இறோகித்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறோகித்தோ / பேரரசர் சோவா
124ஆவது யப்பானியப் பேரரசர்
ஆட்சிடிசம்பர் 25, 1926 – ஜனவரி 7, 1989
முடிசூட்டு விழாடிசம்பர் 25, 1926
முன்னிருந்தவர்பேரரசர் தைசோ
பேரரசர் அக்கிகித்தோ
வாரிசு(கள்)சிக்கேகோ, இளவரசி தேரு
சச்சிகோ, இளவரசி இசா
கசுக்கோ, இளவரசி தாக்கா
அட்சுக்கோ, இளவரசி யோரி
அக்கிகித்தோ, இளவரசர் சூகு
  (முடிக்குரிய இளவரசர்)

மசாகித்தோ, இளவரசர் யோசி
  (இளவரசர் இத்தாச்சி)

தக்காக்கோ, இளவரசி சுகா
மரபுயப்பான் பேரரசு மாளிகை
தந்தைபேரரசர் தைசோ
தாய்பேரரசி தைமீ

இறோகித்தோ (Hirohito - ஏப்ரல் 29, 1901 – ஜனவரி 7, 1989) ஜப்பானின் 124 ஆவது பேரரசர் ஆவார். இவர் 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாளிலிருந்து 1989 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை பதவியில் இருந்தார். ஜப்பானுக்கு வெளியே இவரது சொந்தப் பெயரான இறோகித்தோ என்பதாலேயே பெரிது அறியப்பட்ட போதும், இறந்த பின்னர் ஜப்பானில் பேரரசர் சோவா என அழைக்கப்படுகிறார். ஜப்பானுக்கு வெளியிலும் அறிஞர்களால் இப் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சோவா என்பது ஒரு காலப்பகுதியின் பெயராகும். பேரரசர்களின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தும் காலப்பகுதிகளின் பெயர் அவர்கள் இறந்ததும் அவர்களுக்கும் பெயராகிறது.

சோவாவின் காலப்பகுதியே ஜப்பானின் எந்தப் பேரரசரின் காலப்பகுதியிலும் அதிகமானது ஆகும். இக் காலப்பகுதி ஜப்பானியச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காலப்பகுதியுமாகும். இவருடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் ஜப்பான் குறைந்த அளவு தொழிற்றுறைகளைக் கொண்ட நாட்டுப்புறப் பகுதியாகவே இருந்தது. 1930களில் நிகழ்ந்த ஜப்பானின் படைப்பெருக்கம், பின்னர் அந்நாட்டை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்த வழி வகுத்தது. போரின் முடிவில் ஜப்பான் தோல்வியுற்று நிபந்தனையற்ற முறையில் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட ஜப்பான் நாட்டின் மீளமைப்பு வேலைகளில் பேரரசர் ஒத்துழைப்பு வழங்கித் தனது காலத்திலேயே ஜப்பான் பெருமளவு நகராக்கம் அடைந்த ஒரு நாடாகவும்; தொழிற்றுறை, தொழினுட்பம் ஆகியவற்றில் உலகின் மிகப் பெரிய வல்லரசுகளில் ஒன்றாகவும் விளங்கியதைக் காணும் வாய்ப்புப் பெற்றார்.

இளமைக்காலம்[தொகு]

இவர், முடிக்குரிய இளவரசராக இருந்த யொசிஹிட்டோவுக்கும் (பிற்காலப் பேரரசர் தைஷோ), முடிக்குரிய இளவரசி சடாக்கோவுக்கும் (பிற்காலப் பேரரசி தெய்மீ) மூத்த மகனாக டோக்கியோவில் இருந்த ஒயாமா அரண்மனையில் பிறந்தார். இவரது சிறு வயதுப் பட்டம் மிச்சி ஆகும். இவரது பாட்டனான பேரரசர் மீஜி 1912 ஜூலை 30 ஆம் தேதி இறந்தபோது இவர் முடிக்குரிய இளவரசரானார். இதற்கான முறைப்படியான நிகழ்ச்சி 1916 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இடம்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறோகித்தோ&oldid=2713036" இலிருந்து மீள்விக்கப்பட்டது