பீட்டர் ஓ டூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் ஓ'டூல்
லாரன்ஸ் ஒப் அரேபியா திரைப்படத்திற்கான விளம்பரப் படத்தில்
பிறப்புபீட்டர் ஜேம்சு ஓ'டூல்[1]
(1932-08-02)2 ஆகத்து 1932
கன்னிமரா, கால்வே கவுன்ட்டி, அயர்லாந்து
அல்லது
லீட்சு, இங்கிலாந்து
இறப்பு14 திசம்பர் 2013(2013-12-14) (அகவை 81)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்ஐரியர்
குடியுரிமைஅயர்லாந்து, ஐக்கிய இராச்சியம்
படித்த கல்வி நிறுவனங்கள்நாடகக் கலைக்கான ரோயல் அகாதமி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1954–2012
வாழ்க்கைத்
துணை
சியான் பிலிப்சு (1959–1979)
பிள்ளைகள்3; நடிகை கேட் ஓ'டூல் உட்பட
விருதுகள்
அகாதமி விருதுகள்
அகாதமி கௌரவ விருது
2003
எம்மி விருதுகள்
மிகச்சிறந்த துணை நடிகர் – குறுந்தொடர் அல்லது திரைப்படம்
1999 ஜோன் ஆஃப் ஆர்க் (குறுந்தொடர்)
கோல்டன் குளோப் விருதுகள்
கோல்டன் குளோப் சிறந்த நடிகர் – திரைப்படம் நாடகம்
1964 பெக்கட்
1968 த லயன் இன் வின்டர்
கோல்டன் குளோப் சிறந்த நடிகர் – திரைப்படம் (இசைவடிவ அல்லது சிரிப்பு)
1969 குட்பை, மிஸ்டர். சிப்சு
பாஃப்டா விருதுகள்
முன்னணி வேடத்தில் மிகச்சிறந்த நடிகர்
1962 லாரன்ஸ் ஒப் அரேபியா

பீட்டர் ஜேம்சு ஓ'டூல் (Peter James O'Toole) [2] (2 ஆகத்து 1932 – 14 திசம்பர் 2013) அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடிகர்.[3] நாடகக் கலைக்கான ராயல்அகாதமியில் பயின்ற இவர் நாடகங்களில் நடிக்கத் துவங்கி சிறந்த சேக்சுபீரிய நடிகராக புகழ் பெற்றார். தமது முதல் திரைப்படத்தில் 1959ம் இல் நடித்தார். தொடக்க காலத்தில் செய்தியாளராகப் பணியாற்றிய டூல், பின்னர் இங்கிலாந்து கடற்படையில் வானொலி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

1962 ஆம் ஆண்டு வெளியான லாரன்சு ஆஃப் அரேபியா திரைப்படத்தில் டி.ஈ.லாரன்சாக நடித்து உலகெங்கும் பரவலாக அறியப்பட்டார். இதற்காக அகாதமி விருது பரிந்துரைகளில் முதன்முதலாக இடம் பெற்றார். இவருக்கு மேலும் ஏழு அகாதமி விருது பரிந்துரைகள் கிடைத்தன – பெக்கட் (1964), த லயன் இன் வின்டர் (1968), குட்பை, மிஸ்டர். சிப்சு (1969), த ரூலிங் கிளாஸ் (1972), த ஸ்டன்ட் மேன் (1980), மை பேவரைட் இயர் (1982) மற்றும் வீனசு (2006) – ஆகிய திரைப்படங்களுக்காகவும் இவர் பரிந்துரை செய்யப்பட்டார். அதிகமுறை விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு விருது கிடைக்காதவர் எனும் சாதனையைப் படைத்தார். இவர் நான்கு கோல்டன் குளோப் விருது, ஒரு பாஃப்டா விருது மற்றும் எம்மி விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 இல் கௌரவ அகாதமி விருது பெற்றுள்ளார்.[5]

இளமை வாழ்க்கை[தொகு]

