எனிட் பிளைட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனிட் பிளைட்டன்
பிறப்புஎனிட் மேரி பிளைட்டன்
(1897-08-11)11 ஆகத்து 1897
கிழக்கு டல்விச், தெற்கு இலண்டன், இங்கிலாந்து
இறப்பு28 நவம்பர் 1968(1968-11-28) (அகவை 71)
ஹாம்ஸ்ட்டு, இலண்டன், இங்கிலாந்து
அடக்கத்தலம்கோல்டர்சு கிரீன் கிரிமேட்டோரியம்
புனைபெயர்மேரி போலாக்
தொழில்
  • புதின ஆசிரியர்
  • கவிஞர்
  • ஆசிரியர்
காலம்1922–1968
வகைசிறுவர் இலக்கியம்:
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • தி பேமசு பைவ்,
  • தி சீகரெட் செவன்
  • நோடி
துணைவர்
  • ஹூக் அலெக்சான்டர் போலக் (1924–1942)
  • கென்னத் பிராசர் டார்ரல் வாட்டர்சு (1943–1967)
பிள்ளைகள்
  • கில்லியன் பாவர்ஸ்டாக் (Gillian Baverstock)
  • இமோகன் சுமால்வுட்
இணையதளம்
www.enidblytonsociety.co.uk
எனிட் பிளைட்டனின் சுயசரிதம்

எனின் பிளைட்டன் (Enid Blyton) (ஆகஸ்ட் 11, 1897 - நவம்பர் 28 1968; ஐக்கிய இராச்சியம்) சிறுவர்களுக்காக கதைகள், கவிதைகள், நாடகம் போன்ற பல ஆக்கங்களை படைத்த ஓர் பிரபலமான எழுத்தாளர்.

பிளைட்டனின் புத்தகங்கள் இன்னமும் மிகவும் பிரபலமாக உள்ளன. அவரது புத்தங்கள் 90 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது முதல் படைப்பான "குழந்தை விஸ்பர்ஸ்", 24 பக்க கவிதைத் தொகுப்பு நூலாகும். இது 1922 ல் வெளியிடப்பட்டது. கல்வி, இயற்கை வரலாறு, கற்பனை, மர்மம் உட்பட பல பரந்த தலைப்புகளில் அவர் எழுதினார், அவரது புகழ்பெற்ற புத்தகங்களுள் முக்கியமானவை: தி பேமசு பைவ், தி சீகரெட் செவன், நோடி.

அவரது துவக்கப் புத்தகங்களின் (அட்வென்ச்சர்சு ஆப் விஷ்ஷிங் சேர் (1937), தெ என்ச்சேன்ட்டடு வுட் (1939) வணிகரீதியான வெற்றியைத் தொடர்ந்து ஒரு இலக்கியப் பேரரசை உருவாக்க முனைந்தார். இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் அவரது பங்களிப்புகளுடன் அவர் ஓராண்டில் 50 புத்தங்களையும் வெளியிட்டார். அவரது படைப்புகள் முன்திட்டமிடப்படாதவையாகவும், அவரது ஆழ்மனதுக் கருத்துக்களாக வெளிவந்தது. அவரது கருத்தில் தோன்றிய நிகழ்வுகளை அப்படியே அவர் கதைகளாக உருவாக்கினார்.

இளமைக் காலம்[தொகு]

எனிட் பிளைட்டன் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளாக ஆகஸ்ட் 11, 1897 ஆம் ஆண்டு தென் லண்டனில் உள்ள கிழக்கு டூல்விச்சில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் கரேலி பிளைடன் (1870-1920), ஒரு வெட்டு விற்பனையாளர் விற்பனையாளர் மற்றும் அவரது தாய் தெரேஸா மேரி. இவர்களது மூன்று குழந்தைகளில் எனிட் மூத்தவர். இவர்களது குடும்பம் கென்டில் உள்ள ஒரு கிராமமான பெக்கென்ஹாமிற்குக் குடிபெயர்ந்த பிறகு, எனிட்டின் இளைய சகோதரர்கள், ஹான்லி (1899-1983) மற்றும் கேரி (1902-1976) பிறந்தனர்.[1] லண்டனில் பிறந்த இவர் பாக்கிங்காம் எனும் லண்டன் புறநகர் பகுதியில் வளர்ந்தார்.

அவரது தந்தை அவருக்கு இயற்கையை ரசிப்பதில் இருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார். தனது சுயசரிதையில் அவர் "மலர்கள், பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை நேசித்தேன், மேலும் நான் சந்தித்த வேறு எந்த நபர்களை விடவும் நான் அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருந்தேன்" என்று எழுதினார்.[2] தோட்டக்கலை, கலை, இசை, இலக்கியம் மற்றும் நாடகக்கலையில் கொண்டிருந்த ஆர்வத்தைத் தன் மகளிடமும் ஊக்குவித்தார். இருவரும் பெரும்பாலும் இயற்கையில் நடைப்பயிற்சிக்கு சென்றனர். ஆனால் எனிட்டின் தாயாருக்கு இப்போக்கு பிடிக்கவில்லை.[3] மற்றொரு பெண்மணியுடன் வாழ தனது பதின்மூன்றாம் அகவையில் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை இவர்களின் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் வாழ வீட்டைவிட்டு வெளியேறியதால் எனிட் பெரிதும் பாதிக்கப்பட்டார். எனிட்டுக்கு அவரது தாயுடன் நல்லுறவு இல்லை. தனது பெற்றோரின் இறுதிச்சடங்கிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.[4]

பாடசாலை விடுதியில் தங்கிப் படித்தார். பாடசாலைக் கல்வியின் பின்பு முன் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இதன் பின்பு ஒரு வருடம் ஆசிரியராகவும் நான்கு வருடம் குழந்தைகள் பராமரிப்பவராகவும் பணிபுரிந்தார்.

