அசீமா சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசீமா சாட்டர்ஜி
অসীমা চট্টোপাধ্যায়
பிறப்பு(1917-09-23)23 செப்டம்பர் 1917
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு22 நவம்பர் 2006(2006-11-22) (அகவை 89)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
துறைகரிம வேதியியல், தாவர மருந்தியல்
பணியிடங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்

அசீமா சாட்டர்ஜி (Asima Chatterjee) (வங்காள மொழி: অসীমা চট্টোপাধ্যায়) (23 செப்டம்பர் 1917 – 22 நவம்பர் 2006) ஓர் இந்திய வேதியியலாளர். இவர் கரிம வேதியியலிலும் நிலைத்திணைசார் (தாவர) மருந்தியலிலும் கணிசமான பங்களிப்பு செய்துள்ளார்.[1] இவரின் குறிப்பிடத்தகு பணி வின்சா ஆல்கலாயிடுகளிலும் கைகால் வலிப்புத் தடுப்பு, மலேரியக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளிலும் அமைந்தது. இவர் இந்தியத் துணைக்கண்ட மூலிகைகள் ஆய்வில் பெரும்பணி ஆற்றியுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

இளமை[தொகு]

அசீமா சாட்டர்ஜி (நேயி முகர்ஜி) முந்தைய வங்காள மாகாணத்தில் 1917 செப்டம்பர் 23 இல் பிறந்தார் (நேயி முகர்ஜி).[2] இவர் கொல்கத்தாவில் பள்ளிக்கல்வியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழக இசுகாட்டிழ்சு கல்லூரியில் சேர்ந்து வேதியியலில் தகவுறு மாண்போடு 1936 இல் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.[3][4]

கல்விப்பணி[தொகு]

இவர் 1938 இல் வேதியியல் முதுவர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்டம் தாவரப் பொருள்களிலும் செயற்கைக் கரிம வேதியியலிலும் பெற்றுள்ளார். அப்போது அங்கே பிரஃபுல்லா சந்திர ராயும் பெர்ர. எஸ்.என். போசும் இவரின் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். கூடுதலாக இவர் மடிசனில் உள்ள வில்கான்சின் பல்கலைக்கழகத்திலும் கால்டெக்கிலும் ஆய்வுப் பட்டறிவும் பெற்றவர் ஆவார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சீமாட்டி பிரபவுர்ன் கல்லூரியில் 1940 இல் வேதியியல் துறையின் நிறுவனத் தலைவராகச் சேர்ந்தார். இவர் 1940 இல் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றால் முதன்முதலாக அறிவியலில் முதுமுனைவர் பட்டம் பெற்ற பெண்மணியானார்.[1] இவர் 1954 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக தூய வேதியியல் துறையில் சேர்ந்தார்.இவர் 1962 இல் அப்பல்கலைக்கழகத்தின் தகைமைசான்ற கைரா வேதியியல் பேராசிரியர் பதவியை ஏற்றார், இப்பதவியில் இவர் 1982 வரைதொடர்ந்து இருந்தார்.[1]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரேம்சந்த் இராய்சந்த் புலமையாளர் ஆவார்.[4]
  • இவர் ஓர் இந்தியப் பல்கலைக்கழகத்தால், அதாவது கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் ஜானகி அம்மாளுக்குப் பின்னர் இரண்டாவதாக அறிவியலில் முதுமுனைவர் பட்டம் 1944 இல் வழங்கப்பட்டவர்.[1]
  • இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பெருமைசால் கட்டிலான கைரா வேதியியல் பெராசிரியராக 1962 முதல் 1982 வரை பதவி வகித்தார்.[1]
  • இவர் 1972 இல் இந்திய பல்கலைக்கழக நல்கை ஆணையத்தால் ஒப்பளிக்கப்பட்ட இயற்கைப் பொருள் வேதியியலில்செறிந்த பயிவிப்பும் ஆய்வும் மேற்கொள்ள நல்கிய சிறப்புதவித் திட்ட்த்தின் தகைமைசால் ஒருங்கிணைப்பாளராக அமர்த்தப்பட்டார்.[1]
  • இவர்1960இல் புது தில்லி, இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[1]
  • இவர் 1961 இல் வேதியியலுக்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருதைப் பெற்றார். இவரே இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணியாவார்.[1]
  • இவர் 1975 இல் ப்ருமைசான்ர பத்மப் பூழ்சன் விருதைப் பெற்றார். மேலும் இவரே இந்திய அறிவியல் பேர்ராயக் கழகத்தின் பொதுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அறிவியலாளரும் ஆவார் .[1]
  • பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு அறிவியலில் தகவுறு முதுமுனைவர் பட்டத்தை வழங்கின.[1]
  • இவர் 1982 பிப்ரவரி முதல் 1990 மே வரை இந்தியக் குடியரசுத் தலைவரால் இராச்சியச் சபையின் உறுப்பினராக அம்ர்த்தப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 The Shaping of Indian Science. p. 1036. Indian Science Congress Association, Presidential Addresses By Indian Science Congress Association. Published by Orient Blackswan, 2003. ISBN 978-81-7371-433-7
  2. Mention of the maiden name
  3. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume Scottish Church College, 2008, p. 584
  4. 4.0 4.1 "Chemistry alumni of Scottish Church College". Archived from the original on 2009-04-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீமா_சாட்டர்ஜி&oldid=3768121" இலிருந்து மீள்விக்கப்பட்டது