ஓ'டூல் ஆகத்து 2, 1932 ஆம் ஆண்டு கன்னிமரா, கால்வே கவுன்டி, அயர்லாந்தில் பிறந்தார்.[6][7] ஒரு சிலர் இவர் இங்கிலாந்து லீட்சுவில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் பிறந்ததாக கூறுவர்.[8][9] இவருக்கு பட்ரிசியா எனும் மூத்த சகோதரி உள்ளார்.[10] இவர் தெற்கு லீட்சுவில் உள்ள ஹன்ஸ்லெட்டில் வளர்ந்து வந்தார். இவரின் தந்தை பட்ரிக் ஜோசப் தேர்ப் பந்தயப் பணயத் தொழிலர், கால்பந்தாட்ட வீரர் ஆவார்.[11][12][13][14] இவரின் தாய் கான்ஸ்டன்ஸ் ஜேன் எலியத் . இவர் இசுக்கொட்லாந்தில் செவிலியராகப் பணிபுரிந்தார்.[15][16] இவருக்கு ஒரு வயதாக இருக்கும் போது இவரின் குடும்பம் தேர்ப் பந்தயத்தின் முக்கிய நகரங்களான வடக்கு இங்கிலாந்திற்கு ஐந்து வருட சுற்றுலா சென்றனர். இவரும்,இவருடைய சகோதரியும் தந்தையைப் போல கத்தோலிக்க திருச்சபையைப் பின்பற்றினர்.[15][16] ஓ டூல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதனால் கத்தோலிக்க திருச்சபைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஹன்ஸ்லெட்டில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

பள்ளியை விட்டு நீங்கிய பிறகு யார்க்சயர் ஈவ்னிங் போஸ்ட் எனும் இதழில் பயிற்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்படக் கலைஞராகப் பணியாற்றினார். பின் அரச கடற்படையில் சமிக்ஞை அனுப்புபவராகப் பணியில் சேர அழைப்பு வந்தது.ஐரிய மொழி தெரியாத காரணத்தினால் இயக்குநர் எர்னெஸ்ட் பிளைத் இவரை அப்பீஸ் திரையரங்க நிறுவனத்தில் சேர்வதற்கு அனுமதிக்கவில்லை. அதன் பின்பு 1952 முதல் 1954 வரை இலண்டனில் உள்ள நாடகக்கலைக்கான ராயல் அகாதமியில் சேர்ந்தார். இந்த நாடக நிறுவனத்தில் ஆல்பர்ட் ஃபின்னீ, அலன் பேட்ஸ் மற்றும் பிரையன் பெட்ஃபோர்டு ஆகியோரின் நட்பு கிடைத்தது.[17]

பணி வாழ்க்கை[தொகு]

பீட்டர் ஓ'டூல் 1968இல் வெளியான லயன் இன் வின்டர் திரைப்பட முன்னோட்டத்தில்

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஓ டூல் இலண்டனில் உள்ள நாடகக்கலைக்கான ராயல் அகாதமியில் பயின்று கொண்டிருந்த வேளையில் 1950 ஆம் ஆண்டுத் துவக்க கொரியப் போரில் பிரிட்டிசு அரசின் தலையீட்டை எதிர்க்கும் போராட்டத்தில் பங்குபெற்றார். 1960 இல் வியட்நாம் போர்க்கு எதிராகப் போராடினார்.

ஓ டூல் 1959 ஆம் ஆண்டு வேல்ஸ் நடிகை சியான் பிலிப்சு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கேட் மற்றும் பட்ரிக்கா ஆகிய இருவரும் நடிகைகள் ஆவர். இவர்களுக்கு 1979 ஆம் ஆண்டில் திருமண முறிவு ஏற்பட்டது. இவரைப் பற்றி பிலிப்ஸ் தனது இரு சுயசரிதைகளில் பின்வருமாறு கூறுகிறார். தனது கனவர் குடிபோதையில் மன ரீதியாக தன்னை துன்புறுத்தல் செய்தார் என்றும் தான் தனது இளவயது காதலனுடன் செல்லும் போது பொறாமைப் பிணித்தாக்கம் கொண்டவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.[18] ஓ டூல் இங்கிலாந்தில் இலண்டன் பெருநகரத்தில் வாழ்ந்து வந்தார். இவரது வாழ்நாள் நண்பராக இருந்த அயர்லாந்து நடிகர் ரிச்சர்டு ஹாரிசு 2002இல் உயிரிழந்தார்.

