அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி
| அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி | ||
|---|---|---|
| வகை | Partially featural alphabet | |
| மொழிகள் | Used for phonetic and phonemic transcription of any language | |
| காலக்கட்டம் | 1888 to the present | |
| மூல முறைகள் | Romic alphabet → Phonotypic alphabet → அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி |
|
| குறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம் | ||
அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உலகில் பேசப்படும் மொழிகளின் பலுக்கல்களை (ஒலிப்புகளை) ஒரு சீர் முறையின் கீழ் எழுதுவதற்காக இலத்தீன் அரிச்சுவடியை மையமாகக் கொண்டு அனைத்துலக பலுக்கல் குழுமத்தால் ஆக்கப்பட்ட முறைமை ஆகும்.[1] அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி அந்நிய மொழி கற்கும் மாணவர்கள், அதை கற்பிக்கும் ஆசிரியர்கள், மொழியியலாளர்கள், பேச்சுப் பயிற்சி அளிப்பவர்கள், பாடகர்கள், நடிகர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகரமுதலி ஆக்கர்கள் போன்றோரால் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பில் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்கள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[1] பேசும் போது இருக்கவேண்டிய பற்களின் நிலை, நாவின் நிலை போன்றவற்றைக் குறிக்க அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி நீட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.[2]
2007 ஆண்டின் படி 107 எழுத்துக்களும் 56 குறியீடுகளும் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியில் காணப்படுகின்றன. எழுத்துக்களின் இணைப்போ அல்லது நீக்கமோ அனைத்துலக பலுக்கல் குழுமத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 International Phonetic Association (IPA), Handbook.
- ↑ 2.0 2.1 MacMahon, Michael K. C. (1996). "Phonetic Notation". in P. T. Daniels and W. Bright (eds.). The World's Writing Systems. New York: Oxford University Press. pp. 821–846. ISBN 0-19-507993-0.
- ↑ Wall, Joan (1989). International Phonetic Alphabet for Singers: A Manual for English and Foreign Language Diction. Pst. ISBN 1877761508. http://www.amazon.com/International-Phonetic-Alphabet-Singers-Language/dp/1877761508.