ஐராவதம் மகாதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐராவதம் மகாதேவன்
பிறப்பு2 அக்டோபர் 1930
திருச்சிராப்பள்ளி
இறப்பு26 நவம்பர் 2018 (அகவை 88)
பணிமொழிபெயர்ப்பாளர், மொழியியலாளர்
விருதுகள்கலைகளுக்கான பத்மசிறீ
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்சிந்துவெளி வரிவடிவம்
நிறுவனங்கள்
தாக்கம் 
செலுத்தியோர்
க. அ. நீலகண்ட சாத்திரி

ஐராவதம் மகாதேவன் (அக்டோபர் 2, 1930 - நவம்பர் 26, 2018) பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் அக்டோபர் 2, 1930இல் திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார்.[3] இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

தொழில் முறை வாழ்க்கை[தொகு]

1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 - 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.[4] சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) மீதான ஆர்வம் அவரைக் கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.[5]

கோலாலம்பூர் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு[தொகு]

1966 ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார். கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை ஒட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.[5] அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார்.

சிந்து எழுத்துக்கள் பற்றிய ஆய்வு[தொகு]

1970-ஆம் ஆண்டு புகழ்பெற்ற சவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பது மகாதேவனின் கருத்து.[6].[7]

விருதுகள்[தொகு]

சூலை 8, 2001 அன்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் இடெட்ராட்டு நகரில் நடைபெற்ற ஆண்டு நாளன்று, ஐராவதத்திற்கு பேரவையின் "மாட்சிமைப்பரிசு" சிந்து நதி சமவெளி நாகரீகம் தமிழர்களுடையதுதான் என்பதனை ஆதாரப்பூர்வமாக நிறுவியதற்காக அளிக்கப்பட்டது.[சான்று தேவை] அவர் கிருமகன் இவருடைய சார்பில் பரிசைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.[8] இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[9]

எழுதிய நூல்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள்[தொகு]

  • The Indus Script : Texts, Concordance and Tables (1977)
  • Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)
  • Corpus of Tamil-Brahmi inscriptions (1966)
  • The Indus Script: Texts, Concordance and Tables (1977)[10]
  • Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D. (Harvard Oriental Series, 62) (2003)
  • Early Tamil Epigraphy : Tamil-Brahmi Inscriptions. Revised and Enlarged Second Edition: Volume 1 (en: Central Institute of Classical Tamil) (2014)[11]
  • Akam and Puram : 'Address' Signs of the Indus Script (2010)
  • Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study (2014)
  • Toponyms, Directions and Tribal Names in the Indus Script (Archaeopress) (2017)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராவதம்_மகாதேவன்&oldid=3792534" இலிருந்து மீள்விக்கப்பட்டது