ஓ டூல் மற்றும் அவரது பெண்தோழியான வடிவழகி கேரன் பிரவுனுக்கும் லார்கன் பாட்ரிக் ஓ டூல் எனும் மகன் உள்ளார்.[19] ஓ டூலுக்கு ஐம்பது வயதாக இருக்கும் போது, லோர்கன் மார்ச் 17, 1983 இல் பிறந்தார். இவர் ஹாரோ பள்ளியில் பயின்றார். தற்போது இவர் நடிகராக உள்ளார். 1996 இல் இங்கிலாந்திலுள்ள வெஸ்ட் ஏக்கரில் குடியேறினார்.[20]

நோயும் மரணமும்[தொகு]

கோவென்ட்[தொடர்பிழந்த இணைப்பு] கார்டனில் உள்ள செயின்ட் பால் சர்ச்சில் ஓ'ட்டூல் நினைவு சின்னம்

ஓ'டூல் 1970களில் வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று மீண்டார். தமது 81ஆவது அகவையில் அறியப்படாத நோயால் இலண்டனில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.[21]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Peter O’Toole, actor: 1932-2013, Financial Times, பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2013
  2. The time I met Peter O’Toole in a pub in Leeds...honestly!, Yorkshire Evening Post, பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2013
  3. President leads tributes to Peter O'Toole, a legend fiercely proud of his Irish heritage, Irish Independent, பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2013
  4. "'லாரன்ஸ் ஆப் அரேபியா' நடிகர் பீட்டர் ஓ டூல் காலமானார்". த இந்து - தமிழ் நாளிதழ். 17 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2013.
  5. "The Official Academy Awards Database: Peter O'Toole". The Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on 6 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2015.
  6. Peter O'Toole: Lad from Leeds who became one of screen greats, Yorkshire Evening Post, பார்க்கப்பட்ட நாள் 17 December 2013
  7. "Peter O'Toole biography". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
  8. Peter O'Toole: A profile of the world-famous actor from Hunslet, BBC, பார்க்கப்பட்ட நாள் 17 December 2013
  9. Peter O'Toole: 'I will stir the smooth sands of monotony', Irish Examiner, பார்க்கப்பட்ட நாள் 17 December 2013
  10. O'Toole, Peter (1992). Loitering With Intent. London: Macmillan London Ltd. பக். 6, 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56282-823-1. https://archive.org/details/loiteringwithint0000otoo_l5l1. 
  11. Peter O'Toole Dead: Actor Dies At Age 81, Huffington Post, பார்க்கப்பட்ட நாள் 19 December 2013
  12. "Peter O'Toole profile at". Filmreference.com. 2008. பார்க்கப்பட்ட நாள் 4 April 2008.
  13. Frank Murphy (31 January 2007). "Peter O'Toole, A winner in waiting". The Irish World இம் மூலத்தில் இருந்து 9 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150509203608/http://www.theirishworld.com/article.asp?SubSection_Id=10&Article_Id=1911. பார்த்த நாள்: 4 April 2008. 
  14. "Loitering with Intent Summary – Magill Book Reviews". Enotes.com. பார்க்கப்பட்ட நாள் 12 June 2012.
  15. 15.0 15.1 Tweedie, Neil (24 January 2007). "Too late for an Oscar? No, no, no...". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/news/features/3631524/Too-late-for-an-Oscar-No-no-no....html. பார்த்த நாள்: 11 September 2010. 
  16. 16.0 16.1 Adams, Cindy (21 March 2008). "Veteran says today's actors aren't trained". New York Post இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110430033152/http://www.nypost.com/p/pagesix/cindy_adams/veteran_says_today_actors_aren_trained_62U8SWk7OZUDSdI7j5aM0M. பார்த்த நாள்: 7 October 2010. 
  17. Guy Flatley (24 July 2007). "The Rule of O'Toole". MovieCrazed. பார்க்கப்பட்ட நாள் 4 April 2008.
  18. Nathan Southern (2008). "Peter O'Toole profile". Allrovi. MSN Movies. Archived from the original on 10 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 4 April 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. "Model Karen Brown Somerville". December 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  20. Standing, Sarah (15 December 2013). "Remembering Peter O'Toole". GQ. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  21. "Peter O'Toole dies". The Gaurdian.com. பார்க்கப்பட்ட நாள் December 15, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Peter O'Toole
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஓ_டூல்&oldid=3857305" இலிருந்து மீள்விக்கப்பட்டது