திருமணத்தின் பின்பு[தொகு]

1924 ல் ஹக் பொலக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். முறையே 1931, 1935 ல் இரண்டு குழந்தைகளிற்குத் தாயானார். 1942 ல் பொலக்கை விவாகரத்து செய்த எனிட் பிளைட்டன் 1943 ல் கெனத் டரல் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

ஆக்கங்கள்[தொகு]

எனிட் பிளைட்டனுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு சிறுவர் சஞ்சிகையில் இவரின் முதல் படைப்பு பிரசுரமானது. பின்னா 1917 ல் என்னொரு கவிதை சஞ்சிகை (Nash's Magazine) ஒன்றில் பிரசுரமானது. 1921 அளவில் இவரின் கவிதைகளும் கதைகளும் அதிகமாக பிரசுரமாகத் தொடங்கியது. இவரின் முதலாவது கவிதைப் புத்தகமான சயில்ட் விஸ்பர்ஸ் (Child Whispers) 1922 ல் பிரசுரமானது. 1922 அளவில் தன்னை முழுமையாக கதைகள் புனைவதில் ஈடுபடுத்திக் கொண்டார். அன்றிலிருந்து 1964 வரை சுமார் 600 சிறுவர் புத்தகங்களை எழுதியதுடன் பல்வேறுபட்ட சஞ்சிகைகளில் பல ஆக்கங்களைப் படைத்தார். Famous Five, Secret Seven, Little Noddy series போன்ற புத்தகங்கள் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தன. இவரின் எழுத்துக்கள் பெருமளவில் இளம் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் இவரின் புத்தகங்கள் 20 ம் நூற்றாண்டில் பல தடவை மறுபிரசுரமானது.

எழுத்து நடை[தொகு]

எனிட் பிளைட்டனின் கதைகள் பொதுவாக மர்மக் கதைகளாகவோ அல்லது வீரதீரக் கதைகளாகவோ காணப்பட்டது. இவர் பயன்படுத்திய சொற் களஞ்சியத்தின் காரணமாக ஆரம்ப படிநிலை ஆங்கில மாணவர்கள்கூட இக்கதைகளை வாசிக்கக் கூடியதாக இருந்தது. கதைகளில் நல்ல மற்றும் கூடாத பாத்திரங்கள் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படுவதுடன் நன்னெறிகளைக் கற்பிப்பனவாகவும் உள்ளது.

மறைவு[தொகு]

கிழக்கு டுல்விச்சிலுள்ள அவரது சிறுவயது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நீலப்பலகை

கணவர் இறந்த சில மாதங்களில் எனிடும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு, அவரது இறப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நலப்பேணகத்தில் தங்கினார். வடக்கு இலண்டன், ஹம்சட்டிலுள்ள கிரீன்வேசு நலப்பேணகத்தில் நவம்பர் 28, 1968 ஆம் நாளில் மரணமடைந்தார்.

பிக்காடிலி புனித ஜேம்சு தேவாலயத்தில் அவருக்கு நினைவுக் கூட்டம் நடந்தது.[1]:{{{3}}} கோல்டர்சு கிரீன் கிரிமேட்டோரியத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டு, அங்கு அவரது சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. பிளைட்டனின் வீடு "கிரீன் ஹெட்ஜசு" 1971 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று ஏலத்திற்கு விடப்பட்டு, 1973 இல் இடிக்கப்பட்டது.[5] அந்த இடத்தில் தற்போது "பிளைட்டன் குளோசு" என்ற தெருவும் சில வீடுகளும் உள்ளன. 1920 முதல் 1924 வரை அவர் வாழ்ந்த செசிங்டனின் ஹூக் தெருவில் அவரது நினைவாக நீலப் பலகை வைக்கப்பட்டுள்ளது.[6] 1938 முதல் 1968 வரை பெக்கன்சுபீல்டில் வாழ்ந்தவர் என்ற செய்தி பதிக்கப்பட்டத் தகவற்பலகை 2014 இல் நகர்மண்டப தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. நோடி மற்றும் பிக் ஏர்சின் உருவச்சிலைகளுக்கு அருகில் அப்பலகை வைக்கப்பட்டுள்ளது.[7]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Chronology", Enid Blyton Society, பார்க்கப்பட்ட நாள் 23 January 2014
  2. "The Story of my Life". Grafton. 1952. ISBN 978-0-246-12795-2.
  3. Bensoussane, Anita, "A Biography of Enid Blyton – The Story of Her Life", Enid Blyton Society, பார்க்கப்பட்ட நாள் 25 January 2014
  4. "Treasure Islands: Studies in Children's Literature", year=2006, publisher=Four Courts Press, isbn=978-1-85182-941-5
  5. Stoney, Barbara (2011) [2006], Enid Blyton: The Biography (Kindle ed.), History Press, ISBN 978-0-7524-6957-7
  6. Commire, Anne; Klezmer, Deborah, eds. (2001), "Blyton, Enid (1897–1968)", Women in World History: A Biographical Encyclopedia, Gale Group, ISBN 978-0-7876-4072-9, archived from the original on 2014-06-11, பார்க்கப்பட்ட நாள் 2018-05-06 – via HighBeam {{citation}}: Unknown parameter |subscription= ignored (help)
  7. "Enid Blyton plaque unveiled in Beaconsfield", BBC News, 8 May 2014, பார்க்கப்பட்ட நாள் 8 May 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனிட்_பிளைட்டன்&oldid=3708238" இலிருந்து மீள்விக்கப்பட்டது