ஆஸ்திரேலியா நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலியா நாள்
Australia Day
பிற பெயர்(கள்)நிறுவன நாள், நினைவு நாள்
கடைபிடிப்போர்ஆஸ்திரேலியர்களால் பொது விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது
முக்கியத்துவம்1788 இல் முதன் முதலாக ஜாக்சன் துறையில் ஆங்கிலேயர் வந்திறங்கியமை
அனுசரிப்புகள்அணிவகுப்புகள், குடியுரிமை வழங்கும் வைபவம், Order of Australia, ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியர் விருதுகள் வழங்கல்
நாள்ஜனவரி 26
தொடர்புடையனஅன்சாக் நாள்
Australia Day Picnic, Brisbane, 1908

ஆஸ்திரேலியா நாள் (Australia Day), என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரித்தானியக் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூரும் முகமாக கொண்டாடப்படுகிறது. 1788 இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ், ஜாக்சன் துறையில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.

முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்[1]. 2004 ஆண்டில், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Australia Day History". Australia Day Council of New South Wales. Archived from the original on 2010-10-19. பார்க்கப்பட்ட நாள் 2007-10-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரேலியா_நாள்&oldid=3834595" இலிருந்து மீள்விக்கப்பட்டது