சித்திக் பார்மாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திக் பார்மாக்
பிறப்புசெப்டம்பர் 7, 1962 (1962-09-07) (அகவை 61)
ஆப்கானிஸ்தான்
பணிதிரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர்
வலைத்தளம்
www.barmakfilm.com

சித்திக் பார்மாக் (Siddiq Barmak) ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தியதி ஆப்கானித்தானில் பஞ்சசீர் எனும் இடத்தில் பிறந்தார். இவர் திரைப்படம் இயக்குவதில் மாசுக்கோ திரைப்படக் கல்லூரியில் (Moscow Film Institute) 1987 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சில திரைக்கதைகளை எழுதி சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது முதல் திரைபடம் ஒசாமா ஆகும். இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிநாட்டுப்படங்களுக்கான கோல்டன் குளோபு விருதைப் பெற்றது. சித்திக் பார்மாக் ஒசாமா திரைப்படம் எடுப்பதற்கு பெரும் ஊக்கத்தையும் உதவியையும் அளித்தவர் ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் ஆவார். இவர் தனது அரிபிளக்ஸ் (Arriflex) திரைப்படப் பிடிப்புக் கருவியை (camera) பார்மார்க்கிடம் கொடுத்து அவரது படத்தை பன்னாட்டுத் திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பும் படியும் ஆலோசனை வழங்கினார். மேலும் மக்மால்பஃப் அதிக அளவு நிதியையும் இத்திரைப்பட உருவாக்கத்தில் செலவளித்தார். சப்பான் மற்றும் அயர்லாந்து நாட்டு தயாரிப்பாளர்களும் நிதியுதவி செய்தனர்.[1] பார்மாக் 2003 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் பெலினி வெள்ளித் திரை விருதை (UNESCO’s Fellini Silver Medal) ஒசாமா திரைப்படத்திற்காக பெற்றார்.

சமூக நடவடிக்கைகள்[தொகு]

சித்திக் பார்மாக் மக்மால்பஃப்- ஆல் நிறுவப்பட்ட ஆஃப்கானிய குழந்தைகள் கல்வி அமைப்பின் (Afghan Children Education Movement (ACEM)) இயக்குனராகவும் உள்ளார். இந்த அமைப்பானது ஆஃப்கானிய குழந்தைகளுக்கு கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அளிக்கிறது. மேலும் இப்பள்ளியானது இயக்குநர்கள், நடிகர்கள் போன்றோருக்கு பயிற்சிகள் அளித்து புதிய ஆப்ஃகானிய திரைப்படத்தை உருவாக்க முயலுகிறது. சித்திக் பார்மாக் பாரசீக மொழித் திரைப்படத்தின் முக்கிய நபர் ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

  • பிகானா (Bigana - 1987) இயக்குனர்
  • ஒசாமா (Osama - 2003) இயக்குனர்
  • குர்பானி (Kurbani - 2004) தயாரிப்பாளர்
  • எர்த்து ஆண்டு ஆஷஸ் (புவியும் சாம்பலும்) (Earth and Ashes - 2004) இணை தயாரிப்பாளர்
  • ஓப்பியம் வார் (ஓப்பியம் போர்) (Opium War - 2008) இயக்குனர்
  • ஆப்பிள் பிரம் பேரடைசு (சொர்க்கத்தில் இருந்து ஆப்பிள்) (Apple from Paradise 2008) தயாரிப்பாளர்
  • நெய்பர் (அண்டை வீட்டார்) (Neighbor - 2009) தயாரிப்பாளர்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Meek, James (January 16, 2004). "Through the dark black smoke of war". London: The Guardian. http://www.guardian.co.uk/film/2004/jan/16/1. பார்த்த நாள்: 2010-10-31. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திக்_பார்மாக்&oldid=3367331" இலிருந்து மீள்விக்கப்பட்டது