கில்பர்ட் கெயித் செஸ்டர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி. கெ. செஸ்டர்டன்
G. K. Chesterton, by E. H. Mills, 1909.
G. K. Chesterton, by E. H. Mills, 1909.
பிறப்புGilbert Keith Chesterton
(1874-05-29)29 மே 1874
Kensington, London, England
இறப்பு14 சூன் 1936(1936-06-14) (அகவை 62)
Beaconsfield, Buckinghamshire, England
தொழில்பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர்
வகைபுனைவு, கிறித்தவ தன்விளக்கம், கிறித்தவ தன்விளக்கம், Mystery, கவிதை
கையொப்பம்

கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், (ஆங்கில மொழி: Gilbert Keith Chesterton 29 மே 1874 – 14 ஜூன் 1936) என்பவர் ஒரு ஆங்கிலேய எழுத்தாளரும்,[1] பொதுநிலை இறையியலாளரும், கவிஞரும், மெய்யியலாளரும், நாடக ஆசிரியரும், செய்தியாளரும், பேச்சாளரும், கிறித்தவ தன்விளக்க அறிஞரும் ஆவார். முரண்போலியின் இளவரசர் ("prince of paradox") எனப் பலராலும் இவர் அழைக்கப்பட்டார்.[2][3]

கிறித்தவ நெறிக்காகக் காரணத்தை விளக்கிய முறையினாலும், தந்தை பிரௌன்[4] என்னும் புனைவு மாந்தருக்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகின்றார். இவரோடு ஒத்தக்கருத்தில்லாதவர் கூட இவரின் படைப்புகளின் குறிக்கத்தக்கத்தன்மையினை ஏற்றுள்ளனர்.[3][5] அரசியல் கருத்துரையாளராய் இவர் பழைமைவாதம் மற்றும் முற்போக்குவாதம் ஆகிய இரண்டையும் குறைகூறினார். "தற்கால உலகு பழைமைவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள் என இரண்டாகப்பிரிந்துள்ளது. முற்போக்குவாதிகளுக்கு தவறுகள் செய்வதே தொழிலாக உள்ளது. பழமைவாதிகளுக்கு அத்தவறுகளை சரி செய்ய விடாமல் தடுப்பதே தொழிலாக உள்ளது." என்றார்.[6]

தன்னை அடிப்படைவாத கிறித்தவர் என அழைத்துக்கொண்ட இவர், இறுதி நாட்களில் ஆங்கிலிக்கத்திலிருந்து கத்தோலிக்க திருச்சபைக்கு மாறினார். இவரின் நண்பரான ஜார்ஜ் பெர்னாட் ஷா, இவரைப் பெரும் நுண்ணறிவாளர் எனப்புகழ்ந்துள்ளார்.[3] வரலாற்றாளர்கள் பலர் இவரை மேத்யு அர்னால்ட், தாமஸ் கார்லைல், கர்தினால் நியூமன், ஜான் இரஸ்கின் முதலியோரோடு ஒப்பிட்டு, அவர்களின் கலை வாரிசு இவர் எனப் புகழ்ந்துள்ளனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Obituary", Variety, 17 ஜூன் 1936 {{citation}}: Check date values in: |date= (help)
  2. Douglas, J. D. (24 மே 1974). "G.K. Chesterton, the Eccentric Prince of Paradox". Christianity Today. http://www.christianitytoday.com/ct/2001/augustweb-only/8-27-52.0.html?paging=off#bmb=1. பார்த்த நாள்: 8 ஜூலை 2014. 
  3. 3.0 3.1 3.2 "Orthodoxologist", Time, 11 அக்டோபர் 1943, archived from the original on 2013-05-23, பார்க்கப்பட்ட நாள் 2008-10-24.
  4. O'Connor, John. Father Brown on Chesterton, Frederick Muller Ltd., 1937.
  5. Douglas 1974.
  6. "The Blunders of Our Parties", Illustrated London News, 1924-04-19.
  7. Ker, Ian (2011). G. K, Chesterton: A Biography. Oxford University Press, p. 485.