தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
| தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி National Institute of Technology, Tiruchirappalli |
|
|---|---|
| நிறுவிய நாள் | 1964 |
| வகை | தேசிய தொழில்நுட்ப கழகங்கள் |
| துறை | 246[1] |
| மாணவர்கள் | 3,457 |
| பட்ட மாணவர்கள் | 2,190[1] |
| உயர் பட்ட மாணவர்கள் | 1,267[1] |
| அமைவிடம் | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
| வளாகம் | 800 ஏக்கர்கள் |
| இணையத்தளம் | www.nitt.edu |
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (National Institute of Technology, Tiruchirappalli, NITT), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் மண்டலப் பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி (Regional Engineering College, REC) என அழைக்கப்பட்டது.
அமைவிடம்: இக்கழகம் திருச்சியிலிருந்து, தஞ்சாவூர் செல்லும் சாலையில் இருக்கும், துவாக்குடி என்னும் திருச்சியின் புறநகர் பகுதியில் உள்ளது.
தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களை உருவாக்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது[2]. நாடு முழுவதிலும் உள்ள 18 தேசிய தொழில்நுட்ப கழகங்களில் இதுவும் ஒன்றாகும். ஏறத்தாழ 3,400 மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர்[1].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "NITT at a Glance". NITT. பார்த்த நாள் 2010-04-29.
- ↑ "History of the Institute". NITT. பார்த்த நாள் 2010-04-28.
வெளி இணைப்புகள் [தொகு]
- Official website
- RECAL website - the alumni association of NITT
- கூகுள் வரைபடம்