அப்துல்லா பின் அப்துல் அசீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அப்துல்லா பின் அப்துல் அசீஸ்
Abdullah bin Saud
சௌதி அரேபிய மன்னர்
ஆட்சி1932 - 1953
சௌத் பின் அப்துல் அசீஸ்
மரபுசௌதி இல்லம்

அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் அல் சௌத், சௌதி அரேபிய அரசர்(Abdul Aziz Al Saud) (1876[1]நவம்பர் 9, 1953) (அரபு மொழி: عبد العزيز آل سعود‎) சவுதி அரேபியா என அறியப்படும் மூன்றாம் சௌதி அரசின் முதல் அரசர் ஆவார்.அவர் ரியாத் நகரில் வகாபி இசுலாமிய இயக்கத்தை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றிய சௌதி மரபில் வந்த குடும்பத்தில் (House of Su'ūd) பிறந்தார்.இவரது குடும்பம் சௌதியின் உள்நாட்டு நிலப்பகுதியான நெய்ட்டில் ஆண்டு வந்தார்கள்.1902இல் தமது பரம்பரை சொந்த ஊரான ரியாத்தை மீட்ட பிறகு பின் சௌத் 1922 ஆம் ஆண்டு நெய்ட்டை மீண்டும் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.ஹெஜாஸ் பகுதியை 1925ஆம் ஆண்டு வெற்றி கொண்டார்.1932ஆம் ஆண்டு தாம் வெற்றிகொண்ட பகுதிகளை ஒன்றிணைத்து இன்றைய சவுதி அரேபியாவை நிறுவினார்.அவரது ஆட்சியில் 1938ஆம் ஆண்டு பாறைநெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சௌதியின் பொருளியல் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டார்.

அவர் பின் அரசாட்சி செய்த மன்னர்கள் உட்பட அப்துல் பின் சௌத்திற்கு பல (50 ?) குழந்தைகள் பிறந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அப்துல் அசீஸ் பிறந்த ஆண்டு குறித்து விவாதமுள்ளது.பெரும்பான்மையவர் 1876 என்று உடன்பட்டாலும் சிலர் 1880 என்று கருதுகின்றனர்.ராபர்ட் லாசே (Robert Lacey)யின் புத்தகம் "The Kingdom" என்பதில் 1876 என்பதற்கு ஆதாரமாக முதன்மை சௌதி வரலாற்றாளர் ஒருவர் 1891இல் அப்துல் அசீஸ் ஓர் மலைவாழ் குழுவினை வரவேற்றதைக் கொண்டு ஒன்பது அல்லது பத்து வயது சிறுவன் அத்தகைய முக்கிய சந்திப்பிற்கு அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டான் என்றும் 1876 எனில் 14/15 வயதில் வாய்ப்பு கூடுதல் என்றும் கட்டமைக்கிறார். மற்றொரு காரணமாக,பின்னாளில் பின் சௌதின் மகன் ஒருவருடன் கண்ட நேர்முகத்தில் அவர் தமது தந்தை அவரது பிறந்த ஆண்டை 1880 என்று காட்டும் ஆவணங்களைக் கண்டு "எனது வாழ்வின் நான்காண்டுகளை விழுங்கிவிட்டேன்" என அவர் சிரித்ததாகவும் குறிப்பிடுகிறார்.

வெளியிணைப்புகள்[தொகு]

  • Time Magazine, July 3, 1939. "Semitic Friends". Archived from the original on டிசம்பர் 14, 2008. பார்க்கப்பட்ட நாள் July 29, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  • Time Magazine, May 26, 1941. "The Battle Joins". Archived from the original on மே 22, 2010. பார்க்கப்பட்ட நாள் July 25, 2009. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)