செப்டம்பர் 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(9 செப்டம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 252வது நாளாகும். நெட்டாண்டுகளில் 253வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1493 - ஒட்டோமான் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரொவேசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
- 1513 -ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
- 1543 - மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.
- 1791 - அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.
- 1799 - பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
- 1839 - அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.
- 1839 - ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.
- 1850 - கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
- 1922 - கிரேக்க-துருக்கி போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
- 1924 - ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் குரோவ் நகர் மீது நாசி ஜெர்மனியர் குண்டுகளை வீசித் தாக்கினர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டு வீசியது.
- 1944 - பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத் சார்பு அரசு பதவியேற்றது.
- 1945 - இரண்டாவது சீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.
- 1954 - அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
- 1965 - சூறாவளி பெட்சி நியூ ஓர்லியன்சில் இரண்டாவது தடவை தரைதட்டியதில் ஏற்படுத்தியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். $1.42 பில்லியன் சேதமடைந்தது.
- 1970 - பிரித்தானிய விமானம் பாலஸ்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
- 1990 - சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.
- 1993 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.
- 2001 - ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.
- 2004 - இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1899 - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர், (இ. 1954)
- 1967 - அக்சே குமார், இந்திய நடிகர்
இறப்புகள் [தொகு]
- 1087 - முதலாம் வில்லியம், இங்கிலாந்தின் மன்னன்
- 1947 - ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (பி. 1877)
- 1976 - மாவோ சே துங், சீனாவின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (பி. 1893)
- 2003 - எட்வர்ட் டெல்லர், ஐதரசன் குண்டைக் கண்டுபிடித்தவர், அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1908)
- 2005 - இளையபெருமாள், தலித் தலைவர் (பி. 1924)
- 2011-பழம்பெரும் தமிழ் நடிகை காந்திமதி
சிறப்பு நாள் [தொகு]
- தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)
- வட கொரியா - குடியரசு நாள் (1948)