ஜியார்ஜியோ அபெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியார்ஜியோ அபெட்டி
Giorgio Abetti
ஜார்ஜியோ அபெட்டி
பிறப்பு(1882-10-05)5 அக்டோபர் 1882
பதுவா, இத்தாலி
இறப்பு24 ஆகத்து 1982(1982-08-24) (அகவை 99)
பிரென்சி, இத்தாலி
தேசியம்இத்தாலி
துறைவானியல்

ஜியார்ஜியோ அபெட்டி (Giorgio Abetti, 5 அக்டோபர் 1882 – 24 ஆகத்து 1982) என்பவர் இத்தாலிய சூரிய வானியல் வல்லுநர் ஆவார்.[1]

இவர் அண்டோனியோ அபெட்டி எனும் பெயர்பெற்ற வானியலாளருக்கு மகனாகப் பிறந்தார். பதுவா, உரோம் பல்கலைக்கழகங்களில் பயின்று இயற்பியல்சார் அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]இவர் உதவி வானியலாளராக உரொமனோ கல்லூரி வான்காணகத்தில் பணியில் சேர்ந்தார். தன் தந்தைக்குப் பிறகு இவர் 1921இல் அர்கெட்ரி வான்காணகத்தில் இயக்குநராகி 1957 வரை அங்கு பணிபுரிந்தார். மேலும் அதே கால இடைவெளியில் ஃபுளோரன்சு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் 1957 வரை இருந்தார்.[1]

இவர் 1936இல் சைபீரியாவிலும் 1952இல் சூடானிலும் மேற்கொண்ட சூரிய ஒளிமறைப்பு ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றார். இவர் 1948–49இல் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தார். இவர் 1938இல் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 1915இல் இத்தாலியப் புவியியல் கழகத்தின்Medaglia d'argento விருதையும் 1925இல் இலின்சி கல்விக்கழகத்தின் Premio reale விருதையும் 1937இல் ஜான்சென் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.[1]

இவரது பெயரால் நிலாவின் ஒரு குழிப்பள்ளம் அபெட்டி குழிப்பள்ளம் என்றும் சிறுகோள் ஒன்று இவர் தந்தைபெயராலும் இவரது பெயராலும் 2646 அபெட்டி எனவும் பெயரிடப்பட்டுள்ளன.

சூரியனைப் பற்றிய மக்கள் அறிவியல் நூலொன்றையும் எழுதினார். வான் இயற்பியல் கைநூலை 1936 இல் வெளியிட்டார். வானியலின் வரலாறு குறித்த நூலொன்றையும் 1963 இல் வெளியிட்டார்.

நூல்தொகை[தொகு]

இவர் பல மக்கள் வானியல் நூல்களை இயற்றியுள்ளார்.

  • வானியற்பியல் கையேடு
  • விண்மீன் வெடிப்புகளும் பால்வெளிகளும்
  • சூரிய ஆராய்ச்சி
  • விண்மீன்களும் கோள்களும்
  • புடவியின் தேட்டம் (The Exploration of the Universe)
  • வானியல் வரலாறு (1952,ஆங்கிலப் பதிப்பு)
  • சூரியன் (1957)


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 G. Godoli ABETTI, Giorgio. Dizionario Biografico degli Italiani (in Italian)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியார்ஜியோ_அபெட்டி&oldid=3213932" இலிருந்து மீள்விக்கப்பட்டது