவேஜ். இந்த வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாகவும் நிறைவையும் அடையாததை உணர்ந்து, வாழ்வில் எதாவது சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார். எந்த சாதனையைப் படைப்பது என சிந்தித்தபோது தனக்கு படகு செலுத்துவதில் எப்பொழுதுமே ஆர்வம் இருந்துவந்ததால், கடலில் தனியாக சாகசப் பயணம் செல்ல முடிவு செய்தார். இதனால் முதலில் தன்னுடைய வேலையில் இருந்து விலகினார். வீடு, கார் போன்றவற்றை விற்றார். கடற்கரைக்கு அருகே சிறிய அறை எடுத்து தங்கி, பயிற்சிகளை மேற்கொண்டார்.

கடல் பயணங்கள்[தொகு]

அட்லாண்டிக் கடல் பயணம்[தொகு]

14 மார்ச் 2006 இல் தன்னுடைய முதல் கடல் பயணத்தை ஆரம்பித்தார். 23 அடி நீளம் கொண்ட படகில், தனியாளாக, துடுப்பு போட்டபடி அட்லாண்டிக் கடலில் கிளம்பினார் பயணத்தை முடிக்க 103 நாட்கள் ஆனது. பயணம் துவக்கிய 80 நாட்களுக்குப் பிறகு அவரது நான்கு துடுப்புகளும் உடைந்துவிட்டன. அடுப்பு உடைந்து போனதால், சூடான உணவுகளைச் சாப்பிட்டு 20 நாட்கள் ஆகியிருந்தன. செயற்கைக்கோள் தொலைபேசி சாதனம் செயலிழந்தது. தோள்பட்டை வலி எடுத்தது. உப்பு நீரால் முதுகில் புண்கள் வந்துவிட்டன.

இவ்வாறு பல துண்பங்களுக்குப் பிறகு 103 நாட்கள் பயணத்தின் முடிவில், 3 ஆயிரம் மைல்களைக் கடந்து, நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். அட்லாண்டிக் கடலைத் தனியாகக் கடந்த 5-வது பெண் என்ற சாதனையைப் படைத்தார். இவரது இந்த அட்லாண்டிக் பயணம்குறித்து திறந்த பெருங்கடல்மேல் கற்றுக்கொண்ட பாடங்கள்' என்ற பெயரில் 6.அக்டோபர் 2009 6 ம் தேதி நூலாக வெளிவந்நது.[4]

பசிபிக் கடல் பயணம்[தொகு]

சேவேஜ தனது வெற்றிகரமான அட்டலாண்டிக் கடல் பயணத்தை அடுத்து பசிபிக் பெருங்கடலில் தனியாக துடுப்புப் படகில் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரை கடந்த முதல் பெண் என்ற பெயர் பெறும் சாகசப் பயணம் செய்யப் போவதாக அறிவித்தார். ( மாட் பொண்ட்டரி என்பவர் வேறு வழியாக, 2005 இல் பசிபிக் கடலை துடுப்புப் படகில் கடந்தார் ) பிறகு வெற்றிகரமாக 2008 ஒரு கோடைக் காலத்தில் கலிபோர்னியாவில் இருந்து பயணத்தைத் தொடங்கி, மூன்று கட்டங்களாக பயணத்தை முடித்தார், அவரது பயணத்தை அவாய்முதல் துவாலுவரை 2009 இலும், 2010இல் பப்புவா நியூ கினியில் பயணத்தின் இலக்கை முடித்தார்.[5][6]

இந்தியப் பெருங்கடல் பயணம்[தொகு]

ஏப்ரல் 2011 இல் தொடங்கி, இந்திய பெருங்கடலை கடக்க ஆஸ்திரேலியாவின் பிரெமெண்டல் என்னுமிடத்தில் பயனத்தை துவக்க ஏற்பாடுகள் செய்தார். அவரது பாதை, தினசரி கடக்கும் இடங்களில் மற்றும் இலக்கு போன்றவை இரகசியமாக வைக்கப்பட்டன, அந்த கடல் பகுதியில் இருந்த ஆபத்து ஆகும்.[7] பயணத்தை துவங்கி வெற்றிகரமாக அக்டோபர் 4 2011 அன்று 154 நாட்களில் நிறைவு செய்தார். தனிப் பெண்ணாக மூன்று பெருங்கடல்களான அட்லாண்டிக், பசிபிக் இந்திய பெருங்கடல் ஆகியவற்றை தனியாக கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை, அடைந்தார்.[8]

குறிப்புகள்[தொகு]

  1. "Congratulations to Roz Savage". Professional Photographer. 2 September 2008. Archived from the original on 8 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 5 January 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "First female to row two oceans solo". பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
  3. "World Environment Day 2009". Archived from the original on 4 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. http://books.simonandschuster.com/Rowing-the-Atlantic/Roz-Savage/9781416583288
  5. Douglas, Ed (28 October 2007). "Oceans apart". The Guardian (London). http://www.guardian.co.uk/sport/2007/oct/28/sailing.features. பார்த்த நாள்: 22 May 2010. 
  6. Parkhouse, Sam (18 May 2008). "Roz Savage in solo row bid over Pacific". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/news/uknews/1976465/Roz-Savage-in-solo-row-bid-over-Pacific.html. பார்த்த நாள்: 22 May 2010. 
  7. "Endurance rower Roz Savage in Indian Ocean bid". BBC News. 13 April 2011. http://www.bbc.co.uk/news/uk-13059207. 
  8. "Roz Savage, Ocean Rower". http://www.rozsavage.com. பார்த்த நாள்: 27 July 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஸ்_சாவேஜ்&oldid=3858115" இலிருந்து மீள்விக்கப்பட்டது